கல்லீரலை "காக்கும்" காவலன்.. கல்லீரல் சுத்தமாக பெஸ்ட் ஜூஸ்.. இந்த 5 பொருட்களை மட்டும் நோட் பண்ணுங்க
சென்னை: நம்முடைய உடலின் மிகப்பெரிய உறுப்பான கல்லீரலை காக்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்னென்ன உணவுகளை நாம் கட்டாயம் சாப்பிட வேண்டும் தெரியுமா?
உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி, மொத்த உறுப்புகளின் சீரான செயல்பாட்டை நிர்வகிக்க, பல புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் பணியை செய்வதே இந்த கல்லீரல் தான்.. ரத்தத்தை சுத்தப்படுத்துவதும் இந்த கல்லீரல்தான்.. புரதத்தை உருவாக்குவதும் இந்த கல்லீரல்தான்..

சிறுநீரகம்: சிறுநீரகம், கண்கள் போன்ற உறுப்புகளைகூட மாற்றிவிடலாம்.. ஏன், இதயத்தைகூட மாற்றிவிடலாம்.. ஆனால், கல்லீரல் கெட்டுவிட்டால், உயிருக்கே ஆபத்து. எப்போதுமே, கல்லீரலில் எந்த பிரச்சனையாக இருந்தாலும், 70 சதவீதம் பாதிக்கப்பட்ட பிறகே வெளியே தெரியவரும்.. அதனால்தான், பேராபத்து என்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே வழி, கல்லீரலை பத்திரமாக பாதுகாத்து வைத்து கொள்வதுதான்.
இதற்கு 2 வழிகள் உள்ளன.. ஒன்று, கல்லீரலுக்கு பலத்தை தரக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். மற்றொன்று, கல்லீரலுக்கு தொந்தரவுக்கு தரும் உணவுகளை தொடவே கூடாது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்: மதுபானம், சிவப்பு இறைச்சி, உப்பு, சர்க்கரை, இனிப்பு அதிகம் நிறைந்த உணவுகள், பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு, வெள்ளை மாவில் செய்யப்படும் ரொட்டி, பீட்சா, பாஸ்தா போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.
சேர்க்க வேண்டிய உணவுகள்: திராட்சை, இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட், எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள், ஆப்பிள் சீடர் வினிகர், கீழாநெல்லி, மீன், முட்டை, முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர், க்ரீன் டீ போன்றவற்றை அதிகம் சேர்த்த கொள்ளலாம்.
இதில், பீட்ரூட் மிக முக்கியமானதாகும்.. ரத்த சோகையை நீக்குவதில் பெரும் பங்கு வகிப்பதுடன், சருமத்திற்கும் மிகவும் பாதுகாப்பானது.. அதுமட்டுமல்ல, கல்லீரலின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கக்கூடிய பண்புகள் இந்த பீட்ரூட்டில் உள்ளதுடன், கல்லீரல் நொதிகளை ஊக்கப்படுத்துகிறது.. மேலும், கல்லீரலை சுத்திகரிக்கிறது.
கிரீன் டீ-யை குறைந்தது 2 வேளையாவது குடிக்க வேண்டும். லிப்பிட் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதுடன், கல்லீரலில் லிப்பிட்கள் சேருவதை இந்த கிரீன் டீ தடுக்கிறது.
கல்லீரல் அபாயம்: அக்ரூட் பருப்பையும் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும். காரணம், ஒமேகா 3 கொழுப்பு இந்த பருப்பில் உள்ளதால், கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடியது.. கல்லீரலை சரியாக செயல்பட வைக்கவும், கொழுப்பு கல்லீரல் உருவாகும் அபாயத்தை குறைப்பதனாலும்தான், அக்ரூட் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல மணமுள்ள உணவான பூண்டு, வெங்காயம் போன்ற போன்றவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்.. இந்த பொருட்களில் உள்ள சல்ஃபர்தான் மணம் உருவாக அடிப்படை காரணமாகும்.. சல்ஃபர், கல்லீரலில் என்ஸைம் உற்பத்திக்கு அடித்தளமாகிறது.. நம்முடைய உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு கல்லீரலுக்கு தேவையானது இந்த என்ஸைம்கள்தான் என்பதை மறுக்க முடியாது. முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றிலும் சல்ஃபர் நிறைய இருக்கின்றன.
நச்சுக்கள்: திராட்சைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன.. திராட்சையில் உள்ள நாரின்ஜெனின் (Naringenin) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், கல்லீரல் கொழுப்பை நீக்க பெரிதும் துணைபுரிகிறது.
அதேபோல, கேரட், வெள்ளரிக்காய், ஆப்பிள் இந்த மூன்றையும் சேர்த்து ஜூஸாக்கி, எலுமிச்சம் சாறு பிழிந்து குடித்து வரவேண்டும். இதனால் கல்லீரல் சுத்தமாகிவிடும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications