குளிக்க போறீங்களா? "இதை" மட்டும் சாப்பிடக்கூடாது..எந்த நேரத்தில் குளிக்கலாம் தெரியுமா? ஹெல்த் டிப்ஸ்
சென்னை: முன்னோர்கள் எல்லாம் மூடர்கள் அல்ல.. ஒவ்வொரு விஷயத்துக்கும், ஒவ்வொரு காரணங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள்.. அப்படித்தான் இந்த குளியல் சமாச்சாரமும்.
பொதுவாக, உணவு சாப்பிட்டதுமே குளிக்க கூடாது என்று சொல்வார்கள்.. இதற்கு அறிவியல் காரணம் நிறையவே உள்ளது.. நாம் குளிக்கும்போது, நம்முடைய உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சி பெறுகிறது..

சருமம்: மேலும் சருமத்திலுள்ள அழுக்குகளும் வெளியேறுகின்றன.. அப்படி அழுக்குகள் வெளியேறும்போது, உடலுக்குள் உள்ள செல்கள் ஆற்றல் பெறுகின்றன.. அதனால்தான், நாம் குளித்ததுமே, பசி உணர்வு தோன்றுகிறது.
ஆனால், சாப்பிட்டதுமே நாம் குளித்தால், உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காமல் போய்விடுமாம்.. இதனால் சாப்பிட்டதும் ஜீரணமாகாது.. மேலும், மலச்சிக்கல், உள்ளிட்ட வயிறு சம்பந்தப்பட்ட தொந்தரவுகளும் வரக்கூடும்.. அதனால்தான், சாப்பிட்ட பிறகு குளிக்கக்கூடாது என்கிறார்கள். குளித்துவிட்டு சாப்பிடும்போது, உணவில் உள்ள சத்துக்கள் உடலில் உறிஞ்சப்பட்டு, ஆற்றலாக பெற்றுக்கொள்கிறது.
குழப்பம்: அதேபோல, எந்த நேரத்தில் குளிப்பது என்ற குழப்பமும் பலருக்கு உண்டு.. காலையில் குளிப்பது சிறந்ததா? இரவில் குளிக்கலாமா? என்றெல்லாம் சந்தேகம் உண்டு.
காலையில் குளிப்பதை விட, இரவில் குளிப்பதுதான், அதிக பலன்களை கொண்டிருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.. அதாவது தூங்க செல்வதற்கு முன்பு குளிப்பது, சருமத்துக்கு மிகவும் நல்லதாம்.. அழுக்கு, வியர்வை போன்ற எதுவுமே சருமத்தில் படியாது.. ஆழ்ந்த தூக்கத்தை தரும்.. உடலில் வெப்பநிலை சீராக இருக்கும்.. சருமம் சார்ந்த பிரச்சினைகளிலிருந்தும் விடுபடலாம். தோல் அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு.
உடற்பயிற்சி: காலையில் குளித்து விட்டு, அன்றாட வேலைகளையும் நாம் மேற்கொள்ளும்போது, உடல் வெப்பநிலை அதிகரிக்கும். எனினும், உடற்பயிற்சிகளை செய்பவர்கள், பயிற்சியை முடித்துவிட்டு கட்டாயம் குளிக்க வேண்டும். அப்போதுதான் உடல் வெப்பநிலை இயல்புக்கு திரும்புமாம்..
காலை குளியல் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வையும்,உத்வேகத்தையும் கொடுக்கும் என்றால், இரவில் தூங்க செல்வதற்கு முன்பும் குளிப்பது அதற்கு மேல் பலனை தருகிறது. ஆக மொத்தம், 2 வேளைகளிலும் குளிக்கலாம் என்றாலும், இரவில் குளிப்பது சற்று கூடுதல் பலனை தருகிறதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications