இத்துனூண்டு வெல்லம்.. இடுப்பில் கொழுப்பை கரைத்து.. அடடே, தயிருடன் இதை சாப்பிட்டால் வெயிட் குறையுதாமே
சென்னை: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் தயிர், வெல்லம் இரண்டும்தான் என்கிறார்கள்.. தித்திப்பு நிறைந்த வெல்லம், உடல் எடையை குறைக்குமா? உடலிலுள்ள கொழுப்பை கரைப்பதில், தயிர், வெல்லத்தின் பங்கு என்ன?
எப்போதுமே, உடல் எடையை குறைப்பவர்களும், அல்லது உடல் எடையை சீராக பராமரித்து வருபவர்களும் நீலநிற பழங்கள், நீலநிற காய்களை இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்கிறார்கள்.

நாவல்பழம்: திராட்சை, நாவல்பழம், பிளம்ஸ்பழம், கத்தரிக்காய் போன்றவற்றில், வைட்டமின் C, நார்ச்சத்துக்கள் உள்ளன.. இதனால் கெட்ட கொழுப்பை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமானத்துக்கும் உதவி செய்கிறது.
இந்த இரண்டு கலர்களில் இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களில் ஆன்டிஆக்சிடெண்டுகள் நிரம்பியுள்ளன.. ரத்த அழுத்தத்தை முறைபடுத்தவும் இதய நோய் வராமல் தடுக்கவும் இவை பேருதவி புரிகிறது. எனவே, ப்ளூபெரி, கருப்பு திராட்சை, ஊதா நிற முட்டைகோஸ், கத்தரிக்காயை உங்கள் டயட் சார்ட்டில் கட்டாயம் சேர்த்துக்கொண்டால் பலன் கிடைக்கும்.
உடல் எடை: அதேபோல, உடல் எடையை குறைக்க வேண்டுமானால், தயிர் + வெல்லம் இரண்டையும், காபி அல்லது டீக்கு பதிலாக ஏதாவது ஒருவேளை எடுத்துக் கொள்ளலாம். அதாவது தயிருடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வருவதால் உடலின் எடை வெகுவாக குறையும். அதிலும், வெல்லம் வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது
தயிரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. கால்சியம் அதிகமாக உள்ளது. தெர்மோஜெனீசிஸின் செயல்முறையை அதிகரிக்க கால்சியம் உதவுகிறது.. வளர்சிதை மாற்றத்தையும் அதிகரித்து, உடலில் இருந்து தேவையற்ற எடையை குறைக்க செய்கிறது.
அதனால்தான், தயிர் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை எப்போதுமே சீராக காணப்படும்.. தினமும் ஒரு கப் தயிர் அளவுடன் சாப்பிடுதால், ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கலாம்.
வெல்லம்: வெல்லத்தை எடுத்துக்கொண்டால், மிகச்சிறந்த ஆன்டி அலர்ஜிக் ஆகும்.. ஏகப்பட்ட பொட்டாசியம் உள்ளது.. கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் சத்துக்கள் உள்ளன. வெல்லத்தில் ஒருவித நீர்ப்புத் தன்மை இருப்பதால், இதை தினமும் சாப்பிட்டு வருவதால், உடல் எடை கூடாது, அத்துடன், உடல் சமச்சீர் அடைந்துவிடும்.
அதேபோல, வெல்லத்தில் நார்ச்சத்து நிறைய உள்ளது. குடல், நுரையீரல் பகுதியை சுத்தம் செய்வதற்கு, சிறுதுண்டு வெல்லம் போதும்.. தித்திப்பு என்றாலும், சர்க்கரையைவிட, வெல்லத்தில் குறைந்த அளவு கலோரிகள் இருக்கின்றன. எனவே, தயிர், வெல்லம் இந்த கலவையை சாப்பிடும்போது, சற்று மிளகையும் சேர்த்து கொண்டால், கூடுதல் பலன் கிடைக்கும்.
கொழுப்புகள்: உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க இந்த கலவை உதவும்.. வயிற்றுப்பகுதியை சுற்றியுள்ள கொழுப்புகளும் கரைந்துவிடும். குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் வலிகளை போக்க இந்த வெல்லம், தயிர் கலந்த கலவை மிகவும் நல்லது. இதனால் அனீமியா பிரச்சனையும் நீங்கும்.. வயிற்றில் வாயு, அமிலத்தன்மை போன்ற உபாதைகளும் சீராகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications