ஆட்டுக்கறி எடுக்கறீங்களா? ஆண்களே, ஆட்டு மூளையை விட்றாதீங்க.. மட்டனில் உள்ள அபார சத்துக்களை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மட்டனில் ஒவ்வொரு பாகமும் உடலுக்கு நன்மையை தரக்கூடியவை. அந்தவகையில், ஆட்டு மூளையிலுள்ள நன்மைகள் என்னென்ன? யார் யார் இந்த ஆட்டு மூளையை சாப்பிடலாம் தெரியுமா? இதோ குட்டி டிப்ஸ்.

சமீபத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், நிறைவுற்ற கொழுப்பு இதய நோய் அபாயத்தை ஏற்படுத்துவதால், நிறைவுறா கொழுப்பு என்று கூறப்படும் அன்சேச்சுரேட்டட் ஃபேட்ஸ், உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்வதாக தெரிவித்திருந்தது. இந்த நிறைவுறா கொழுப்புகள்தான் ஆட்டுக்கறியில் அதிகமாகவே உள்ளன.

mutton mutton brain goat brain

எனவே, மட்டனை சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டிருந்தது. அதேபோல இன்னொரு ஆய்வில், மட்டனில் பொட்டாசியம் அதிகமாக நிறைந்திருப்பதுடன், சோடியம் அளவு குறைவாகவே இருப்பதாகவும், இதனால், உடலில் பொட்டாசியம், சோடியம் அளவுகளை ஒரே அளவில் நம்மால் பராமரிக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தது.

சரும பிரச்சனைகள்: எனவே, உடல் சூட்டினை தணிக்கக்கூடிய மட்டன், சரும பிரச்சனைகளையும் நம்மிடம் நெருங்குவதில்லை.. கண் கோளாறுகளையும் சரிசெய்கிறது. ஆட்டுக்கறியில் வைட்டமின் B12, நியாசின், இரும்பு, செலினியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன. அதிலும், B12 நியூரான்கள், நம்முயைட ரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்கிறது. செலினியம் நோயெதிர்ப்பு அமைப்பு, வளர்சிதை மாற்றம், தைராய்டு செயல்பாட்டைத் தூண்டுகிறது, நியாசின் உணவை ஆற்றலாக மாற்ற துணைபுரிகிறது.

மற்ற இறைச்சி வகைகளோடு ஒப்பிடும்போது, மட்டனில் இரும்பு சத்துக்களும் அதிகம். 100 கிராம் மட்டனில் சுமார் 3.8 மி.கி.இரும்புச்சத்து உள்ளதால், நமக்கு தேவைப்படும் B12-ல், 32 சதவீதம் இந்த மட்டனிலேயே பெற்றுவிடலாம்.

கொழுப்புகள்: அந்தவகையில் ஆட்டின் ஒவ்வொரு பாகமும் நமக்கு நன்மையை தருகின்றன.. இதில், ஆட்டு மூளையை பொறுத்தவரை, சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாகவே உள்ளன. அதனால், உடலில் எந்த நோயும் இல்லாத ஆரோக்கியமாக உள்ளவர்கள், மாதம் ஒருமுறை ஆட்டு மூளையை "குறைந்த அளவு" சாப்பிடலாம்.

கிட்னியில் உள்ள கழிவுகளை நீக்கி, நினைவாற்றலை பெருக்க இந்த ஆட்டு மூளை உதவுகிறது. கபத்தை நீக்கி, மார்பு பகுதியில் இருக்கும் ரணத்தை ஆற்றக்கூடியது ஆட்டு மூளை. மெலிந்த புரோட்டீன் அதிகமாக உள்ளதால், தசைகளிலுள்ள காயங்கள் எளிதாக குணமாகிவிடும். தசைகளின் வளர்ச்சியையும், வலிமையையும் இத்தகைய புரோட்டீன் மேம்படுத்த செய்கின்றன.

ஆபத்துக்கள்: நம்முடைய மூளை, இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான மிகவும் அத்தியாவசியமான சத்து ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்தான். இவை ஆட்டு மூளையில் நிறையவே உள்ளன. இதனால், இதயம் தொடர்பான ஆபத்துகளும் குறையும். ரத்தம் உறைவதும் தடுக்கப்பட்டுவிடும்.. ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

ஆட்டு மூளைகளை ஆண்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்பார்கள். ஏனென்றால், இதில், ஜிங்க் சத்துக்கள் அதிகமாக உள்ளதால், விந்தணுக்களின் உற்பத்தியை போக்குவதுடன், பாலியல் ஆரோக்கியத்தையும் மேம்பட செய்கிறதாம். எனவே, விந்தணு குறைபாடு உடையயவர்கள், ஆட்டுமூளையை சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகக்கூடும்..

ஆரோக்கியம்: உடல் சோர்வு, நரம்பியல் பாதிப்பு, போன்றவற்றுக்கும் ஆட்டு மூளை சிறந்தது. காரணம், இந்த மூளையில் வைட்டமின் B12 அதிகமாக உள்ளுதால், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியத்துடன் செயல்பட வைக்கிறது.

ஆனால் எவ்வளவுதான் நன்மைகள் ஆட்டுக்கறியில் இருந்தாலும், நீரிழிவு நோயாளிகள், வயதானவர்கள், அதிக உடல் பருமன் கொண்டவர்கள், இதய நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள், இந்த ஆட்டுக்கறியை தொட்டுக்கூட பார்க்கக்கூடாது.. அல்லது மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் உட்கொள்ளலாம்..!!

கிட்னி பாதுகாப்பு: ஆட்டு மூளையில் அஸ்கார்பிக் அமிலம், லெசித்தின், செரிப்ரோசைட், ரிபோஃப்ளேவின், நியாசின், தயாமின், புரதம், பாஸ்பரஸ் அதிகமாக உள்ளதால், இவை மனித மூளைக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.. ஆட்டு மூளையையில் காணப்படும் பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் செய்து வெளியேற்றும் தன்மை கொண்டதாகவும் கூறுகிறார்கள். அதேபோல மூளையை சுத்தம் செய்யும்போது, சின்ன சின்ன நரம்புகளையும் அகற்றிவிட வேண்டுமாம்.

அதுமட்டுமல்ல, தலைக்கறி எடுக்கும்போதெல்லாம் ஆட்டு மூளையையும் சேர்த்தே வாங்கவிட வேண்டும். ஆட்டு மூளை குளிர்ச்சித் தரக்கூடிய ஆற்றல் உள்ள நிலையில், மிளகு, இஞ்சி இரண்டையுமே சற்று கூடுதலாக சேர்த்து சமைக்க வேண்டும்.. கோடைக்காலங்களில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை சாப்பிடும்போது, இந்த ஆட்டு மூளையை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+