துத்திக்கீரை.. மூலநோய்க்கு பெஸ்ட் கீரை.. ஆசனவாயில் ரத்தமா? மூலத்தை ஓட்டும் சூப்பர் பழங்கள், காய்கள்
சென்னை: மூலநோய் ஏன் வருகிறது? இதனை ஆரம்ப கட்டத்திலேயே தவிர்க்கலாமா? இதற்கு உதவக்கூடிய பழங்கள், காய்கறிகள் என்னென்ன? மூலநோயை விரட்டுவதில் துத்திக்கீரையின் பங்கு என்ன? என்பதை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
மூலநோய் வருவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. நீண்ட நாளாக மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிக்கல் இருந்தால் மூலநோய் வர வாய்ப்புள்ளது. ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பதாலும், அலர்ஜி உணவுகளை சாப்பிடுவதாலும், அதிக காரமான உணவை சாப்பிடுவதாலும், அதிகமாக பளு தூக்குவதாலும், நார்ச்சத்து இல்லாத உணவை சாப்பிடுவதாலும் மூலநோய்கள் வரலாம்.

எனினும், இதனை ஆரம்ப கட்டத்திலேயே , அதுவும் உணவு முறைகளிலேயே தடுக்கலாம். சரியான உணவு முறைகளையும், முறையான பழக்கவழக்கத்தையும் கையாண்டால், மூலநோய் வராமலேயே தடுத்துவிடலாம்.
பாதிப்புகள்: எனினும், மூலநோய் ஏற்பட்டு ரத்தக்கசிவு என்றாலே டாக்டரை சந்தித்து விட வேண்டும். கட்டாயம் சிகிச்சையும் பெற வேண்டும். மூலநோய் வராமல் தடுக்க, சில உணவுகளை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும.
முதலாவதாக, நார்ச்சத்து உணவுகள் அவசியம்.. மலம் கழிப்பதில் எந்த சிரமமும் இல்லாதவாறு, உணவுமுறைகள் இருந்தாலே போதும். எனவே, எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அதிக காரம் இல்லாத உணவுகளை சாப்பிட வேண்டும்.. குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட்டு வரவேண்டும்.. உடல் சூட்டை தரக்கூடிய உணவுகளை தவிர்த்துவிடலாம்.
பருப்பு வகைகள்: உணவில், பருப்பு வகைகளை நிறைய சாப்பிட வேண்டும்.. இதனால், உணவு எளிதில் செரிமானமாகும்.. செரிமானத்துக்கு உதவக்கூடிய அரிசி, சோளம், ஓட்ஸ், பார்லி போன்றவற்றை தவிர்க்கவே கூடாது
பழங்களை பொறுத்தவரை, எலுமிச்சை, சாத்துக்குடி சப்போட்டா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, முலாம்பழம், அவகோடா, பப்பாளி பழம், பேரிக்காய், மாதுளை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இந்த பழங்களிலேயேஆப்பிள் மிகவும் நல்லது. காரணம், பெக்டின் என்ற நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கலை தடுக்கிறது.
காய்கறிகள்: காய்கறிகளை பொறுத்தவரை, தக்காளி, வெங்காயம், முள்ளங்கி, ப்ரக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கேரட், புடலங்காய், கொத்தமல்லி போன்ற காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம். மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதை முற்றிலும் குணப்படுத்த விரும்பினால், கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிடலாம்.
கீரைகளில் வெந்தயக்கீரை, பசலைக்கீரை குளிர்ச்சியை தரக்கூடியது. எந்த சமையலிலும், எண்ணெய், காரம், உப்பு இந்த மூன்றையும் அதிகமாக சேர்க்கக்கூடாது.
எண்ணெய் சேர்த்து சமைத்தாலும், விளக்கெண்ணெய்யில் சமைத்தால் குளிர்ச்சி கிடைக்கும். காபி, டீ போன்றவற்றை நிறுத்திவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் பழைய சாதம் தண்ணீரை கரைத்து குடிக்க வேண்டும். இந்த தண்ணீர் மூலத்துக்கு மிகச்சிறந்த மருந்தாகும். பழைய சாதத்தில் தண்ணீர் ஊற்றி, சின்ன வெங்காயம், கல் உப்பு போட்டு மூடி வைத்துவிட்டு, மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடிப்பது, மூலநோயை விரைந்து குணமாக்கும்.
பழைய கஞ்சி: இந்த பழைய கஞ்சியை 10 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தாலே போதும். உடல் உஷ்ணம் குறையும்... மிகச்சிறந்த மலமிளக்கியாக இது செயல்படும்.. அல்சர் புண்களும் ஆறிவிடும். சிறுகுடலும் ஆரோக்கியம் அடையும்.. அன்றைய நாளுக்கு எனர்ஜி பானமாகவும் அமைந்து விடும்.
துத்திக்கீரையை கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும். மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக இந்த கீரை திகழ்கிறது. அதனால், பலவகைகளில் இந்த கீரையை பயன்படுத்தி மூலத்தை விரட்டலாம். இந்த கீரையை பறித்து சுத்தம் செய்து, விழுதாக அரைத்து, தினமும் காலையில் ஒரு வாரத்துக்கு வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்தாலே போதும்.. மூலநோய் விரைந்து குணமாகும்..
மூலச்சூடு: ஒரு வாணலில் நல்லெண்ணெய், சீரகம், சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, அதில், துத்திக்கீரையையும் பொடியாக நறுக்கி போட்டு, மிளகுதூள், உப்பு தூள் சேர்த்து வதக்கி சாப்பிட்டாலும் மூலநோய் அண்டாது. அல்லது, இட்லி மாவுடன் இந்த கீரையையும் அரைத்து தோசை சுட்டு சாப்பிடலாம். துத்தி இலையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் மூலச்சூடும் நீங்கும். அல்லது இந்த இலையை வெங்காயம், பச்சை பயறு சேர்த்து, வேக வைத்து கடைந்து சாப்பிட்டாலும் மூலச்சூடு தணியும்.
முழு தானியங்களான பழுப்பு அரிசி, ஓட்ஸ், தவிடு தானியங்கள், முழு தானியங்கள் அல்லது பல தானிய ரொட்டி ஆகியவை மூல நோய்க்கு நல்ல உணவுகளாகும்.. இந்த உணவுகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது மலத்தின் அளவை அதிகரிக்கிறது மற்றும் குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.. புரோக்கோலியை தவிர்க்க கூடாது. பிரவுன் ரைஸ், கம்பு, ஓட்ஸ், பயறு வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications