ஊர் ஊராக போய் புலம்பும் பாகிஸ்தான்.. சிந்து நதியில் இந்தியா கொடுத்த அடியில்.. நிலை குலைஞ்சு போச்சு!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: சிந்து நதி நீர் ஒப்பந்தம் தோல்வியடைந்தால், உலக அளவில் எழுதப்பட்ட எந்தவொரு சர்வதேச விதிகளும் பாதுகாப்பாக இருக்காது என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. மேலும், இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதால் தெற்கு ஆசியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் 200 கோடி பேரின் அமைதியை இது பாதிக்கும் என பாகிஸ்தான் வாய்க்கு வந்ததைக் கூறி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்றே தெரிகிறது.!

கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தீவிரவாத தாக்குதலை நடத்தினர். பஹல்காமில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வரை இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கிறோம் என்பதே இந்தியாவின் வாதமாக இருக்கிறது.

Indus Water Treaty India Pakistan

சிந்து நதி நீர்

தீவிரவாதத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மீண்டும் இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்த இந்தியா ரெடியாகவே இருக்கிறது. ஆனால், அதைச் செய்யாத பாகிஸ்தான் அரசு, சர்வதேச அரங்கில் சிந்து நதி நீர் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யவே தொடர்ந்து முயன்று வருகிறது. இந்தச் சூழலில் தான் இது தொடர்பாக ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தியுள்ளது. விவசாயம் மற்றும் மின்சார தேவைகளுக்காகச் சிந்து நதி நீரையே முற்றிலும் நம்பியிருக்கும் பாகிஸ்தான், இந்தியாவின் இந்த முடிவால் நதிகளில் உள்ள நீரின் அளவு குறித்த முறையான தகவல்கள் கிடைக்காமல் தவித்து வருகிறது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே நதி நீரைப் பகிர்ந்து கொள்ளப் போடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமாகும். உலக வங்கியின் மத்தியஸ்தத்துடன் உருவான இந்த ஒப்பந்தம், கடந்த 1960 செப்டம்பர் 19 அன்று கராச்சியில் கையெழுத்தானது. இந்தியாவின் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தைப் போர்க் காலத்தில் கூட இந்தியா நிறுத்தவில்லை. ஆனால், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியவுடன் இந்த ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது..

ரத்தமும் தண்ணீரும்!

"ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது" என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது. . இப்போது இந்தியாவிடம் சிந்து நதி நீரை முழுமையாகத் தடுத்து நிறுத்த உட்கட்டமைப்பு இல்லை. இருந்த போதிலும், முடிந்த வரை பாகிஸ்தானுக்குச் செல்லும் நதி நீரின் அளவைக் குறைக்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், மேற்கு நோக்கிப் பாயும் நதிகளில் அனல்மின் திட்டங்கள் மற்றும் நீர் உள்கட்டமைப்பு பணிகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில் தான் 'நிலையான சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்பாகச் சிந்து நதி நீர் ஒப்பந்தம்' என்ற தலைப்பில் பாகிஸ்தான் ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில், உள்நாட்டு மற்றும் சர்வதேச நீர் மற்றும் சட்ட வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார், "சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது வெறும் நீர் பகிர்வுக்கான ஏற்பாடு மட்டுமல்ல.. அது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பானது.

புலம்பும் பாகிஸ்தான்

தண்ணீரை எப்போதும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது,, அது நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வளர்க்கும் பாலமாக மட்டுமே இருக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து பாகிஸ்தானுக்கு உள்ள உரிமைகளைப் பறிக்க முயல்வது ஒட்டுமொத்த தெற்காசியாவில் உள்ள சுமார் 200 கோடி மக்களின் அமைதியை பாதிக்கும்" என்றும் அவர் எச்சரித்தார்.

பாகிஸ்தான் எம்பி முசாடிக் மாலிக் பேசுகையில், "இரு நாடுகளுக்கும் இடையே 3 போர்கள் நடந்த போதிலும் இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படவில்லை. ஆனால், இப்போது நிறுத்தியுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால்.. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான எந்தவொரு சர்வதேச விதிமுறைகளும் பாதுகாப்பாக இருக்காது. ஒரு சக்திவாய்ந்த நாடு திடீரென ஒருதலைபட்சமாக ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தால் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு மதிப்பே இல்லாமல் போய்விடும்" என்று புலம்பி தள்ளினார்.

தவிக்கும் பாகிஸ்தான்

முன்பே குறிப்பிட்டது போல சிந்து நதி நீர் விவகாரத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்குப் பதிலாகச் சர்வதேச அரங்கில் ஆதரவு திரட்டவே பாகிஸ்தான் முயல்கிறது. ஆனால், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் சூழலில்.. எந்தவொரு முக்கிகமயான சர்வதேச நாடும் இதுவரை பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+