"PoK பாகிஸ்தானின் பகுதி அல்ல.. இந்தியாவின் ஆதரவை நாடுவோம்!" ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவலாகோட் பகுதியில்.. பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டுக்கு எதிராகப் பல ஆயிரம் பேர் திரண்டுள்ளனர். அங்கு ஒரே இடத்தில் திரண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அங்கு நடைபெற்று வரும் இந்த அமைதிப் போராட்டம் 22வது நாளை எட்டியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீர் பகுதியைச் சுதந்திரமடைந்து சில நாடுகளில் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இத்தனை காலம் அங்கு மக்களைச் சட்டவிரோதமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இதற்கிடையே இப்போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த போராட்டம் 22வது நாளை எட்டியுள்ளது.

Protest in PoK

போராட்டம்

ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டனர். மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் இனிமேலும் பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கருதப்படக் கூடாது என்று முழக்கமிட்ட அவர்கள், இந்தியாவின் ஆதரவை நாடுவது குறித்து தீவிரமாக ஆலோசிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

மோசமான நிர்வாகம், பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, பாக்கிஸ்தான் அரசின் ஒடுக்குமுறை மற்றும் அலட்சியம் ஆகியவை ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீண்ட காலமாகவே பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதற்குத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியே போராட்டம் வெடித்துள்ளது. இருப்பினும், இந்த மக்கள் போராட்டம் குறித்த தகவல்கள் உலக நாடுகளுக்குச் செல்வதைத் தடுக்க பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.. மேலும், மக்கள் கூடுவதைத் தடுக்கவும் ஜூன் 5ம் தேதி முதல் அங்கு இணையச் சேவையை மொத்தமாக முடக்கி அடாவடி நடவடிக்கையில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது.

எச்சரிக்கை

அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் சமூக ஆர்வலரான சர்தார் அமன் கான் உள்ளிட்ட பல உள்ளூர் தலைவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்கும் நோக்கில்.. கடந்த இரண்டு வாரங்களாக இப்பகுதிக்குச் செல்லும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் சப்ளையை பாகிஸ்தான் அரசு முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்தத் தடையால் கோபமடைந்த மக்கள், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். ஜூன் 9 முதல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே மற்றொரு தொடர் போராட்டமும் நடைபெற்று வருகிறது.

எச்சரிக்கை

இந்த போராட்ட களத்தில் பேசிய சர்தார் அமன் கான், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது பாக்கிஸ்தானின் ஒரு பகுதி அல்ல. எங்களுக்குப் பாகிஸ்தான் தேவைப்படுவதை விட, பாகிஸ்தானுக்குத் தான் எங்களது பிராந்தியம் அதிகம் தேவைப்படுகிறது. உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குக் கூட தடை விதித்துள்ளனர். இதை உடனடியாக நீக்கிக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் எங்கள் மக்கள் வாழ்வாதாரத்திற்காக இந்தியாவின் உதவியை நாட வேண்டியிருக்கும். அப்படி நாங்கள் இந்தியாவின் உதவியை நாடினால் அது அங்குள்ள அரசியலை மொத்தமாக மாற்றி அமைக்கும். பாகிஸ்தான் அரசுக்கு மிக பெரிய நெருக்கடியைத் தரும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.

பரவும் வீடியோ

மேலும், இந்த போராட்டம் தொடர்பான பல்வேறு வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தங்களது பிராந்தியம் பாக்கிஸ்தானின் பகுதி அல்ல என்று வெளிப்படையாகக் கோஷமிடுவது தெளிவாக கேட்கிறது. பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிரின் அதிகாரத்தை முற்றிலுமாக நிராகரித்துள்ள அப்பகுதி மக்கள், தங்களால் ஒருபோதும் சர்வாதிகாரியை சகித்துக் கொள்ள முடியாது என்றும் முழக்கமிட்டுள்ளனர்.

இந்த போராட்டம் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் மட்டும் நின்றுவிடாமல் சர்வதேச அளவிலும் பரவுகிறது. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்று செட்டிலான மக்களும், தங்கள் நாடுகளில் உள்ள தூதரகங்களுக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+