பாகிஸ்தான் பாலைவனமாகும்.. சிந்து நீரை இந்தியா நிறுத்தினால் பேரழிவு உறுதி! மிக முக்கிய எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இந்தியா அறிவித்திருந்தது. இருப்பினும், இப்போது வரை சிந்து நதி நீரை இந்தியா முழுமையாக நிறுத்தவில்லை. இதற்கிடையே வரும் காலங்களில் ஒருவேளை சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால்.. அது பாகிஸ்தானுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் எனப் பிரபலச் சர்வதேச அமைப்பு எச்சரித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. அதேபோல சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்தும் விலகுவதாக பாகிஸ்தான் அறிவித்தது. இது பாகிஸ்தானுக்கு விழுந்த மிகப் பெரிய அடியாகவே பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான்
இதற்கிடையே சிந்து நதிப் படுகையின் நீரையே பாகிஸ்தான் பெருமளவு நம்பியிருப்பதால்.. இந்தியா சிந்து நதிநீரை நிறுத்த ஆரம்பித்தால் பாகிஸ்தானில் மிகக் கடும் நீர் பற்றாக்குறை ஏற்படும் என்று 2025ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் அறிக்கை எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் இந்த ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்திருப்பதால்.. சிந்து நதி மற்றும் அதன் கிளை நதிகள் பாகிஸ்தானுக்குள் செல்வதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. பாகிஸ்தானின் விவசாயம் 80% சிந்து நதி அமைப்பைச் சார்ந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை அந்நாட்டுக்கு ஒரு பெரிய இடியாக இருக்கிறது..
பேரழிவு உறுதி
இது தொடர்பாக அந்த ரிப்போர்ட்டில் மேலும், "முக்கியமான தருணங்களில் நீரோட்டத்தில் ஏற்படும் சிறிய தடங்கல்கள் கூட பாகிஸ்தான் விவசாயத்தைப் பாதிக்கலாம்.. ஏனெனில் நிலைமையைச் சமாளிக்க பாகிஸ்தானிடம் போதுமான அணைகள் இல்லை. தற்போது பாகிஸ்தானில் உள்ள அணைகளால் சுமார் 30 நாட்களுக்குத் தேவையான நீரை மட்டுமே சேமித்து வைக்க முடியும். நீண்ட காலம் நீர் வராமல் போனால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும்.
சிந்து நதி நீர் வருவதில் ஏற்படும் சிக்கல்கள் பாகிஸ்தானின் உணவுப் பாதுகாப்பை நேரடியாக அச்சுறுத்தும். தேசியளவில் இது பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய பிரச்சினை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. உண்மையில் பாகிஸ்தான் விவசாயம் சுமார் 80 சதவீதம் சிந்து நதி நீரையே சார்ந்திருக்கிறது.
ஆபத்து
இதனால் பாகிஸ்தானுக்கு ஆபத்து தீவிரமானது. இந்தியா சிந்து நதி நீரை முற்றிலுமாக துண்டித்தால் அல்லது கணிசமாகக் குறைத்தால் கடுமையான நீர்ப் பற்றாக்குறை ஏற்படும். குறிப்பாகக் குளிர்காலம் மற்றும் வறண்ட காலங்களில் பாகிஸ்தானின் பெரும்பகுதி வறட்சியை எதிர்கொள்ளும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்தியா குறித்தும் இதில் சில முக்கிய பாயிண்டுகள் கூறப்பட்டுள்ளது. அதாவது தற்போதைய சூழலில் இந்தியாவிடம் சிந்து நதி நீர் ஓட்டத்தை முழுமையாக நிறுத்தும் உட்கட்டமைப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் முழுமையாகக் கட்டுப்படுத்தவில்லை என்றாலும் சிந்து நதியில் சிறியளவில் பாதிப்பு ஏற்பட்டாலும் கூட அது பாகிஸ்தானுக்குக் குறுகிய காலத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அணைகளைச் சுத்தம் செய்த இந்தியா
கடந்த மே மாதம், இந்தியா தனது சலால் மற்றும் பாக்லிஹார் அணைகளில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அணைகளில் இருக்கும் வண்டல் மணலை அகற்ற மதகுகள் மூலம் அதிகளவு நீரை வெளியேற்றி சுத்தம் செய்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் இந்த முறைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் இந்தியா இந்த முறையைப் பின்பற்றி அணைகளைச் சுத்தம் செய்தது. இருப்பினும், இது குறித்து பாகிஸ்தானுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
பாதிப்புகள் அதிகம்
இதன் விளைவுகள் உடனடியாகத் தெரிந்தன. இந்தியா அணைகளை மூடிய பிறகு, பாகிஸ்தானின் பஞ்சாப்பில் செனாப் ஆற்றின் பல நாட்கள் நீர் இல்லாமல் போனது. பிறகு மதகுகள் அதிக நீரோடு திறக்கப்பட்டபோது, வண்டல் மண் நிறைந்த வெள்ளம் கீழ்நோக்கி பாய்ந்தது. அப்போதே பாகிஸ்தான் இதைக் கண்டு மிரண்டு போனது குறிப்பிடத்தக்கது..
-
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications