எல்லாவற்றுக்கும் காரணம் அப்பா தான்! சஞ்சய் சொன்ன விஷயம்.. சந்தோஷத்தில் விஜய் ரசிகர்கள்! ஆனால் ட்விஸ்ட்...ப்பா

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இதுவரை அதிகமாக பொதுவெளியில் பேசியதே இல்லை. புகைப்படங்கள் கூட அரிதாக வெளியாகும் நிலையில், தற்போது அவர் குழந்தையுடன் மிகவும் இயல்பாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதிலும் அவர் சொன்ன ஒரு சிறுவயது சம்பவம் ரசிகர்களை சிரிக்கவும், நெகிழவும் வைத்திருக்கிறது.

விரைவில் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் ஜேசன் சஞ்சய், நடிகர் ஜெமினி மணியின் மகனுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தபோது, "உங்க அப்பா என்னை ஸ்கூல்ல இருந்து கடத்திட்டுப் போயிட்டாரு" என்று சிரித்தபடியே சொல்கிறார். இதைக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்துவிடுகிறார்கள்.

இந்த வீடியோவைப் பார்த்த பலருக்கு இது என்ன சம்பவம் என்று தெரியாமல் இருந்த நிலையில், இதற்கு பின்னால் பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது.

Jason Sanjay Vijay Gemini Mani Sigma

விஜய் மகனை கடத்திய நடிகர்

ஏற்கனவே நடிகர் ஜெமினி மணி ஒரு பேட்டியில் இதைப் பற்றி பேசியிருந்தார். அதில், "நான் விஜய்யின் தீவிர ரசிகன். எப்படியாவது அவரை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காக, சஞ்சயை பள்ளியில் இருந்து தூக்கிக்கொண்டு ஓடி வந்து காரில் இருந்த விஜய்யிடம் ஒப்படைத்தேன். நான் சஞ்சயை தூக்கிக் கொண்டு ஓடியதை பார்த்து மொத்த ஸ்கூலும் பதறி போய்விட்டார்கள்.. இந்த பையனை யாரோ கடத்திட்டு போறாங்கன்னு நெனச்சாங்க.

அப்போது விஜய் எதுவும் சொல்லாமல் 'ஓகே... ஓகே...' என்று மட்டும் சொல்லிவிட்டு போயிட்டார். பிறகு பல வருடங்கள் கழித்து அவருடன் ஒரு படத்தில் நடித்தபோதுதான் அந்த சம்பவத்தை அவரிடம் மீண்டும் சொன்னேன்" என்று சிரித்தபடியே நினைவு கூர்ந்திருந்தார்.

அதே சம்பவத்தைத்தான் இப்போது ஜேசன் சஞ்சய், ஜெமினி மணியின் மகனிடம் விளையாட்டாக சொல்லியிருக்கிறார். "உங்க அப்பா என்னை கடத்திட்டுப் போனாரு அதுபோல் நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது அப்ப என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியல" என்று அவர் கியூட்டாக பேசிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விஜய் ரசிகர்கள் கருத்து

இந்த வீடியோவில் இன்னொரு விஷயமும் இணையத்தில் விவாதமாகி வருகிறது.ஜேசன் சஞ்சய் பேசும்போது, "அப்பா..." என்று பல முறை சொல்லுகிறார். அதை பார்த்த சில விஜய் ரசிகர்கள், "இதுவரைக்கும் ஜேசன் சஞ்சய் அப்பாவைப் பற்றி பேசவே மாட்டார் என்று சொன்னவர்களுக்கு இது பதில்", "அப்பா மீது இருக்கும் பாசம் இந்த ஒரு வீடியோவிலேயே தெரிகிறது" என்று பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மையில் அந்த வீடியோவில் ஜேசன் சஞ்சய், தன்னுடைய அப்பா விஜயைப் பற்றி அல்ல; ஜெமினி மணியின் மகனை பார்த்து 'உங்க அப்பா' என்றுதான் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் பேசியது முழுமையாக பார்க்காமல் சிலர் தவறாக புரிந்து கொண்டு, சமூக வலைதளங்களில் வேறு விதமாக பகிர ஆரம்பித்துள்ளனர்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்

இதையடுத்து சில நெட்டிசன்கள், "ஒரு வீடியோவை முழுசாக பார்க்காமலே முடிவுக்கு வந்துட்டாங்க", "அவர் சொன்னது ஜெமினி மணியைப் பற்றிதான்... ஆனா சிலர் வேற மாதிரி கதையை உருவாக்கிட்டாங்க" என்று கலாய்த்து வருகின்றனர்.

ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குநராக தனது முதல் படமான 'சிக்மா' படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், படம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், ஜேசன் சஞ்சயின் இந்த இயல்பான பேச்சையும், குழந்தைகளுடன் அவர் பழகும் விதத்தையும் பார்த்த ரசிகர்கள், "தளபதி விஜய் மாதிரியே குழந்தைகளோட உடனே கலந்துடுறாரே... பேசுற ஸ்டைலும், சிரிப்பும் அப்படியே விஜய் சாயல்", "இவ்வளவு நாளாக இவரோட குரலையே கேட்கல... இப்போ பார்த்தா ரொம்ப கியூட்டா பேசுறாரு" என்று கமெண்ட் செய்து இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+