தம்மாதுண்டு சுண்டைக்காய்.. சிறுநீரக பாதிப்பை குறைக்கும்.. கல்லீரலை காக்கும் பச்சை சுண்டைக்காய்
சென்னை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட வேண்டிய அற்புத காய், பச்சை சுண்டைக்காய் ஆகும்.. ஏதாவது ஒருரூபத்தில் சுண்டைக்காயை உணவில் சேர்த்து வருவது ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது.
இந்த காய்கள் சீக்கிரத்தில் சுண்டிவிடுமாம். எனவேதான் சுண்டைக்காய் என்று பெயர் வந்ததாம். சித்த மருத்துவத்தில் சுண்டைக்காய்க்கு தனி சிறப்பிடம் உண்டு.

கலோரிகள்: சுண்டைக்காயில் கார்போஹைட்ரேட்டுகள் 7.03% மட்டுமே உள்ளன.. அதேபோல, 86.23% தண்ணீரை கொண்டுள்ளதால், குறைவான கலோரிகள் உள்ளன.. ஏகப்பட்ட நார்ச்சத்துக்கள் உள்ளன.. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் தன்மை இந்த சுண்டைக்காய்களுக்கு உண்டு. சுண்டைக்காய் வைட்டமின் C மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக உள்ளது.. இந்த இரண்டுமே நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையானதாகும்.
புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் இந்த சுண்டைக்காயில் உண்டு. இந்த செடியின் பூக்கள் வெள்ளை கலரில் இருக்கும்.. இலைகள் பெரிதாக இருக்கும். இந்த இலைகளும் மருத்துவ குணம் நிறைந்தவை. வயிறு புண்களை ஆற்றுவதற்கு, இந்த இலைகளும் மருந்தாகின்றன.
பக்கவாதம்: பக்கவாதம் பாதிக்கப்பட்டவர்கள் சுண்டைக்காயை தவறவிடக்கூடாது. மூட்டு வலி இருப்பவர்களும் அடிக்கடி சுண்டையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதேபோல, சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிட்டு வரும்போது, ரத்தசர்க்கரை கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
உடலில் வீக்கங்கள் ஏற்பட்டால், இதன் இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி, வீக்கங்கள் மீது கட்டினால் நிவாரணம் கிடைக்கும். சமையலுக்கு இளம் சுண்டையைதான் பயன்படுத்துவார்கள்.. குடல் பகுதிகளிலுள்ள நச்சுக்களை அழிக்கக்கூடியது.. ஜீரணி சக்தியை பெருக்கக்கூடியது.. அனீமியா பிரச்சனை உள்ளவர்கள், சுண்டைக்காயை அடிக்கடி உணர்வில் சேர்த்து கொள்ளலாம்..
செரிமான கோளாறு: செரிமான கோளாறுகளை சரிசெய்யக்கூடியது சுண்டைக்காய். வயிற்றில் உள்ள புழுக்களையும் வெளியேற்றிவிடும். வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம் போன்ற கோளாறுகளை சரி செய்யக்கூடியது.
மூல நோயால் அவதிப்படுபவர்கள், சிறிது சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தின் கடுப்பு, ரத்தக் கசிவும் நீங்கும்.. சுண்டைக்காயில் ரிபோஃபுளோவின் மற்றும் தயமின் நிறைந்துள்ளதால், வாய் புண்களை குணப்படுத்துகிறது.. அத்துடன் சொத்தைப் பற்கள் உருவாவதை தடுத்து, ஈறுகளுக்கு பலம் தருகிறது.
சுண்டைக்காய்: சுண்டைக்காயில் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் மிக அதிகமாக இருப்பதால, புற்றுநோய் செல்கள் உருவாகுவதைத் தடுக்கிறது.. சிறுநீரகத்திலும், கல்லீரலிலும் உள்ள தீங்குகளை அகற்ற, சுண்டைக்காய் பேருதவி புரிகிறது.
பாக்டீரியா மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகளையும் கொண்டுள்ளதால், சுண்டைக்காய் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளிலிருந்து நம்மை பாதுகாக்ககூடியது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications