சர்க்கரை நோயாளிகள் இளநீரை குடிக்கலாமா?.. இத்தனை நன்மைகளா.. ஆஹா அருமருந்து!
சென்னை: பல்வேறு அற்புதங்களை அள்ளித் தரும் இயற்கை பானமான இளநீரை சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா என்பதை பார்ப்போம்.
இயற்கை நமக்கு ஆரோக்கியமான பானங்களை கொடுத்துள்ள நிலையில் அதைவிட்டு விட்டு வெளிநாட்டு நிறுவனங்களின் விலை மதிப்புள்ள குளிர்பானங்களைத்தான் விரும்பி குடிக்கிறார்கள்.
குளிர்பானங்களால் சர்க்கரை நோய் உண்டாகும், உடல் எடை கூடும் உள்ளிட்ட தீமைகள் இருந்தாலும் அதை வாங்கி குடிப்பதையே பந்தாவாக நினைத்து பல இளசுகள் பாக்கெட் அல்லது பெட்ஜாரில் வரும் குளிர்பானங்களை குடிக்கிறார்கள்.

இளநீரின் நன்மைகள் தெரியாமல் சிலர் அதை விட்டுவிடுகிறார்கள். ஆனால் அந்த இளநீரில் எத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்கின்றன தெரியுமா? இளநீர் இயற்கையாகவே நீர் சத்தை அதிகரிக்கும் பானம். இதில் எந்த வித ரசாயனமும் இல்லாததால் உடலுக்கு நன்மை விளைவிக்கிறது. இதை தினந்தோறும் குடிப்பதால் குறிப்பாக வெயில் காலங்களில் குடிப்பதால் உடலில் நீர் சத்து இருக்கும்.
காலை வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பதால் வயிற்று பிரச்சினைகளை தீர்க்கிறது. வயிற்றில் அல்சர் இருந்தாலும் தொற்று இருந்தாலும் அதை குணப்படுத்துகிறது. குடலில் உள்ள தொற்றுகளையும் நீக்குகிறது. உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்கிறது. இளநீரில் நிறைய விட்டமின்கள், மினரல்கள், எலக்டோலைட்டுகள் உள்ளன.
இவை உடலுக்கு தேவையான எல்க்ட்ரோலைட்டுகளை திரும்ப பெற உதவுகிறது. கோடை காலங்களில் வியர்வையால் உடலில் உள்ள எனர்ஜி போய்விடும். இந்த இளநீர் உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும். உடலில் ஜீரணமாகாமல் தேவையில்லாத உணவு பொருட்கள் இருந்தால் அவற்றை வெளியேற்றும். மலச்சிக்கலுக்கு அருமருந்து.
குடலில் உள்ள நச்சுகளை முறிக்கும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வல்லமை கொண்டது. இளநீரில் பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற தண்ணீரை வெளியேற்றி சிறுநீரக கற்களை உருவாவதை தடுக்கிறது. உடல் எடை குறைய அருமருந்து. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உணவுக்கு முன்னர் இளநீரை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த இளநீரை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாமா என்றால் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இதில் பொட்டாசியம், மெக்னீஷயம், விட்டமின் சி, எல் ஆர்ஜினைன் ஆகியவை இருப்பதால் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications