Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் குழந்தைகளுக்கு வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்! இந்த மருந்தை அதிகம் கொடுத்துடாதீங்க!

சென்னையில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவும் நிலையில், பாரசிட்டமல் மருந்தை குழந்தைகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனையின்றி அதிகம் கொடுக்க கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவும் நிலையில், பாரசிட்டமல் மருந்தை குழந்தைகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனையின்றி அதிகம் கொடுக்க கூடாது என அரசு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல் இருந்தாலோ, சளி இருந்தாலோ, உடல் சோர்வு இருந்தாலோ, மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, உடனடியாக மருத்துவர்களை அணுகுவது அவசியம் என்று அரசு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

சென்னையில் குழந்தைகள் மத்தியில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவது பெற்றோர்கள் மத்தியில அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பருவ மழை காலம் தொடங்கி, பனிக்காலம் முடியும் வரை காய்ச்சல் எண்ணிக்கை அதிகரித்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவது வழக்கம் தான்.

ஆனால் குளிர்காலம் முடிந்து பிப்ரவரி மாதம் பிறந்த பின்னரும், வைரஸ் காய்ச்சலால் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில குழந்தைகளுக்கு ஓரிரு நாட்களிலும், சில குழந்தைகளுக்கு ஒரு வாரம் வரையிலும் வைரஸ் காய்ச்சல் நீடிக்கிறது.

உடல் சோர்வு

உடல் சோர்வு

குறிப்பாக காய்ச்சல் விலகிய பின்னரும் கண் எரிச்சல், சளி , உடல் சோர்வு, வயிறுப்போக்கு போன்ற அறிகுறிகள் பெற்றோர்கள் இடையே அச்சம் அதிகம் உள்ளது. இது தொடர்பாக பெற்றோர் ஒருவர் கூறுகையில், பாப்பாவுக்கு வைரல் பீவர் இருந்தது. டெஸ்ட் எடுத்து பார்த்தோம்.. ஐசியுவில் சேர்த்தோம்.நல்ல சிகிச்சைக்கு பின் இப்போது நார்மல் வார்டில் இருக்கிறார். காய்ச்சல் 10 நாட்கள் வரை விட்டு விட்டு இருந்தது என்றார். இன்னொருவர் கூறும் போது, காயச்சல், சளி ஒரு வாரம் வரை விட்டு விட்டு இருந்தது என்றார்.

தட்ப வெப்பநிலை

தட்ப வெப்பநிலை

இது தொடர்பாக மருத்துவர் கூறும் போது, ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் தட்ப வெப்ப நிலை மாற்றம் காரணமாக வைரஸ்கள் பரிணாம வளர்ச்சி பெற்று தகவமைப்பை மாற்றிக் கொள்வதால், காய்ச்சல் பாதிப்பு தொடர்கிறது. அடினோ வைரஸ் மற்றும் இன்புளுயன்ஸா வைரஸ் ஆகியவை தான் தற்போது சென்னையில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலுக்கு காரணம் ஆகும்.

தடுப்பூசி

தடுப்பூசி

ப்ளூ வைரஸ் காய்ச்சல் என்பது ஆண்டுதோறும் வரக்கூடியது தான். சில குழந்தைகளுக்கு இன்புளுயன்ஸா என்ற தடுப்பூசியை வருடம் வருடம் நாம் எடுக்க வேண்டியதிருக்கும். யார் ஒருவருக்கு இதயத்தில் தொந்தரவு இருக்கிறது, யார் ஒருவருக்கு ஆஸ்துமா தொந்தவு இருக்கிறது, யார் ஒருவர் ஸ்டீராய்டு எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை பார்த்து, அந்த மாதிரியான குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இன்புளுயன்ஸா தடுப்பூசியை போடுவார்கள் என்றார்.

தேரணிராஜன் எச்சரிக்கை

தேரணிராஜன் எச்சரிக்கை

இன்புளுயன்ஸா தடுப்பூசியை எடுத்துக்கொண்டால் வைரஸ் பாதிப்பில் இருந்து அந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும். கொரோனா , டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற அபாயகரமான காய்ச்சல்கள் பரவுவது கட்டுக்குள் உள்ளதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் சாதாரண காய்ச்சல் தானே என்று பாரசிட்டமல் மாத்திரைகளை அதிகமாக கொடுத்தால், குழந்தைகளின் ஈரலை பாதிக்கும் என சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை டீன் தேரணிராஜன் எச்சரித்துள்ளார்.

குழந்தைகளுக்கு இருமல்

குழந்தைகளுக்கு இருமல்

இது தொடர்பாக மருத்துவர் தேரணி ராஜன் கூறுகையில், குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அவர்களை உடனடியாக பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும். அப்போது தான் ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் பரவுவதை தடுத்து நிறுத்த முடியும். அடுத்து வந்து குழந்தைக்கு அதிக காய்ச்சல் இருக்கும் போது, அந்த குழந்தை வீட்டில் இருக்கும் போது, தேவையான நீர் ஆகாரங்கள், அதற்கு தேவையான மருந்துகள், குறிப்பாக அந்த குழந்தைககு ஆபத்து இல்லாத கட்டத்தில் வந்து வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ளலாம். ஆனால் ஏதோவது மூச்சுவிட சிரமமாக இருக்கிறது. இருமல் அதிகமாக இருக்கிறது என்றால் மருத்துவரை சந்திப்பது தான் சிறந்த அணுகுமுறை" என்றார்.

பீதி வேண்டாம்

பீதி வேண்டாம்

குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல் இருந்தாலோ, சளி இருந்தாலோ, உடல் சோர்வு இருந்தாலோ, மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, உடனடியாக மருத்துவர்களை அணுகுவது அவசியம் என்று அரசு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அடுத்த 10 நாட்களுக்குள் வைரஸ் காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிடும் என்பதால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+