படாரென கேட்ட அந்த சத்தம்.. அலறிகொண்டே நிர்வாணமாக மருத்துவமனைக்கு ஓடிய இளைஞன்.. இதுதான் மேட்டர்
டெல்லி: உடலுறவின் போது ஆணுறுப்பு உடைந்ததாக இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
உலகில் ஏராளமான உயிரினங்கள் இருந்தாலும் ஒரு சில உயிரினங்கள் மட்டும்தான் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் திறனை பெற்றிருக்கின்றன. அதில் மனிதனும் ஒருவன். எனவே மனிதர்களால் எப்போது வேண்டுமானாலும் இனப்பெருக்கத்தில் ஈடுபட முடியும். இது இனத்தின் வளர்ச்சிக்கு பெரிய அளவுக்கு உதவி செய்தாலும், இதனால் அவ்வப்போது ஒரு சிலர் சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறார்கள். அப்படி இடியாப்ப சிக்கலில் சிக்கிய நபரின் கதைதான் இது.
டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். அவருக்கு என்ன பிரச்னை என்பது மருத்துவர்களுக்கு சில நிமிடங்கள் வரை புரியவில்லை. பின்னர்தான் அவர் தனக்கு நேர்ந்த சம்பவத்தை விரிவாக கூறியிருக்கிறார். பின்னர் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இது குறித்து அவர் கூறியதாவது "ஞாயிற்றுக்கிழமையான கடந்த 09ம் தேதியன்று மாலை நான் நண்பர்களுடன் பப்-க்கு சென்றேன். அந்த மாலை நேரம் மிகவும் இனிமையாக இருந்தது. எல்லாவற்றையும் நான் ரசித்தேன். அடிவானம், நெரிசல் அதிகம் இல்லாத சாலைகள், சாலையை கை நீட்டி கடக்கும் இளம்பெண்கள், இசை என எல்லாமும் எனக்கு பிடித்திருந்தது.

சொல்லப்போனால் அப்படியொரு மாலை நேரத்தை நான் இதற்கு முன்னர் எதிர்கொண்டது கிடையாது. ஒவ்வொரு வாரமும் நாங்கள் பப்-க்கு வருகிறோம். ஆனால் இதுபோன்று புத்துணர்ச்சியாக இருந்ததில்லை. எனவே ஆர்வமிகுதியில் நான் டேன்ஸ் ஆடினேன். என்னுடன் ஆடுவதற்கு ஒரு பெண் ஒப்புக்கொண்டாள். இது இந்த மாலை பொழுதை மேலும் ரம்மியமாக்கியது. இசையில் நனைந்த நாங்கள் ஒருவரையொருவர் நன்கு தெரிந்ததை போல பழகிக்கொண்டோம். அதிகமாக பேசிக்கொள்ளவில்லை.
பின்னர் இருவருக்கும் செக்ஸ் குறித்து ஆவல் எழுந்தது. எனவே நாங்கள் தனிமையை தேடி ரூமுக்கு சென்றோம். ரூமில் இருவருக்கிடையில் தொடக்கம் முதல் எல்லாம் சிறப்பாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போதுதான் திடீரென சொடக்கு போடுவதை போல சத்தம் கேட்டது. நாங்கள் இருவரும் பயந்துவிட்டோம். என்ன நடந்தது என்றே தெரியவில்லை. எனக்கு என்னுடைய ஆணுறுப்பில் தீராத வலி ஏற்பட்டது. சிறுநீர் கழிக்க முடியவில்லை. வலி உயிர் போகும் அளவுக்கு இருந்தது. ரத்தமும் வடிய தொடங்கியது. எனவே உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தேன்.
என்னை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், எனது ஆணுறுப்பு உடைந்துவிட்டதாக கூறினார்கள். எனக்கு அவர்கள் சொல்வது எதுவும் புரியவில்லை. பின்னர் அவர்கள் உடனடியாக என்னை அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்" என்று பாதிக்கப்பட்ட இளைஞர் கூறியுள்ளார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "இது கொஞ்சம் ரேரான கேஸ்தான். ஆணுறுப்பில் ரப்பர் போன்ற அடர்த்தியான திசுக்கள் இருக்கும். இது டுனிகா அல்புகினியா என்று அழைக்கப்படுகிறது. இந்த திசுக்கள்தான் உடலுறவின்போது ஆணுறுப்பு பெரியதாவதற்கும், பின்னர் சிறியதாவதற்கும் உதவுகிறது.
இந்த திசுக்களில் சில நேரங்களில் முறிவு ஏற்படலாம். அப்படிதான் இந்த இளைஞருக்கும் ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக உடலுறவின் போது போதை பொருள் உட்கொண்டிருந்தால் அதீத வேகத்திலும் வித்தியாசமான கோணத்திலும் இதில் ஈடுபடுவோம். எனவே இந்த சமயத்தில் ஆணுறுப்பில் திசு முறிவு ஏற்படலாம். சம்பவத்தின் போது இளைஞர் CowGirl-ஐ ட்ரை செய்து பார்த்திருக்கிறார். அப்போதுதான் வித்தியாசமான சத்தம் கேட்டிருக்கிறது. பொதுவாக ஆணுறுப்பு முறிவை சில அறிகுறிகள் கொண்டு அறிந்துக்கொள்ளலாம். இந்த முறிவின் போது ஆணுறுப்பிலிருந்து ரத்தம் வரலாம், விறைப்பு தன்மை குறைவாக இருக்கலாம், தீவிர வலி ஏற்படுவதுடன் வலிக்கும் இடத்தில் கருப்பு அல்லது நீல நிறத்தில் தோல் நிறம் மாறி இருக்கலாம்.
இந்த அனைத்து அறிகுறிகளும் சம்பந்தப்பட்ட இளைஞருக்கு இருந்துள்ளது. எனவே நாங்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம். தற்போது அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார். எனவே இதுபோன்ற சிக்கல்களை நீங்களும் எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications