BTS "போதை".. பாடகர் ஹோப்பை திருமணம் செய்ய கொரியாவுக்கு செல்ல துடித்த மாணவி.. பெற்றோரே உஷார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிடிஎஸ் எனப்படும் தென்கொரிய மியூசிக் ஆல்பம் பாடல்களின் மேல் ஏற்பட்ட பித்தால் கல்லூரி மாணவி ஒருவர் கொரியாவுக்கு சென்று பாடகர் ஹோப்பை திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்ததாக மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிடிஎஸ் என்பது 7 உறுப்பினர்களை கொண்ட தென் கொரிய நாட்டு ஆண்களின் இசைக் குழுவாகும். இது 2010ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவர்களுடைய பாடல்கள் பெரும்பாலும் தனிப்பட்ட மற்றும் சமூக வர்ணனைகளை மையமாக கொண்டது. இதனால் இவர்களின் பாடல் வரிகள் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்தன.

Doctors warned parents about BTS addicts in College goers


இந்த குழுவினர் பல ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்கள். பல உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளனர். 2013 ஆம் ஆண்டு 2 கூல் 4 ஸ்கூல் என்ற பாடல் அறிமுகமானது. இந்த குழுவில் கிம் சியோக் ஜின், ஆர்.எம். ஜுங்கூக், ஜே ஹோப், சுகா, வி, ஜிமின் ஆகிய 7 பேர் உள்ளனர்.

கல்லூரி மாணவிகள்: இந்த பாடல்களைத்தான் பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பை உருவாக்கி அதில் புதிய ஆல்பங்களை யார் முதலில் பதிவிடுவது என்ற போட்டிகளையும் நடத்திக் கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல் படம் வரைவது என்றாலும் பிடிஎஸ் மைக்தான். செல்போன் கவர்களிலும் பிடிஎஸ், வால் பேப்பரிலும் பிடிஎஸ்தான். இதனால் படிப்புகளில் கவனம் செலுத்தாத நிலை ஏற்படுகிறது. இவர்களை திட்டினாலும் ஒன்றும் வேலைக்கே ஆகாது. அதே சமயம் இவர்களை அப்படியே விட்டுவிட்டால் தென்கொரியாவுக்கு படையெடுப்பார்கள். எனவே இவர்களை இந்த போதையிலிருந்து வெளியே வரவழைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மருத்துவர் அட்வைஸ்: இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறியதாவது: எந்த காரணத்தையும் கொண்டும் இந்த பிடிஎஸ் பாட்டை கேட்கிறாயே என மாணவிகளை திட்டுவதோ அடிப்பதோ செய்தால் நான் பார்த்தவரை அது நெகட்டிவ்வான விஷயங்களையே கொடுத்துள்ளது. அந்த பிடிஎஸ் பாட்டு இல்லை என்றால் உலகமே இல்லை என்றுதான் சொல்கிறார்கள்.

அந்த பாட்டால் அவ்வளவு இன்ப்ரஸிவ் ஆகிறார்கள். ஒரு பெண் கொரியாவுக்கு போய் அந்த பிடிஎஸ் பாடகர்களில் ஒருவரான ஹோப்பை கல்யாணம் செய்து கொள்வேன் என நிலையாக நின்ற பெண்ணையும் நான் பார்த்திருக்கிறேன். தானாக சிரிப்பார்கள், தானாக பேசுவார்கள், ஹோப்பை வீட்டிற்கு கூட்டிட்டுவாங்கள் என சொல்லக் கூடிய பெண்கள் உள்ளனர்.

பெண் குழந்தைகள்: எனவே பெற்றோர் பெண் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் எந்த மாதிரியான பாடல்களை கேட்கிறார்கள். ஸ்மார்ட் டிவிகளில் எந்த மாதிரியான ஆல்பங்களை திரும்ப திரும்ப பார்க்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். மதுவை சட்டென நிறுத்தினால் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படுமோ, அது போல்தான் இந்த பிடிஎஸ் பார்க்கும் மாணவிகளை பாடல்கள் கேட்பதை தடுத்து நிறுத்தினாலும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

நம் மீது கோபப்படுவார்கள், எப்போதும் சோகமாக இருப்பார்கள். யாரிடமும் பேச மாட்டார்கள். இது பொதுவானதுதான். போக போக சரியாகிவிடும். அவர்களை வேறு ஏதாவது ஒரு ஆக்டிவிட்டியில் சேர்த்துவிட வேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது கோர்ஸ்களில், ஸ்போர்ட்ஸ்களில் சேர்த்துவிடலாம். அப்போது அவர்கள் ரிலாக்ஸ்டாக ஆகிவிடுவார்கள்.

மாற்றுங்கள்: அவர்களை அடிக்கடி வெளியே கூட்டிக் கொண்டு செல்லலாம். சின்ன சின்ன பார்ட்டிகளுக்கு கூட்டி செல்லலாம். இப்படியெல்லாம் செய்தாலே அவர்கள் பிடிஎஸ்ஸிலிருந்து வெளியே வந்துவிடுவார்கள். அவர்களை அடிப்பதோ திட்டவோ கூடாது. அவர்களுக்கு அன்பை கொடுத்தாலே போதும். எல்லாரும் கிடையாது, குறிப்பாக கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள்தான் பிடிஎஸ் மீது பைத்தியமாக இருக்கிறார்கள்.

பிடிஎஸ் இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியே போய்விடுவேன் என்பார்கள். பிடிஎஸ் பாடகர்களை போன்று உடைகள், சிகை அலங்காரம் செய்து கொள்வார்கள். அதை எல்லாம் பார்த்து இன்ப்ரஸ் ஆவார்கள். மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் அவர்களை பிடிஎஸ் போதையிலிருந்து வெளியே கொண்டு வந்துவிடலாம் என்கிறார் மருத்துவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+