அடிக்கடி உடலுறவு கொண்டால் பெண்களுக்கு பிரச்சினை? உடல் எடை அதிகரிக்குமா? மருத்துவர்கள் சொல்வது என்ன
டெல்லி: உடலுறவு கொள்ள ஆரம்பித்தால் உடல் எடை அதிகரிக்குமா.. இது பலருக்கும் இருக்கும் கேள்வி.. பெரும்பாலும் பெண்களின் உடல் எடை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இது உண்மை தானா.. இதற்கு என்ன காரணம்.. பின்னணியில் இருக்கும் சயின்ஸ் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது சமூகத்தில் உடலுறவு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அதில் எவை எல்லாம் உண்மை.. எவை பொய் என்றே தெரியாத அளவுக்குப் பல தகவல்கள் பரவி வருகிறது.

அதில் ஒன்று தான் உடலுறவு கொள்ள ஆரம்பித்தவுடன் உடல் எடை அதிகரிக்கும் என்பது. அதிலும் குறிப்பாகப் பெண்கள் அடிக்கடி உடலுறவு கொண்டால் உடலுறவு அதிகரிக்கும் எனப் பலரும் சொல்லிக் கேட்டிருப்போம். ஆனால், இது உண்மை தானா.. வாங்கப் பார்க்கலாம்.
உடல் எடை அதிகரிக்குமா: அடிக்கடி உடலுறவு வைக்கத் தொடங்கும் போது உடல் எடை அதிகரிக்கும் என்பதே இங்குப் பரவலாக உள்ள பேச்சு.. திருமணமான பல பெண்கள் மற்றும் ஆண்களுக்கு உடல் எடை அதிகரித்து நாம் பார்த்து இருப்போம். அதை வைத்தே பலரும் அடிக்கடி உடலுறவு வைக்கும் போது உடல் எடை அதிகரிக்கும் என்கிறார்கள். ஆனால், உண்மையில் இரண்டிற்கும் தொடர்பு இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
அடிக்கடி உடலுறவு கொள்வதால் எடை அதிகரிக்கும் என்பது ஒரு கட்டுக்கதையாகும்.. இந்த இரண்டிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.. சொல்லப்போனால் அடிக்கடி உடலுறவு என்பது ஒரு வகையில் எடை இழப்புக்கே வழிவகுக்கும். இது குறித்து நாம் பிறகு பார்க்கலாம். அதேநேரம் அடிக்கடி உடலுறவு கொள்ளும் போது சில சிலருக்கு மட்டும் ஓரிரு இடங்களில் கொழுப்பு சேர வாய்ப்பு இருக்கிறது என்றாலும் அது உடல் எடை அதிகரிக்கக் காரணமில்லை.. பெரும்பாலான நேரங்களில் உடல் எடை அதிகரிக்க ஹார்மோன் சமநிலையே காரணமாக இருக்கிறது.
காரணங்கள் என்ன: நமது நாட்டில் மற்றொரு காரணமும் இருக்கிறது. அதாவது திருமணத்திற்கு முன்பு வரை டயர்ட் எல்லாம் இருந்து உடல் எடையை ஃபிட்டாக வைத்திருப்பார்கள். அதேநேரம் திருமணம் முடிந்த பிறகு அதைப் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். மேலும், விருந்து அது இது என்று அதிகமாகச் சாப்பிட ஆரம்பிப்பார்கள். இதுவும் திருமணத்திற்குப் பிறகு உடல் எடை அதிகரிக்கக் காரணமாகும்.

மருத்துவர்கள் மேலும் கூறுகையில், "பொதுவாகவே தனியாக இருப்போர் குறைவான அளவே சாப்பிடுவார்கள். அதேநேரம் ஜோடியாக தம்பதியாக இருப்போர் ஒன்றாக இருக்கும் போது அதிகம் சாப்பிடுகிறார்கள். சில ஆய்வுகளும் இதை உறுதி செய்துள்ளனர். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை பசி ஹார்மோனை அதிகரிக்கும். இதுவும் உடலை எடை அதிகரிக்கக் காரணமாக இருக்கும்" என்றார்.
கர்ப்பம்: அதேநேரம் பெண்கள் கருவுற்றால் அப்போது நிலைமை முற்றிலும் வேறு.. கர்ப்பம் என்பது பெண் உடலை மொத்தமாக மாற்றும்.. கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் பெண்கள் இயற்கையாகவே எடை அதிகரிக்கும்.. இந்தக் காலகட்டத்தில் பெண் உடலின் உணவு தேவை அதிகரிக்கும். கொழுப்பும் அதிகம் சேர்ந்து உடல் எடை அதிகரிக்கும். இது கர்ப்ப கால ஹார்மோனால் ஏற்படுகிறதே தவிர உடலுறவால் இல்லை.
முன்பு கூறியது போல உடலுறவால் உடல் எடை குறையவே செய்யும். நாம் உடலுறவு கொள்ளும் போது கலோரிகள் அதிகம் எரிக்கப்படும். இது கிட்டதட்ட ஒரு உடற்பயிற்சி போலவே இருக்கும். சராசரியாக உடலுறவின் போது 100 கலோரிகள் எரிக்கப்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், உடலுறவின் போது இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 120 முதல் 130 வரை செல்கிறது. இது ரத்த ஓட்டத்தைச் சீராக்கி இதயத்தையும் காக்கிறது.
குறையவே செய்யும்: மேலும், உடலுறவு அதிகம் கொள்ளும் போது, ஆக்ஸிடாஸின் என்ற லவ் ஹார்மோன் அதிகரிக்கிறது.. இது ஒரு வகையில் நமது உடலின் பசியையும் குறைக்கிறது என்கிறார்கள் லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது உடலுறவுக்கும் உடல் எடை அதிகரிக்கும் தொடர்பு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. சொல்லப்போனால் உடல் எடை குறையவே வாய்ப்புகள் உள்ளன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications