முருங்கை பிசின்.. இயற்கையின் தங்க பஸ்பம்.. ஆண்மை கோளாறை போக்கும் முருங்கை பிசின் பொடி.. இதென்ன ஜெல்?
சென்னை: முருங்கை பிசின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? முருங்கை பிசின் ஜெல் எப்படி தயாரிப்பது தெரியுமா?
முருங்கை மரத்திலிருந்து வெளிவரும் கெட்டிப்பொருளே முருங்கை பிசின்.. பிரவுன் நிறத்தில் இருக்கும், இந்த பிசின் நீர்த்தன்மையுடன் காணப்பட்டாலும், நாளடைவில் இறுகிவிடும்.. மரத்தின் பட்டைகளில் இந்த பிசின் காணப்படும்.

முருங்கை மரம்: முருங்கைமரத்திலுள்ள அதிகப்படியான கால்சியம் + சுண்ணாம்புச்சத்து + நார்ச்சத்து போன்றவை அனைத்துமே சேர்ந்து, மரத்திலிருந்து பசை போல வெளித்தள்ளுவதையே பிசின் என்கிறோம். தங்கபஸ்பத்திற்கு இணையான சத்துக்கள் நிறைந்த இந்த பிசினில், ஏகப்பட்ட சத்துக்கள், வேதிப்பொருள்கள், தாது உப்புகள் நிறைந்துள்ளன.
இந்த பிசின்கள் உடலுக்கு வலுவை தரக்கூடியவை.. இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் A, C, பொட்டாசியம், புரதம் சத்துகள் உள்ளதால், பல்வேறு நோய்களை உடலில் குணமாக்குகிறது.
மூட்டு வலி: இந்த முருங்கை பிசினை உடைத்து, நெய்யில் வறுத்து பவுடர் செய்து வைத்து கொண்டு, மருந்தாக பயன்படுத்தலாம். இந்த பிசின்களால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும்.. மூட்டுவலி இருந்தாலும் சரியாகிவிடும்..
முருங்கை பிசின் பொடியை, இரவில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு ஸ்பூன் நெய்யில் லேசாக ஒரு நிமிடம் வறுத்து பிறகு அடுப்பை நிறுத்தி விட்டு, அதிலேயே ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து காலையில் பிசின் தண்ணீரை வடி கட்டி குடிக்கலாம்.. அல்லது சூடான சாதத்தில் கூட ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடலாம். இதனால், உடலில் பலமில்லாதவர்களும் பலம் பெறுவார்கள்.
முருங்கை மரம்: தேவையான அளவு முருங்கைப் பிசினை நாட்டுமருந்து கடையில் வாங்கியோ அல்லது உங்கள் வீட்டின் அருகில் முருங்கை மரம் இருந்தால் அந்த மரத்திலுள்ள பிசினை எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில், அந்த முருங்கை பிசின் மீது உள்ள தூசிகளை நீக்கி கழுவி வைத்துக் கொள்ளவும். அதில் தண்ணீரை ஊற்றி முருங்கைப் பிசினையும் போட்டு ஊறவைத்துவிடவும்.
இரவு முழுவதும் முருங்கைப் பிசினை தண்ணீரில் ஊறியதுமே, அதே நீரில் நன்றாக உடைத்து கலக்கிவிட வேண்டும். இப்போது ஜெல்லி பதத்துக்கு பிசின் வந்துவிடும். இதில், இளஞ்சூடான பசும்பால் சேர்த்து கலந்து குடிக்கலாம்.. முருங்கைப் பிசினை எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் என்பார்கள்.
ஜெல்லி பதம்: ஆக, இந்த முருங்கை பிசின், உடலுக்கு வலுவை தரக்கூடியவை.. இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் A, C, பொட்டாசியம், புரதம் சத்துகள் உள்ளதால், பல்வேறு நோய்களை உடலில் குணமாக்குகிறது. இந்த முருங்கை பிசினை உடைத்து, நெய்யில் வறுத்து பவுடர் செய்து வைத்து கொண்டு, மருந்தாக பயன்படுத்தலாம்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications