குண்டா இருக்கீங்களா.. "கிரீன் டீ" குடிப்பது நல்லது ஓகே.. ஆனா உடல் எடை குறையுமா? பிரச்னை எதாவது வருமா
சென்னை: உடல் எடையைக் குறைக்க கிரீன் டீ குடிப்பது பேஷனாகிவிட்ட நிலையில், இது உண்மையில் நமது உடல் எடையைக் குறைக்க எந்தளவுக்கு உதவுகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உடல் பருமன் என்பது இப்போது உலகளவில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. இப்போதெல்லாம் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் கூட உடல் பருமனால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பல நோய்களும் வருகிறது.

எனவே, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது முக்கியமாகிறது. உடல் பருமனாக உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்கப் பல யுக்திகளை கடைப்பிடிக்கிறார்கள். அதில் முக்கியமானது க்ரீன் டீ. ஆனால், இது எந்தளவுக்குப் பயனுள்ளதாக உள்ளது என்பதை நாம் பார்க்கலாம்,
இந்த காலத்தில் எடை குறைக்க க்ரீன் டீ குடிக்கிறேன் என்று சொல்வதே ஒரு பேஷன் ஆகிவிட்டது. அதற்குப் பெரு நிறுவனங்களின் விளம்பரங்கள் முக்கிய காரணம் என சொல்லலாம். இது உண்மையில் பயன் தருகிறதா என்று பார்க்கும் முன்பு இந்த க்ரீன் டீ என்றால் என்ன.. அதை எப்போது எப்படிக் குடிக்க வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பல டேஸ்ட்களில் டீ நமக்குக் கிடைத்தாலும்.. அவை அனைத்தும் காமெலியா சினென்சிஸ் என்ற ஒரே தாவரத்திலிருந்து தான் வருகிறது. இந்த காமெலியா சினென்சிஸ் செடியின் இலைகளை வேக வைத்துத் தான் கிரீன் டீ தயாரிக்கப்படுகிறது. அதேநேரம் வழக்கமான டீ தூளைத் தயாரிக்கும் முறையில் இருந்து இது சற்று வேறுபட்டு இருக்கும் இதன் காரணமாகவே, இந்த வகை டீத்தூளில் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.
உடலுக்கு நல்லது எல்லாம் சரி.. ஆனா எப்போது பால் குடிக்க வேண்டும்.. எவ்வளவு குடித்தால் உடலுக்கு நல்லது
தினசரி 2 அல்லது 3 கப் சூடான கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நன்மை தரும்.. கிரீன் டீ கூட இப்போது பல வகைகளில் வர ஆரம்பித்துவிட்டன. இருப்பினும், அனைத்தும் உடலுக்கு நல்லதுதான். ஆனால், முடிந்தவரை குறைவாகப் பதப்படுத்தப்பட்ட டீ தூள்களை வாங்குங்கள். அதுவே உடலுக்கு அதிகபட்ச நன்மையைத் தரும். சரி இப்போது விஷயத்திற்கு வரும் கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறையுமா..
நாம் சாப்பிடும் உணவு மற்றும் பானங்களை உடலுக்குத் தேவையான எனர்ஜியாக மாற்றும் செயல்முறை தான் மெட்டபாலிசம் என்று அழைக்கப்படுகின்றன. கிரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தை சிறப்பாகச் செயல்பட உதவுவதன் மூலம் எடை இழப்புக்குப் பயனுள்ளதாக இருக்கும். கிரீன் டீயில் காஃபின் மற்றும் கேடசின் எனப்படும் ஒரு வகை ஃபிளாவனாய்டு உள்ளது, இது ஒரு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகும். இந்த இரண்டும் மெட்டபாலிசத்தை வேகப்படுத்துகிறது.

கேடசின் அதிகப்படியான கொழுப்பை உடைக்க உதவுகிறது. அதேநேரம் கேட்டசின் மற்றும் காஃபின் இரண்டும் சேர்ந்து உடல் பயன்படுத்தும் எனர்ஜியை அதிகரிக்கிறது. இது உடல் எடை குறைப்பிற்கு உதவினாலும் கூட அதன் பயன் மிகக் குறைவாகவே உள்ளதாகக் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதாவது இதனால் நமக்குக் கிடைக்கும் நன்மை குறிப்பிடத்தக்க அளவுக்கு இல்லை என்று கூறப்படுகிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கிரீன் டீ உடல் எடை குறைப்பைச் செயல்முறையைத் தூண்டும் என்ற போதும் அது குறிப்பிடத்தக்க அளவுக்கு இல்லை.. உதை விட உடற்பயிற்சி மற்றும் டயட் மூலம் நம்மால் வேகமாக எடையைக் குறைக்க முடியும்.. இத்துடன் நமது உணவில் காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்வதும் உடல் எடை குறைப்பு பயணத்தை விரைவுபடுத்தும்.
இது மட்டுமின்றி கிரீன் டீயில் கூட காஃபின் இருப்பதால் அது இதய பிரச்சினைகள் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, விளம்பரங்களைப் பார்த்து அடிக்கடி க்ரீன் டீ குடிப்பவர்கள் இதைக் கவனத்தில் கொள்ளவும்.
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை மருத்துவ ஆலோசனையாக நிச்சயம் எடுத்துக் கொள்ளக்கூடாது.. உடலில் எதாவது பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரை நாடவும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications