Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோசைக்கு அரைக்கறீங்களா? வெந்தயம் யூஸ் பண்றீங்களா? இட்லி மாவு பாக்கெட்டில் இதை கவனியுங்க.. முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இட்லி சத்தான உணவு.. அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு.. எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு.. எனினும் வெறும் அரிசியில் மாவு அரைத்து இட்லி வார்ப்பதைவிட, தானியங்களை பயன்படுத்தி இட்லி சாப்பிடும்போது, கூடுதல் சத்துக்கள் கிடைக்கின்றன.. இட்லி மாவு வீட்டில் அரைப்பதாகவே இருந்தாலும் அதனை 3 நாட்களுக்கு மேல் வைத்திருந்து பயன்படுத்த கூடாது.. ஏன் தெரியுமா? சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் எந்தெந்த வகைகளில் இட்லி சாப்பிடலாம்?

எண்ணெய், கொழுப்பு இல்லாமல், கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள உணவாக இருப்பதாலும், ஆவியில் வேகவைத்து எடுப்பதாலும் இட்லி ஆபத்தான உணவாக கருதப்படுவதில்லை..

Idly Batter Dosa flour Fenugreek

எனினும், கலோரி, மாவு சத்து நிறைந்திருப்பதால்தான், நீரிழிவு நோயாளிகளை இட்லி சாப்பிட வேண்டாம் என்றும் அரிசிக்கு பதிலாக ரவா, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை சேர்த்து இட்லி செய்து சாப்பிடவும் சொல்கிறார்கள.

பாசிப்பருப்பு எதற்காக

இதனால், இரும்புச்சத்து நிறைந்த உணவாக இட்லி மாறுகிறது.. ரத்த செல்களுக்கு ஆக்ஸிஜனேற்றம் உண்டாகும்.. ரவா இட்லி வார்ப்பதாக இருந்தால் கேரட் துருவி சேர்த்து கொள்ளலாம். அரிசி இட்லி என்றால் 2 இட்லிககு மேல சாப்பிடக்கூடாது.. ரவா இட்லி, ராகி இட்லி, ஓட்ஸ் இட்லி என்றால் 3 சாப்பிடலாம். இட்லிக்கு பெரும்பாலும் பாசிப்பருப்பு, சோம்பு சேர்த்து சாம்பார் சேர்த்து கொண்டால், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.

அரிசியும் உளுந்தும் சேர்த்து அரைக்கும்போது, சிறிது பாசிப்பயறு சேர்த்து அரைத்தால் நன்மைகள் அதிகமாகும்.. ஏனென்றால், புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்B6, நியாசின், ஃபோலேட் போன்றவை பாசிப்பருப்பில் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஜீரண மண்டலத்தையும் பலமாக்குகிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால், உடல்சூடு, உடல் கழிவு வெளியேறும்.

மரவள்ளிக்கிழங்கு

பெரும்பாலும் பாக்கெட் மாவை தவிர்க்கலாம்.. ஏனெனில் சில பிராண்டுகளில் அரிசி மாவில் உளுந்து அளவை குறைத்து, மரவள்ளிக்கிழங்கின் கழிவுகளை சேர்த்துவிடுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.. அதுமட்டுமலல, மாவு புளிக்காமல் இருக்க, கால்சியம் சிலிக்கேட் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறார்கள். இவ்வளவு கெமிக்கல்கள் இருப்பதால், ஒருநாளுக்கு மேல் பாக்கெட் மாவை வைத்து பயன்படுத்தக்கூடாது.

3 நாளைக்கு மேல் வேண்டாம்

வீட்டில் அரைத்த மாவு என்றாலும் 3 நாளைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.. இட்லி , தோசை மாவு நொதித்து வரும் தன்மையுடையது. அதில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாகவே இருக்கும். மாவை ஒரு வாரத்துக்கு பயன்படுத்தும்போது, பாக்டீரியாக்கள் நச்சுக்களை உருவாக்குகிறது. அதேபோல, ஒரே பாத்திரத்தில் மாவை வைத்திருக்கும்போது பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்... பழைய மாவு நச்சாக மாறிவிடும்..

அதேபோல, இட்லி, தோசைக்கு அரைக்கும்போது வெந்தயம் சேர்த்து அரைக்கக்கூடும்.. 3 நாள் மாவு பயன்படுத்தினால், உடலில் வீக்கத்திற்கு வழிவகுக்கும். வாய்வு, வயிற்று அசௌகரியம் போன்ற செரிமான பிரச்சனைகள் உணடாகும். இதய நோய் உள்ளவர்களுக்கு இதை தரக்கூடாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+