Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முட்டையின் மஞ்சள் கரு நல்லதா கெட்டதா? முட்டை போட சேவலுடன் கோழி இணை சேரணுமா? டாக்டர் பரூக் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முட்டையை சாப்பிடும் போது அதன் மஞ்சள் கருவை மட்டும் வெறுப்பது ஏன் என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பறவை இனங்களைப் பொருத்தவரை அவற்றுக்கு மனித இனங்களின் பெண்களைப் போலவே சினைப்பையில் இருந்து சினைமுட்டை வெளியேறும். மனித இனத்தின் பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை ஒரு முட்டை வெளியேறுகிறது. அதை ஆணின் விந்தணு கருவுறச் செய்தால், கரு தாயின் கர்ப்பபையில் ஒட்டிக் கொண்டு தாயிடம் இருந்து சத்துகள் / ரத்தம் / ஆக்சிஜனை பெற்று சிசுவாக வளர்கிறது.

Dr Farook Abdulla advises which one is better Eggs Yellow yolk Vs White

கோழி இனத்தில் அதன் முட்டை ஒவ்வொரு நாளும் வெளியேற்றப்படுகிறது. ஏன் கோழி முட்டை மற்றும் இதர பறவை இனத்தின் முட்டைகள் ஓடு மூலம் பாதுகாக்கப்பட்டு இடப்படுகின்றன ? பறவை இனத்திற்கு சிசுவை அதன் கர்ப்பபையில் வைத்து வளர்க்குமாறு இயற்கை இல்லை. மாறாக அதன் குஞ்சு தாயின் உடலுக்கு வெளியே வளர்ந்து உயிர்பெற்று வருமாறு அதன் இயற்கை உள்ளது.

அதனாலேயே கோழிக் குஞ்சு வளர்வதற்கு ஏற்ற அத்தனை சத்துகளும், உணவும் முட்டையில் வைத்து பத்திரமாக பேக் செய்யப்பட்டு ஒரு கடினமான பேக்கிங் செய்யப்பட்டு இடப்படுகிறது. இந்த முட்டையை சரியான வெப்பத்தில் அடைகாப்பதால் குஞ்சு பொரிக்கும். அதில் இருந்து கோழிக் குஞ்சு வெளியே வரும். நிற்க! கோழி மற்றும் இதர பறவை இனங்கள் முட்டை இட ஒவ்வொரு முறையும் சேவலுடன் இணை சேர வேண்டுமா ? இல்லை. மனித இனத்தைப் பொருத்தவரை கர்ப்பபையில் கரு உண்டாக ஆணின் விந்தணு அவசியம்.

ஆனால் பறவையினங்களைப் பொருத்தவரை அது சேவலுடன் இணை சேர்ந்தாலும் சேராவிட்டாலும் தினந்தோறும் முட்டை போட்டுக் கொண்டே இருக்கும். சேவலுடன் இணை சேர்ந்த பின் இடப்படும் முட்டையில் ( விந்தணு+ முட்டை = கரு) இருக்கும். இது குஞ்சு பொரிக்கும். இணை சேராமல் போடப்படும் முட்டையில் ( சினை முட்டை மட்டும் ) இருப்பதால் குஞ்சு பொரிக்காது. இவ்வாறாக முட்டையில் மஞ்சள் கரு அதற்கு மேல் வெள்ளைக் கரு கோட்டிங் அதற்கு மேல் கடினமான ஓடு என்று வெளியேறும் இந்த முட்டை மனிதர்களுக்கு முக்கியமான ஊட்டச்சத்துகளை தரும் உணவாக உள்ளது.

Dr Farook Abdulla advises which one is better Eggs Yellow yolk Vs White

பெரும்பான்மை அறிவுரைகளில் முட்டையின் வெள்ளைக் கரு மட்டுமே உண்ண வேண்டும் என்றும் மஞ்சள் கருவை தீண்டுவது தவறு என்றும் கூறப்படுகிறது. அந்த அறிவுரைகளில் அளவற்ற அச்சம் இருக்கிறதே அன்றி அறிவியல் இல்லை. தானியங்களை அதன் வெளிப்புற கோட்டிங் ஆன உமியுடன் முழுவதுமாக உண்ணக் கூறும் அறிவுரைகள் பழங்களைக் கூட அதன் தோலை மட்டும் சாப்பிட வேண்டும். உள்ளே உள்ள முக்கியமான உண்ணக் கூடிய பகுதியை தூக்கி எரிந்து விட வேண்டும் என்று யாரும் கூறினால் ஏற்போமா?

முட்டையை மட்டும் அதன் வெறிப்புறத்தை மட்டும் உண்ண வேண்டும். மஞ்சள் கருவை தூரப் போட்டு விட வேண்டும் என்று கூறுவது அறிவியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் பிழையான அறிவுரையாகும். இது குறித்து பரிந்துரை செய்யும் எனதருமை சகோதர சகோதரிகள் மேலதிகமாக சிந்திக்க வேண்டுகிறேன். முட்டையின் மஞ்சள் கரு மேல் மட்டும் ஏன் இந்தப் பழி வந்தது? அதில் கலந்திருக்கும் கொலஸ்ட்ரால் எனும் பொருளால் மட்டுமே அது தீண்டத்தகாத பொருளாக மாறி நிற்கிறது.

கொலஸ்ட்ரால் என்பது அத்தனை தீண்டத்தகாத பொருள? ஐந்தறிவு மட்டும் பெற்ற அஃறிணை உயிரினமான கோழி தனது கோழிக் குஞ்சு உயிர் பிழைக்க எப்படி மனிதத்தாய் தனது பிள்ளைக்கு உணவை கரிசனத்துடன் பேக் செய்து அனுப்புவாளோ? அதைப் போல தனது உடலில் இருந்து பல சத்துகளை அந்த முட்டைக்குள் வைத்து பேக் செய்கிறது. அந்த சத்துகளுள் தனது சிசுவுக்கு கொலஸ்ட்ராலையும் ஏன் பேக்கிங் செய்ய வேண்டும்?

Dr Farook Abdulla advises which one is better Eggs Yellow yolk Vs White

முட்டையின் ஏனைய அனைத்து சத்துகளும் மனிதனுக்கு மிகவும் முக்கியமானவையாக இருக்கும் போது அதில் இருக்கும் கொலஸ்ட்ரால் மட்டும் கெட்டதாக மாறியது / மாற்றப்பட்டது ஏன்? முட்டையின் மஞ்சள் கருவில் விட்டமின் ஏ ( கண் நலம்), கால்சியம்/ விட்டமின் டி ( எலும்பு நலம்) , பொட்டாசியம் / மெக்னீசியம் ( இதய நலம்) , விட்டமின் பி6 / பி12 ( நரம்பு மண்டல நலன்) ஆகிய அனைத்து நல்லவைகளையும் வைத்திருக்கும் மஞ்சள் கருவை அதில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என்ற ஒரு காரணத்தைக் கூறி குப்பையில் வீசுவதும் தகுமோ?

இவையெல்லாம் குறித்து சிந்திக்க அறிவியல் ஞானம் தேவையில்லை. தர்க்க ரீதியாக சிந்திக்கும் ஆறாம் அறிவு இருந்தால் போதும். உணவு மூலம் உண்ணும் கொலஸ்ட்ராலுக்கும் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலுக்கும் ஓரளவுக்கு தான் தொடர்புபடுத்த முடிகிறது. நமது ஒவ்வொரு செல்களின் பாதுகாப்பு அரண்களான ப்ளாஸ்மா மெம்ப்ரேன் எனும் சுவர் பாஸ்ஃபோ லிபிட் எனும் கொலஸ்ட்ரால் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைக்க உதவும் ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அனைத்துக்கும் கொலஸ்ட்ரால் தேவை.

Dr Farook Abdulla advises which one is better Eggs Yellow yolk Vs White

நம் இனம் தழைத்தோங்க உதவும் இனப்பெருக்க ஹார்மோன்களுக்கு கொலஸ்ட்ரால் தேவை. இதன் காரணமாகத் தான் நாம் உண்டாலும் உண்ணாவிரத்தில் இருந்தாலும் கொலஸ்ட்ராலை நமது கல்லீரல் உற்பத்தி செய்யும் ஆற்றலுடன் விளங்குகிறது. இதய நோய்க்கும் இதய ரத்த நாள அடைப்புக்கும் மூளை ரத்த நாள அடைப்புக்கும் உணவில் மாவுச்சத்து அதிகமாக உட்கொள்வதும் இனிப்பு சுவை கொண்ட உணவுகளுக்கு அடிமையானதும் மது புகை போன்ற போதை வஸ்துகளும் உடல் உழைப்பற்ற மன அழுத்தம் நிரம்பிய பணத்தை மட்டுமே நோக்கி ஓடக்கூடிய நமது வாழ்க்கை முறை தான் காரணம்.

அதை விடுத்து முட்டையில் உள்ள மஞ்சள் கரு மேல் மட்டும் பழியைப் போட்டு நாம் தப்பித்துக் கொள்ள முடியுமா ? கொலஸ்ட்ராலை வில்லனாகப் பார்க்கும் போக்கு மாற வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாக வைத்து இந்தப்பதிவை முடிக்கிறேன். இவ்வாறு தனது பதிவில் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+