குழந்தைக்கு காய்ச்சல், லேசான சளி, இருமல் இருந்தால் போலியோ சொட்டு மருந்து வழங்கலாமா?
சென்னை: குழந்தைகளுக்கு சளி இருந்தால் போலியோ சொட்டு மருந்து வழங்கலாமா என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்பான சில கேள்விகள் அதற்கான பதில்கள் .

போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடக்கும் போதெல்லாம் சில கேள்விகள் எழுகின்றன. அவை என்ன என்பதையும் அதற்கான பதிலையும் பார்க்கலாம்.
இது குறித்து கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள்
1. எனது குழந்தை பிறந்த சில நாட்களே ஆகின்றன. அப்போதும் இந்த சொட்டு மருந்து வழங்க வேண்டுமா?
ஆம்.
குழந்தை நேற்று பிறந்திருந்தாலும் இன்று சொட்டு மருந்து வழங்க வேண்டும். ஐந்து வயது நிறைவடைந்து விட்டால் தேவையில்லை
ஐந்து வயது நிறைவடைய இன்னும் சில நாட்களே இருந்தாலும் இந்த சொட்டு மருந்து வழங்க வேண்டும்.
2. எனது குழந்தைக்கு பத்தாவது வாரத் தடுப்பூசித் தவணையை சென்ற வாரம் தான் வழங்கினோம். அதிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இப்போதும் இந்த முகாமில் பங்கேற்கலாமா?
ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து வழக்கமான தடுப்பூசித் தவணையில் வழங்கப்பட்டிருந்தாலும்
மீண்டும் தற்போது வழங்குவதால் எந்த பிரச்சனையும் இல்லை.
3. என் குழந்தைக்கு லேசான சளி இருமல் இருக்கிறது. இந்த சொட்டு மருந்து முகாமில் பங்கேற்று வழங்கலாமா?
லேசான சளி இருமல் லேசான காய்ச்சல் இருந்தாலும் போலியோ சொட்டு மருந்து வழங்கலாம். அதீத குளிர்ந்தகாய்ச்சல் / அதீத சளி / நியுமோனியா போன்ற தீவிர பிரச்சனைகள் இருந்தால் இந்த முகாமில் பங்கேற்காமல் இருப்பது நல்லது. தங்களது குழந்தைகள் நல நிபுணரின் பரிந்துரையைக் கேட்பதும் நல்லது.
4. ஏற்கனவே சமீபத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் இப்போதும் வழங்கலாம் என்பதன் பின் இருக்கும் அறிவியல் என்ன?
ஆம்... ஒவ்வொரு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் போதும் நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி ஒவ்வொரு முறையும் அதிகரிக்குமாறு அந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் ஐந்து வயதுக்குள் - பத்துக்கும் மேற்பட்ட முறைகள் வழங்கப்பட்டாலும் எதிர்ப்பு சக்தி அதற்கேற்றாற் போல அதிகரிக்கும் வண்ணம் செயல்படுகிறது.
5. இந்தியாவில் தற்போது போலியோவை ஒழித்து விட்டோமே? பிறகு எதற்கு இந்த முகாம் ?
இந்தியாவில் போலியோ வைரஸ் சுழற்சி ஒழிக்கப்பட்டிருந்தாலும் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் போலியோ வைரஸ் சுழற்சி இன்னும் நிகழ்ந்து வருகிறது. வைரஸ்களுக்கு நாடு கண்டம் என்ற எல்லை தெரியாது. எனவே உலகம் முற்றிலும் இருந்து போலியோ வைரஸ் பரவலை ஒழிக்கும் வரை நம் நாட்டில் போலியோ வைரஸ் சுழற்சியை முற்றிலும் இல்லாமல் செய்வதற்கு போலியோ சொட்டு மருந்தை வாய்வழியாக இது போன்ற முகாம்களில் வழங்குவது நல்ல வழிமுறை. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications