சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
சென்னை: சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: டயாபடிஸ்ல ரத்த சர்க்கரை அளவுகள் அதிகமாக இருக்குறதுனால உண்மையிலேயே என்ன நடக்குதுனு பார்ப்போம் . நம்ம உடலோட கட்டுமானத்துல அடிப்படையான அமைப்பு - செல்கள். இந்த செல்கள் ஒன்றிணைந்து திசுக்களாகுது.

திசுக்களின் கோர்வை தான் உறுப்புகள், எலும்புகள், தசைகள் நரம்புகள்னு நம்ம உடல் உருவாகுது நாம எப்டி உயிர் வாழ மூச்சு விடுறோமோ அது போல நம்ம செல்களும் மூச்சு விடுகின்றன.. பொதுவாக ரத்தத்தில் சரியான அளவு க்ளூகோஸ் இருக்கும் போது கிடைக்கிற க்ளூகோஸைப் பிளந்து க்ளைகாலிசிஸ் மூலமா தனக்குரிய எரிபொருள உருவாக்கிக்குது.
இதன் இறுதிப் பொருளா பைருவேட்ங்குற பொருள் கிடைக்குது. இதை நமது செல்கள் மீண்டும் தனது எரிபொருள் தேவைக்கு உபயோகப்படுத்திக் கொள்கின்றன. ஆனால் அதுவே டயாபடிஸ் நோய் நிலையில் தேவைக்கும் மீறி க்ளூகோஸ் கிடைக்கும் போது அளவுக்கு மிஞ்சிய க்ளூகோஸ், நார்மல் வழில போகாம வேற ஒரு ரூட் எடுக்குது. இதன் விளைவாக அளவுக்கு அதிகமாக சார்பிட்டால் அப்படிங்கிற உயிர் வேதியியல் ரசாயனம் உருவாகுது.
இந்த சார்பிட்டால் நமது செல்களுக்குள் செல்ல இயலாது. எனவே மீண்டும் செல்களால் பயன்படுத்த இயலாது. கூடவே இந்த சார்பிட்டால் நொதிவினை காரணமாக ஃப்ரக்டோஸாக உருமாற்றம் அடைகிறது. இதனால் செல்களுக்குள் சவ்வூடு பரவல் அழுத்த நிலை ஏற்படுகிறது. இதனுடன் நில்லாமல் அளவுக்கு மிஞ்சிய க்ளூகோஸை சார்பிட்டாலாக உருமாற்றம் செய்யும் ஆல்டோஸ் ரிடக்டேஸ் நொதியின் விளைவால் உடலில் க்ளூடோதையான் அளவுகள் குறைகின்றன.
இதனால் ஊறு செய்யும் உயிர்வழித் தோன்றிகளின் அளவுகள் (REACTIVE OXYGEN SPECIES) கூடுகின்றன. இது செல்களுக்கு ஊறு விளைவிக்கின்றன. ஆல்டோஸ் ரிடக்டேஸ் நொதி நமது நரம்புகளின் செல்களிலும் ரத்த நாளங்களின் உட்புற சுவர்களிலும் உற்பத்தி ஆகின்றது. ரத்தத்தில் க்ளூகோஸ் அளவுகள் தேவைக்கும் அதிகமாகும் போது இந்த நொதியானது அதிகமாக சுரக்கின்றது.
இன்னும் ரத்தத்தில் க்ளூகோஸ் அதிகமாக இருக்கும் போது சார்பிட்டால் மூலம் உருவான ஃப்ரக்டோஸ் -> 3 டீஆக்சி க்ளூகோசோனாகவும் க்ளைகாலிசிஸ் வழியில் தோன்றும் கிளிசரால்டிஹைடு 3 பாஸ்பேட் -> மெத்தில் க்ளைஆக்சாலாகவும் உருமாற்றம் அடைந்து செல்களில் சேருகின்றன.
இவற்றால் செல்களுக்கு அதிகமான ஊறு நேர்கிறது. இவை நரம்பு செல்களிலும் ரத்த நாளங்களின் உட்புற சுவர்களிலும் அதிக பாதிப்பை உண்டாக்குகின்றன. இதனாலேயே நமது ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக க்ளூகோஸ் இருக்கும் ஒவ்வொரு கணமும் நமது செல்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. டயாபடிசின் நீண்ட கால பாதிப்புகளான நீரிழிவினால் ஏற்படும் நெஃப்ரோபதி - சிறுநீரக பாதிப்பு, நியூரோபதி - நரம்பு மண்டல பாதிப்பு , ரெட்டினோபதி - கண் விழிப்படல பாதிப்பு, இதய ரத்த நாள பாதிப்பு, மூளை ரத்த நாள பாதிப்பு, மூளை தேய்மானம் என அனைத்தும் ஏற்படுகின்றன.
ரத்தத்தில் க்ளூகோஸ் அளவுகளை கட்டுக்குள் வைப்பது என்பது நீரிழிவின் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளும் முக்கிய யுக்தியாகும் உணவில் மாவுச்சத்தை வெகுவாகக் குறைத்து உண்பது தேவையான புரதம் மற்றும் ஆரோக்கியம் தரும் கொழுப்புணவை உண்பது உடல் உழைப்பை அதிகப்படுத்துவது, மன அழுத்தம் குறைத்து நல்ல உறக்கம் காண்பது முறையான சரியான அறிவியல் ரீதியான மருத்துவம் செய்து சிகிச்சை பெறுவது நோயைத் தொடர்ந்து கண்காணிப்பது ஆகியவற்றால் ரத்த க்ளூகோஸ் அளவுகளை சரிவர பராமரித்து நீரிழிவை கட்டுக்குள் வைக்க முடியும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications