Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரம்! இடுப்பு எலும்பு உடைந்து! பிறப்புறுப்பில் ரத்தம்! நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் விஷயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து டாக்டர் ஃபரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் ஃபரூக் அப்துல்லா கூறியதாவது: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் விஷயத்தில் அதிகாரமும் பணமும் இருந்தால் நம் நாட்டில் எத்தனை வீரியமான குற்றத்தையும் குற்றவாளிகளையும் தப்ப வைக்க முடியும் என்பதை பறைசாற்றும் நிகழ்வாக மாறிப்போயுள்ளது.

health kolkatta

இதுவரை இந்த நிகழ்வு குறித்த அ னா ஆவன்னா கூட அறியாதவர்களுக்காக நடந்தது என்ன? ஆகஸ்ட் 9,2024 அன்று கொல்கத்தா ஆர் ஜி கர் அரசு மருத்துவமனையில் அதாவது மாநிலத்தின் தலைநகரில் அரசு நிர்வாகத்தால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரியில் பணியில் இருக்கும் போதே ஒரு பெண் மருத்துவர் இதுவரை அடையாளம் காணப்படாத வல்லூறுகளால் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு அவரது இடுப்பு எலும்பு உட்பட பல முக்கிய உறுப்புகள் உடைக்கப்பட்டு கண் வாய் பிறப்புறுப்பில் ரத்தம் ஒழுகும் நிலையில் அன்று காலை பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

உடனே மருத்துவமனை நிர்வாகம் என்ன செய்திருக்க வேண்டும்? நிகழ்ந்த கொலைக்கு உடனடியாக காவல் துறையில் புகார் எழுப்பி இருக்க வேண்டும். ஆனால் பெற்றோருக்கு உங்கள் பெண் தற்கொலை செய்து கொண்டார் என்று போன் செய்து வர சொல்லி இருக்கிறார்கள். இதைக் கேட்டு பதறி அடித்து பார்க்க வந்த பெற்றோர் மற்றும் உறவினருக்கு மூன்று மணிநேரங்கள் இறந்த பிரேதத்தை காட்டவில்லை.

குற்றம் நடந்த இடத்தில் ப்ளூ டூத் ஹெட் செட் கிடந்ததாகவும் அது போலீஸுக்கு உதவி வேலை செய்யும் ஒருவனுடையது என்று தெரியவந்ததால் அவனும் சிசிடிவியில் அங்கு காணப்பட்டதால் சந்தேகத்தின் பெயரில் அவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். அவனைத் தவிர இன்னும் பலர் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கும் வாய்ப்பு உண்டு என்பதை அறிந்தும் கூட காவல் துறையால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை.

இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கூடவே குற்றம் நடந்த இடம் யாரும் உள்ளே செல்ல முடியாத படி சீல் செய்யப்பட்டிருக்க வேண்டிய நிலையில் , குற்றம் புரிந்தவர்கள் தங்கள் உடலையும் கையையும் சுத்தம் செய்ய பயன்படுத்திய குளியலைறையை புணர் நிர்மானம் செய்ய இடிக்க அனுமதித்தது ஏன்? நிகழ்ந்த குற்றத்தை கண்டித்தும் இதற்கு நீதி கேட்டும் கூடிய மருத்துவர்கள் மற்றும் மக்கள் மீது குண்டர்களை ஏவி விட்டு வன்முறை தாக்குதல் ஏன் நிகழ்த்தப்பட வேண்டும்?

இத்தனை பிரச்சனைகள் நடக்கும் போதும் எந்த சீரிய முடிவுகளும் எடுக்காத அந்தக் கல்லூரி முதல்வர் அவரது பதவியை ராஜினாமா செய்த அடுத்த நான்கு மணிநேரத்தில் வேறொரு கல்லூரியில் முதல்வராக பணியமர்த்தப்படுகிறார். இந்த கொடுமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் தலையிட்டு அந்த கல்லூரி முதல்வரை மற்றொரு கல்லூரிக்கு முதல்வராகக் கூடாது என்றும் விடுப்பில் தான் செல்ல வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

கொல்கத்தா போலீஸ் இந்த வழக்கில் காட்டும் ஆர்வத்தைப் பார்த்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்தது. உண்மையில் மனம் வலி கொள்கிறது. ஒரு பெண் முதல்வர் ஆட்சி செய்யும் மாநிலத்தில் ஒரு பெண் மருத்துவருக்கு இத்தகைய அநீதி நடந்து ஒரு வாரம் ஆகப்போகிறது. இன்னும் அந்த மாநில ஆட்சி அதிகாரத்தால் போலீஸ் துறையால் அந்த மருத்துவமனைக்குள் சுற்றித் திரியும் வல்லூறுகளை அடையாளப்படுத்தி நீதி விசாரணை நடத்த இயலாமல் இருப்பதும் அமைதி வழி போராட்டம் மீது குண்டர்கள் வெறியாட்டம் ஆடியிருப்பதைப் பார்க்கும் போதும். உண்மையில் ஆளும் அந்த அரசின் மீதும் சந்தேகத்தை எழுப்புகிறது.

நம் நாட்டில் பணமும் அதிகாரமும் இருப்பின் நாம் செய்யும் தவறுகளில் இருந்து தண்டனையின்றி தப்பித்துக் கொள்ள இயலும் என்று பலரும் கூறும் போது அது வெறும் செய்தியாக தான் நமக்குத் தெரிகிறது. ஆனால் நம்மில் ஒருவர் பலிகடா ஆகும் போது தான் அந்த வலி நமக்குப் புரிகிறது. இத்தகைய மாபாதக செயலைச் செய்து விட்டு அந்த வல்லூறுகள் சுதந்திரமாகச் சுற்றி வருகின்றன என்பதை நினைக்கவே அருவருப்பாக உள்ளது.

உண்மையில் இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்ற தகப்பனாக எனது மனம் அதிகமதிகம் இது குறித்து சிந்தித்து நொந்து போகிறது. மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், இது மருத்துவர்களுக்கான பிரச்சனை என்று மட்டும் நினைக்காதீர்கள். இது நாடு முழுவதும் உள்ள பெண்கள் பணியிடப் பாதுகாப்பு சார்ந்த பிரச்சனை, அரசியல் சார்பு நிலைகளைக் கடந்து இதை அணுகி இங்கிருந்து நம் சிந்தனையிலும் அணுகுமுறையிலும் மாற்றங்களைச் செய்து இதன் மூலம் பாடம் கற்று விட வேண்டும்.

இறந்த சகோதரிக்கு நீதி வேண்டும். நாடு முழுவதும் பெண்கள் கல்வி கற்கும் இடங்களிலும் பணிபுரியும் இடங்களிலும் சமரசமற்ற பாதுகாப்பு வேண்டும். இதுவே நம் கோரிக்கை இதில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம். இவ்வாறு டாக்டர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+