சுகர் குறைய வாக்கிங் போறீங்க! வழியில பஜ்ஜி, போண்டாவை ஏன் சாப்பிடுறீங்க? ஸ்னாக்ஸ்தானே வேணும் பிடிங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்க்கரை நோயாளிகள் பிஸ்கட் , வடை, போண்டா, பஜ்ஜியை சாப்பிடக் கூடாது என டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் அன்பிற்கினிய நீரிழிவுக் (சுகர்) குறைபாடு உடைய சகோதர சகோதரிகளே... ஸ்நாக்ஸுனு சொல்லி நீங்க என்ன சாப்புடுறீங்க சொல்லவா. பிஸ்கட்டுக்கள்/ ரஸ்க்குகள் ப்ளாஸ்டிக் டப்பால போட்டு காத்து போகாம அடைச்சு வச்சு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் டீயுடன் ரெண்டு மூணு சாப்புட்றீங்க (பிஸ்கட்ல சுகர் இருக்கு).

Dr Farook Abdulla says that Sugar patients should not eat snacks

அதுலயும் சுகர் குறைவா இருக்குற பிஸ்கட்டுகள்னு நீங்களே நினைச்சுக்கிட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்குற அனைத்து பிஸ்கட்டுகளிலும் சீனி / சர்க்கரை கலந்து தான் செய்யப்படுது. சில பேர் ஸ்நாக்ஸா வாழைப்பழம் சாப்புட்றீங்க (வாழைப்பழத்துல சுகர் இருக்கு) இனிப்பான பழங்கள் அனைத்துமே சுகர் நோயாளிகளுக்குக் கெடுதல்.

இன்னும் சில பேர் காலை வாக்கிங் போய்விட்டு வரும் போது வடை பஜ்ஜி இன்னும் சில பேர் இனிப்போட டீ காபி ... இன்னும் சில பேர் முறுக்கு / கடலை மிட்டாய் / மிக்சர் மேற்சொன்ன எல்லாத்தலையும் சுகர் அதிகமா ஏறும் மக்களே புரிஞ்சுக்கோங்க.. உங்களுக்கு என்ன வேணும்? ஸ்நாக்ஸ் தான வேணும்!
- ஒரு கிலோ எழுபது ரூபாய்க்கு பல விட்டமின்கள் நிரம்பிய கொய்யாகாய் இருக்கு.
- சீசனுக்கு சீசன் கிடைக்குற வெள்ளரிக்காய் இருக்கு
- விட்டமின் சி நிரம்பிய நெல்லிக்காய் இருக்கு
- நல்ல கொழுப்பும் குறைவான மாவுச்சத்தும் கொண்ட தேங்காய் இருக்கு
- நல்ல புரதம் நல்ல கொழுப்பு குறைவான மாவுச் சத்தோட சீப் & பெஸ்ட்டா நிலக்கடலை இருக்கு ( தினமும் 50 கிராம்) ( நிலக்கடலை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல்/வயிற்றுக் குத்தல்/ உப்புசம் ஏற்படுபவர்கள் தவிர்ப்பது நல்லது)
- முளை கட்டிய பயறு இருக்கு
- புரதச்சத்து நல்ல கொழுப்புச் சத்து மிக்க கொஞ்சம் காஸ்ட்லியான பாதாம் இருக்கு
வால்நட் இருக்கு
பிஸ்தா இருக்கு
- இரண்டு முட்டைகளை ஆம்லெட்டாக்கி / பொடி மாஸ் செய்து அல்லது அவித்த முட்டைகளாகவே உண்ணலாம். அதுவும் குட்டி ஸ்நாக்ஸ் தான். ஆனால் புரதச்சத்து ஊட்டச்சத்து நிரம்பிய ஸ்நாக்ஸ்
- மாலை வேளை ஸ்நாக்ஸாக
50 கிராம் பனீருடன்(Paneer - milk product) சில காய்கறிகளையும் கொஞ்சம் மசாலா உப்பு போட்டு லேசான சூட்டில் சமைத்து உண்ணலாம்
- 100 கிராம் காய்கறி போட்டு வெஜிடபுள் சூப் செய்து அதில் 20 கிராம் வெண்ணெயை சூட்டோடு சூடாகக் கலந்து பருகலாம்
- 200 மில்லி ஆட்டுக் கால் சூப் / நெஞ்செலும்பு சூப் வாரம் இருமுறை மாலை நேரங்களில் பருகலாம். டீ காபி பருக வேண்டும் என்றால் அதில் இனிப்பு எந்த ரூபத்திலும் சேர்க்காமல் தினசரி 100 மில்லி × 2 என்ற அளவில் இருமுறை மட்டும் பருகவும்.

கட்டுப்படாத சுகர் இருப்பவர்கள் பால் டீயை கைவிட்டு ப்ளாக் டீ அல்லது லெமன் டீ வித் அவுட் சுகருக்கு மாறவும். நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இனிமே ஸ்நாக்ஸ்னா மேற்கூறியவற்றை முயற்சி செய்யுங்கள். சுகர் ஏறாது, வயிறும் நிரம்பும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+