10 வருஷத்தில் கேன்சராக மாறும் Fatty liver.. கல்லீரலை பாதுகாக்கும் அந்த 4 விஷயங்கள்! டாக்டர் விளக்கம்
சென்னை: ஃபேட்டி லிவர் என்ற வியாதிக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்தும் அந்த நோய் எதனால் வருகிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து டாக்டர் விஜய் சக்கரவர்த்தி தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: Fatty liverக்கு சிகிச்சை பண்ணணுமா வேண்டாமா? Liverல் (கல்லீரல்) கொழுப்பு சேர்தல் தான் fatty liver என்கிறோம். உடம்பில் எங்கு கொழுப்பு சேர்ந்தாலும் அது ஒரு inflammation (வீக்கம்) உண்டாக்கும்.. (ரத்த குழாயில் கொழுப்பு சேர்ந்தால் அதில் inflammation ஏற்பட்டு heart attack ஏற்படும்.. அதே போல் liverல் சேர்ந்தால், வருடங்கள் ஆக ஆக (10-20 yrs)அதனுடைய பிரச்சனை (liver failure)ஏற்படும் அல்லது liver cancerஆக மாறலாம்.

ஆக, 10-15 yrs பெரிய symptoms தராத இந்த fatty liverஐ, உடனே கட்டுப்படுத்த வேண்டும். சர்க்கரை நோய், உடல் பருமன், கொழுப்பு , மது பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த fatty liver நோய் வந்தால், சீக்கிரமே அது மோசமாகும் சூழ்நிலை உண்டாகும். ஏன் இந்த காலகட்டத்தில் இது முக்கியம்...? முன்னர் 50 வயதுகளில் வந்த இந்த fatty liver, உண்மையான பிரச்சனை கொடுக்க 10-15 yrs ஆனது. முதுமையில் உள்ள வியாதி என கண்டுகொள்ளவில்லை.
ஆனால் இப்போது 20-35வயதுக்குள்ளே நிறைய பேருக்கு வந்திருப்பதால், அவர்களுக்கு 40-50 வயதில் பிரச்சினை அதிகமாகும். சரி, fatty liver scan reportல் வந்தால் என்ன செய்வது,? Liver function test முலம் SGOT SGPT கண்டறிய வேண்டும்.. FIB 4 index (google செய்தால் ஒரு calculator கிடைக்கும்).
மற்றும் fibroscan எடுத்து எந்த stageஅல் உள்ளது என தெறிந்து வேண்டும் அதற்குறிய மருந்து எடுக்க வேண்டும்( நவீன மருந்துகள் வந்துள்ளதால், எளிதில் கட்டுப்பாட்டில் வைக்கலாம்). மிக மிக முக்கியம் :
1. எடையை குறைக்க வேண்டும்
2. மாவு சத்து கொண்ட உணவை உட்கொள்ளக் கூடாது, பாக்கெட்டுகளில் அடைத்து வைத்த உணவையும் தவிர்க்க வேண்டும்
3. சர்க்கரை அளவையும் கொழுப்பையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
4., மதுப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
மொத்தத்தில் உடல் பருமன், சுகர் , கொழுப்பு போன்றவற்றின் பிற்கால liver damage தான் இந்த fatty liver நிறைய மாத்திரைகள் நிறைய டாக்டர்கள் பரிந்துரைத்தாலும், omega 3 fatty acids, tocoferols , Ppar agonists போன்ற ஒரு சிலதுக்குதான் வேலை செய்யும். மற்ற மருந்துகள் பெரிதாக ப்ரயோஜனம் இல்லை. இந்த fatty liverஐ இளம் வயதில் கண்டு கொள்ளவில்லை என்றால், முதுமை சீக்கிரமாக வந்துவிடும். இவ்வாறு டாக்டர் விஜய் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications