காபி குடிக்காமல்.. சிகரெட் பிடிக்காமல்.. கலகலனு மலம் வெளியேறணுமா? இது போதுமே! டாக்டர் தீபா டிப்ஸ்
சென்னை: காலையில் காபி குடிக்காமலும் சிகரெட் பிடிக்காமலேயே மலம் எளிதாக வெளியேறுவதற்கான இயற்கையான விஷயங்களை செய்தாலே போதும் என்கிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஒய் தீபா.
இதுகுறித்து டாக்டர் தீபா ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: சிலருக்கு காலையில் எழுந்ததும் காபி குடித்தாலோ இல்லாவிட்டால் சிகரெட் பிடித்தாலோதான் மலம் கழிக்க முடியும் என அந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த பழக்கத்தின் போது மலச்சிக்கல் இருப்பதாகவே கூறுகிறார்கள்.
மலச்சிக்கல் என்றால் என்ன? நாம் சாப்பிடும் உணவில் நீர் சத்து இல்லாமல் இருப்பது. தினமும் மலம் கழித்தாலும் அதற்கு சிரமப்படுவதும் மலச்சிக்கல்தான், இரு தினங்களுக்கு ஒரு முறை, வாரத்திற்கு இரு முறை என கழித்தாலும் அது மலச்சிக்கல்தான். மலச்சிக்கல் நோயின் தாய் என சொல்வோம். நம் உடலையும் மனதையும் பாதிக்கக் கூடியது இந்த மலச்சிக்கல்.

மலச்சிக்கல்
மலச்சிக்கல் ஏற்பட்டால் உண்ட உணவு ஜீரணமாகாது. வயிறு நிறைந்தது போலவே இருக்கும். இதனால் மனக்கவலையும் ஏற்படும். ஒவ்வொருவருக்கும் 2 மணி நேர இடைவெளியில் ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாடு அதிகமாக இருக்கும். உதாரணமாக காலை 5 மணி முதல் 7 மணி வரை பெருங்குடலின் செயல்பாடு அதிகமாக இருக்கும். ஒரு நாள் முழுக்க நாம் உண்ட உணவை மலம் மூலம் வெளியேற்றுவதுதான் பெருங்குடல்.

கல்லீரல்
இரவு 11 முதல் அதிகாலை 3 மணி வரை நமது கல்லீரல் வேலை செய்யும். அது கழிவுகளை பிரித்து பெருங்குடலுக்கு அனுப்பி வைக்கும். காலை 5 முதல் 7 மணிக்குள் எந்த நீராகாரங்கள் எடுத்தாலும் மலம் எளிதாக செல்ல முடியும். தண்ணீர் குடித்தாலே மலம் கழிக்கலாம். ஆனால் காபி குடித்தால்தான் மலம் வரும் என சிலர் பழக்கிக் கொள்கிறார்கள். காப்பியில் உள்ள கஃபினீல் மலத்தை எளிதாக்கும் திறன் இருக்கிறது. ஆனால் அதனால் பின்விளைவுகள் உள்ளன. இதனால் உடலில் அமிலத்தன்மை ஆகி நீர் சத்தை குறைத்துவிடும்.

அல்சர் நீங்க
மலச்சிக்கல், அல்சர் நீங்க 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகளை எடுத்துக் கொள்ளலாம். நார்சத்து கொண்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கரையும் தன்மை, கரையா தன்மை என இரு நார்சத்துகள் உள்ளன. கரையும் தன்மை- நட்ஸ் , கொட்டைகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள், பச்சை பட்டாணி, பீன்ஸ் இவையெல்லாம் உடலில் உள்ள நீர்ச்சத்தை செல்களில் பராமரித்து ஒரு பேஸ்ட் போல் உருவாகி அது மலத்தை இளக வைக்கும்.

கரையா தன்மை
கரையா தன்மையும் மலச்சிக்கலை குறைக்கும். காய்கறிகள், முழு தானியங்களில் கரையா தன்மை இருக்கின்றன. கற்றாழை ஜெல்லை மோர் அல்லது தேங்காய் பாலில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கலை நீக்கும். பைல்ஸும் வராது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். புரோபயாடிக் மிகவும் முக்கியமானது. உடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு குறையும் போதும் மலச்சிக்கல் ஏற்படும். மோர் குடித்தால் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும்.

4 விதமான சிகிச்சை
பொதுவாக லேக்ஸேடிவ் என ஒரு மருந்தை தருவார்கள். இதில் 4 விதமான சிகிச்சைக்காக பயன்படுகிறது. 1. மலத்தில் உள்ள பல்கனஸை அதிகரிக்கும். 2. மலம் சாப்ட்டாக இருந்தால் அது ஸ்மூத்தாக வெளியே வர உதவும். 3. பவல் மூவ்மென்டையே (குடல் இயக்கம்), 4. குடல் பகுதியில் அமிலங்கள் சுரப்பதாலும் மலச்சிக்கல் ஏற்படும். அதனால் அங்கு நீர்த்து போகும் சூழலை ஏற்படுத்தினால் போதும். இந்த 4 முறைகளில் மலச்சிக்கல்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.

அத்திப்பழம்
அத்திப்பழம் நிறைய எடுத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் நார்ச்சத்து ஜீரண சக்தியை அதிகரித்து மலம் இளக உதவுகிறது. எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் ஆசிட் ஜீரண சக்தியை தூண்டிவிடுகிறது, கழிவுகளையும் வெளியேற்றுகிறது. ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் இஞ்சி, 5 கிராம் அதிமதுரம், கால் டீஸ்பூன் பட்டை, புதினா ஆகியவற்றுடன் கொதிக்கவைத்து விட வேண்டும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கியதும் எலுமிச்சை சாறு சில துளிகளை போட வேண்டும். நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜரால் உடல்நிலையை அதிகமாக்கி ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

அதிமதுரம்
அதிமதுரத்தில் உள்ள கிளைசிரிசின் என்ற இனிப்பு சுவை கொண்ட பொருளானது மலத்தில் உள்ள அசிடிட்டியை குறைக்கும். ஒரு டம்ளர் தண்ணீரில் 10 காய்ந்த திராட்சைகளை ஊற வைத்துவிட்டு காலையில் அந்த தண்ணீருடன் திராட்சையை சாப்பிட வேண்டும். இதில் டார்டாரிக் ஆசிட் மலச்சிக்கலை போக்கும். குடலில் புழுக்கள் சேராமல் தடுக்கும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். இவற்றுடன் பப்பாளி, வாழைப்பழம், தர்பூசணி, கிர்னி ஆகியவை மலச்சிக்கலை போக்கும். மேலும் இரவு நேரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் கடுக்காய் பவுடரை கொதிக்க வைத்து குடித்தால் காலையில் காப்பி குடிக்கவோ சிகரெட் பிடிக்கவோ தேவையில்லை. மலம் எளிதாக வந்துவிடும். இவ்வாறு டாக்டர் தீபா தெரிவித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications