தேங்கிய கொழுப்பு.. குடல் அழற்சி போக்கும் "பாப்கார்ன்".. நீரிழிவு நோயாளி பாப்கார்னை சாப்பிடலாமா? வாவ்
சென்னை: நொறுக்கு தீனி என்று நினைத்தே, பாப்கார்னை பலரும் சாப்பிடாமல் தவிர்த்துவிடுவார்கள்.. உண்மையை சொல்லப்போனால் அனைத்து வயதினருக்குமே ஏற்ற உணவுதான் இந்த பாப்கார்ன் என்கிறார்கள். எப்படி தெரியுமா?
உடல் எடை கூடுவதற்கு காரணமே நொறுக்கு தீனி என்பது பரவலான காரணமாக இருந்து வருகிறது.. அந்த லிஸ்ட்டில் பாப்கார்னையும் அடைத்து விடுகிறார்கள்.

சத்துக்கள்: சோளத்திலிருந்து தயாரிக்கப்படுவதுதான் பாப்கார்ன்கள்.. அதாவது முழுக்க முழுக்க முழு தானியங்களினால் தயாரிக்கப்படுகிறது என்பதால், அதிக அளவு நார்ச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அத்துடன், வைட்டமின் B காம்ப்ளக்ஸ், மாங்கனீசு, நார்ச்சத்து, பாபீனாலி கூறுகள், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் பாப்கார்னில் நிறைந்திருக்கின்றன..
புற்றுநாய் போன்ற அபாய நோய்களை எதிர்த்து போராடக்கூடிய பண்பு, பாப்பார்ன்களுக்கு இருக்கிறது. பாப்கார்னில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவைகள் செல் சேதத்தைத் தடுப்பதுடன், நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.. அதாவது, ஓட்ஸ், கோதுமை, அரிசியுடன் ஒப்பிடும்போது, சோளம், பாப்கார்ன்களில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளதாக MDPI ஆய்வில் தெரியவந்துள்ளது.
நார்ச்சத்துக்கள்: நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு என்றாலே, அங்கு அஜீரண கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை.. மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லை.. உடலிலுள்ள நச்சுக்கள், கழிவுகளை நீக்குவதுடன், குடல், வயிறு சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதில், பாப்கார்ன்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அந்தவகையில், பாப்கார்னை நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம்..
முதுமையில் ஏற்படும் பார்வைக்குறைபாடு, தசைகள் வலுவிழத்தல், ஆஸ்டியோபொரோசிஸ், முடி கொட்டுதல், ஞாபகமறதி போன்ற தீவிரத்தையும் இந்த பாப்கார்ன் கட்டுப்படுத்துகிறது.
குடல் அழற்சி: அதேபோல, ஃபெருலிக் அமிலம் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளதால், செரிமான ஆரோக்கியத்தை இவைகள்தான் பராமரிக்கின்றன.. அழற்சி குடல் நோய், அல்சைமர் நோய், சர்க்கரை நோய் போன்றவற்றின் அபாயத்தை குறைக்கவும், இந்த ஃபெருலிக் அமிலம்தான் உதவுகின்றன.
அதேபோல, கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்களுக்கும் பாப்கார்ன் சிறந்த உணவாகிறது.. காரணம், ரத்த நாள சுவர்களிலுள்ள கொழுப்புகளையும் இந்த பாப்கார்ன் கரைத்துவிடுகிறது.. அதனால்தான், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக இது உள்ளது.. ஆனால், தித்திப்பு கலக்காத பாப்கார்னை சாப்பிட வேண்டுமாம்..
உடல் எடை: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், ஊளைச்சதையை கரைக்க விரும்புவர்களும் பாப்கார்னை மாலை நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம். காரணம், ஒரு கப் பார்கார்னில் 30 கலோரிகள் மட்டுமே உள்ளது.. ஆனால், உப்பு, வெண்ணெய், மசாலாக்கள் என எதுவுமே இல்லாத பாப்கார்ன்கள் மட்டுமே சாப்பிட்டால், உடல் எடை குறைய உதவும்..
அல்லது காய்கறிகளை சேர்த்து, ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி, சத்து நிறைந்த சிற்றுண்டியாக நாமே இதனை தயார் செய்யலாம்.. தேங்கியிருக்கும் கொலஸ்ட்ராலும் வெளியேறுகிறது. இதனால், இதயநோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் ஏற்படாது.. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாப்கார்ன் தருவதை தவிர்க்கலாம்.. செரிமானம், குடல் அழற்சி இருப்பவர்களும் பாப்கார்னை தவிர்க்கலாம்..












Click it and Unblock the Notifications