Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாமாயில் ரேஷனில் வாங்கிட்டீங்களா? அப்ப உப்பு, புளி எடுத்துக்குங்க! இப்படிதான் பாமாயிலை யூஸ் பண்ணணும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் பாமாயிலை சமையலுக்கு பயன்படுத்துகிறீர்களா? அப்ப இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க.

ரேஷன் பாமாயிலில் வைட்டமின் A, E, பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் உளளன.. எனவே, கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்க்க இது உதவுகிறது.. முக்கியமாக ரெட்டினா குறைபாட்டை சரிசெய்கின்றன.

Health Health Tips Ration shop Palm Oil

இயற்கையான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இந்த பாமாயிலில் உள்ளதால், நம்முடைய உடம்பில் உருவாகக்கூடிய கெட்ட செல்கள் ஒழிந்துவிடும்.. புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை இந்த பாமாயிலுக்கு இருக்கிறதாம். இந்த எண்ணெய்யில் உள்ள வைட்டமின் E சத்துக்கள், நம்முடைய சருமத்துக்கு கவசம் போல காக்கிறது.. ஹார்மோன்களும் சமநிலை பெறுகின்றன. இப்படி நன்மைகள் பலவிருந்தாலும், கொழுப்பு சத்துக்களும் பாமாயிலில் அதிகம் உண்டு என்பதை மறுக்க முடியாது..

உடல் எடை: எனவே, உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், இருதய பாதிப்பு, ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களும், தலைசுற்றல், மயக்கம் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களும், பாமாயிலை கட்டாயம் தவிர்க்க வேண்டும்..

அதுமட்டுமல்ல, தலைசுற்றல் மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களும், பாமாயில் எண்ணெய்யை அப்படியே பயன்படுத்தக் கூடாது. காரணம், திடீரென பாமாயிலை பயன்படுத்தும்போது சில சமயம், வாந்தி, பேதி, மயக்கம் போன்ற கோளாறுகள் வர வாய்ப்புள்ளது.

பாமாயில்: அதிக பாமாயிலை பயன்படுத்தினாலும், உடம்பில் பித்தம் சேர்ந்துவிடும். எனவே, இந்த பாமாயிலை சுத்திகரிப்பு செய்தால், எண்ணெயில் உள்ள பித்தம் தணிந்துவிடும்.. அதற்கு பிறகு பாமாயிலை தாராளமாக பயன்படுத்தலாம். இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? எலுமிச்சம் அளவு புளியை எடுத்து, அதற்குள் சிறிது கல் உப்பை அழுத்தி திணித்து உருட்டி கொள்ள வேண்டும். பிறகு சிறிய இஞ்சி துண்டு தோல் சீவி வைத்துக்கொள்ள வேண்டும்..

இப்போது ஒரு அகலமான வாணலியில், ரேஷன் பாமாயிலை ஊற்றி லேசாக சூடுபடுத்த வேண்டும்.. வழக்கமான எண்ணெய்யை போல இதை காய்ச்ச கூடாது. தீயை குறைவாக வைத்து மிதமாக சூடு செய்ய வேண்டும். எண்ணெய் லேசாக சூடேறியதும், புளி உருண்டையையும், துண்டு இஞ்சியையும் எண்ணெய்யில் போட வேண்டும். இப்போது எண்ணெய் பொரிக்க துவங்கும்.. இப்படியே 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்..

கருப்பு நிறம்: இப்போது புளி,உப்பு, இஞ்சி போன்ற அனைத்துமே, எண்ணெய்யிலுள்ள பித்தத்தை உள்ளிழுத்து கொள்ளும்.. சிறிது நேரத்தில் புளியின் நிறமும் கருப்பாக மாறிவிட்டிருக்கும். நுரைகள் அனைத்தும் அடங்கியதும், புளி, இஞ்சி இரண்டையும் வெளியே எடுத்துவிட வேண்டும்.. பிறகு பாமாயிலை ஆறவைத்து, ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி வைத்து, பயன்படுத்தலாம். இதில் எந்த ஆபத்தும் இல்லை. பித்தமும் உடலில் அதிகமாக சேராது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+