சர்க்கரை நோயாளிகளுக்கு கண் பாதிப்பு.. இலவச விழித்திரை பரிசோதனை.. வாஸன் கண் மருத்துவமனை அறிவிப்பு
மதுரை: சர்க்கரை நோயாளிகளின் வசதிக்காக நவம்பர் 30 ஆம் தேதி வரை அனைத்து சர்க்கரை நோயாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச விழித்திரை பரிசோதனை செய்யப்படும் என மதுரை வாஸன் கண் மருத்துவமனை அறிவித்துள்ளது.
நீரிழிவு நோய் என்பது நமது இரத்தத்தில் உள்ள இரத்த சர்க்கரை பாதிப்பை குறிக்கிறது. சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டு தோறும் நவம்பர் 14ஆம் தேதி உலக நிரிழிவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ரத்த சர்க்கரை ஏற்றத்தாழ்வுகளால் நாம் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அதில் ஒன்று வறண்ட கண்கள் பாதிப்பு.

இந்த வறண்ட கண் பாதிப்பு என்பது ஒரு சிறிய பிரச்சினையாக தோன்றினாலும் இதை கண்டு கொள்ளாமல் விடுவது நாளடைவில் நிரந்தர கண் பாதிப்பு மற்றும் பார்வை இழப்பை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. கண் பார்வைக்கோளாறு உட்பட பல பிரச்னைகள் உண்டாக சர்க்கரை நோய் பிரதான காரணமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உலக நீரிழிவுநோய் தினத்தை முன்னிட்டு மதுரையில் வாஸன் கண் மருத்துவமனை நடத்திய விழிப்புணர்வுப் பேரணியில் மருத்துவர்கள் இதனைத் தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வை பொதுமக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக, வாஸன் கண் மருத்துவமனை மாபெரும் விழிப்புணர்வுப் பேரணியை மதுரை காளவாசலில் நடத்தியது. மதுரை மாநகர காவல்துறை துணை ஆணையர் டி.குமார் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். மேலும், சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு உரையாற்றினார்.
வாஸன் கண் மருத்துவமனையின் தமிழ்நாடு தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்.கே.கமல்பாபு முன்னிலை வகித்து உரையாற்றினார். இப்போது சர்க்கரை நோயாளிகள் கண் பாதுகாப்பில் எவ்வாறு கவனமுடன் இருக்க வேண்டும்? மருத்துவமனையில் அவர்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டிய பரிசோதனைகள் சிகிச்சைகள் என்னென்ன? என்பது குறித்து விளக்கமாக பேசினார்.
அப்போது பேசிய மருத்துவர்கள், "பெரும்பான்மையான கண் பார்வை தொடர்பான பிரச்சினைகளுக்கு முதன்மை காரணமாக சர்க்கரை நோய் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோயால் வரும் பார்வை இழப்பை தடுக்க சர்க்கரை நோயாளிகள் அனைவரும் தங்கள் கண்களை 6 மாதத்திற்கு ஒருமுறை 'கண் விழித்திரை' பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தினர்.
சர்க்கரை நோயாளிகளின் வசதிக்காக நவம்பர் 30 ஆம் தேதி வரை அனைத்து சர்க்கரை நோயாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் 'இலவச விழித்திரை பரிசோதனை' செய்யப்படும் எனவும் அறிவித்தனர்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத் தலைவர் முனைவர். சு. கிருஷ்ணன், அண்ணா அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் தாளாளர் திரு. அண்ணாதுரை, ஹெச்.எம்.எஸ்., மாநில துணைத்தலைவர் பாதர் வெள்ளை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மதுரை மண்டலத் தலைவர் ஏ.முருகேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
அண்ணா அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி மாணவர்கள், மதுரை மற்றும் திருமங்கலம் ஆலம்பட்டி அன்னை பாத்திமா கல்லூரியின் மாணவர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.வாஸன் கண் மருத்துவமனை காளவாசல் கிளை மேலாளர் முத்துக்குமரவேல் வரவேற்புரையாற்றினார். பொதுமேலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார். மார்கெட்டிங் துறையின் தென்மண்டல தலைமை அதிகாரி விஜயன் பிரான்ஸிஸ் மற்றும் பணியாளர்கள் பேரணி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications