மல்லி விதை, கடுகு, பெருங்காயம்.. அடேங்கப்பா வாசனைமிக்க அஞ்சறை பெட்டி.. ஆயுளை கூட்டும் மருத்துவபெட்டி
சென்னை: காலம் காலமாக நம்முடைய வீடுகளில் பயன்படுத்தப்படும் அஞ்சறைப்பெட்டியின் முக்கியத்துவம் என்ன தெரியுமா? இதன் பலன்களை பாருங்கள்.
கோவை வட்டாரமொழி வழக்கில் இதனை செலவுப்பெட்டி என்பார்கள். அந்த காலத்தில், பெண்களை திருமணம் செய்து தரும்போது, இந்த அஞ்சறைப்பெட்டிகளை கட்டாயம் சீர்வரிசையில் சேர்த்து தருவார்களாம். பல்வேறு மருத்துவ குணமுள்ள வேதிப்பொருட்களின் கலவைகளை, இந்த அஞ்சறை பெட்டியில் பராமரித்து வந்திருக்கிறார்கள் நம்முடைய முன்னோர்கள்.

மளிகை பொருட்கள்: அப்போது பெரிய சைஸில், மரத்தினால் செய்யப்பட்ட அஞ்சறைப்பெட்டி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.. மரத்தினால் செய்யப்படுவதால், மளிகை பொருட்கள் நீண்ட காலத்துக்கு கெடாமல் இருக்கும்.
அதுமட்டுமல்ல, எந்த பொருளையும் குறைந்துவிடாமல் பார்த்து கொள்வார்களாம். காரணம், எந்த வீட்டில் அஞ்சறைப்பெட்டி நிறைவாக உள்ளதோ, அந்த வீட்டில் மகாலட்சுமியும் நிறைந்து இருப்பாள் என்று பெரியவர்கள் சொல்வார்களாம்.. கையில் காசு இல்லாமல் நின்றோருக்கெல்லாம் முதலுதவி பெட்டியே இதுவாகத்தான் இருந்திருக்கிறது.
மருத்துவ பெட்டி: முக்கியமாக, சமையலறையை அலங்கரிக்கக்கூடிய மருத்துவப்பெட்டியாகவே இது திகழ்ந்து வருகிறது. ஐந்து + அறை + பெட்டி = அஞ்சறைப்பெட்டி.. சீரகம், சோம்பு, மிளகு, மஞ்சள், வெந்தயம், கடுகு, தனியா, பெருங்காயம், லவங்கப்பட்டை, கிராம்பு போன்ற மருந்துகள் இந்த அஞ்சறை பெட்டிக்குள் வைக்கப்படும்..
சீரகத்தில் வைட்டமின்-B, C, இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற வை நிறைந்துள்ளன.. சீரகம் என்பது சீர்+அகம் = சீரகம் அகத்தை சீர்படுத்துவதால் இதற்கு சீரகம் என்று பெயர் வந்தது. அதாவது நம் உடலில் வயிற்றில் உள்ள வாயுக்களை களைவதில் முக்கிய பங்கு சீரகத்துக்கு உண்டு. இது செரிமான அமைப்பை மேம்படுத்தும்.. குடல் புற்றுநோய் வராமல் தடுத்து, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
மிளகு: வைட்டமின்- B, E, பைப்பரின் சத்துக்களை உடையது.. வாத, பித்தம், கபம் என்றையும் நம்முடைய உடலில் சமநிலையில் வைக்க உதவுகிறது. உடலிலுள்ள நச்சுக்களையும், சளி, இருமல், காய்ச்சலின் தொற்றுகளையும் நீக்க உதவுகிறது..
வைட்டமின் C என்கிற ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ள பொருள்தான் மஞ்சள் ஆகும்.. வைட்டமின் B நிறைய உள்ளதால்தான், மஞ்சள் இன்று உலகளவில் வைரஸுக்கு எதிராக செயல்படும் பொருளாக நிரூபிக்கப்பட்டுள்ளது.. சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கி, புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது...
வெந்தயம்: வெந்தயம் என்பது வெந்த + அயம் என்பதே வெந்தயம் என்று மருவி வந்துள்ளது. அளவுக்கு அதிகமான இரும்புச்சத்து வெந்தயத்தில் நிறைந்துள்ளது. ஹீமோகுளோபின் பிரச்சனையை தீர்க்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்க செய்து, நோய் எதிர்ப்பு சக்தியையும், குளிர்ச்சியையும் தருகிறது.
உடலில் உள்ள நச்சுகளை பன்மடங்கு நீக்குகிறது கடுகு.. அழற்சி நோயிலிருந்து பாதுகாக்கிறது. 100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் உள்ளதாம்.. எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும்..
தனியா: கொத்தமல்லி விதைகள், உடலிலுள்ள பித்தத்தை குறைப்பதில் முதன்மையானது.. கல்லீரல் செயல்பாட்டுக்கு மிகவும் உதவுவது.. தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற கோளாறுகளை சீர்செய்கிறது. சர்க்கரை நோயாளிகள், 10 கிராம் அளவு தனியாவை தண்ணீரில் இரவு ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடித்துவந்தாலே, நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வருமாம்.
மூட்டுகளின் சந்துகளில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதற்கு பெருங்காயத்தைவிட சிறந்த மருந்து வேறில்லை.. நரம்புகளை பலப்படுத்தக்கூடியது.. அதேபோல, லவங்கப் பட்டை, மன அழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்தும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.. ரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடியது.
பெட்டி: இப்படி எல்லாவிதமான நோய்களுக்கும் அடிப்படையான காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான்.. அப்படியான நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரியான முறையில் கையாள நமக்கு உதவியாக இருப்பதே இந்த அஞ்சறைப்பெட்டிகள்தான்.. எவ்வளவுதான் நவநாகரீகம் மாறினாலும், பழமை மாறாத இந்த அஞ்சறைப்பெட்டியானது, நம்மை பத்திரப்படுத்திக்கொண்டே, நம்முள் சேர்ந்தே பயணித்து கொண்டிருக்கிறது இன்னமும்..!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications