மட்டன் சாப்பிடுவது நல்லதா? யாரெல்லாம் மட்டனை சாப்பிடலாம்? பலனை தரும் பெஸ்ட் ஆட்டிறைச்சி.. செம
சென்னை: மட்டன் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்ற விவாதங்கள் காலம் காலமாக ஓடிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால், மட்டன் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியிருக்கிறது.
ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.. அதில், நிறைவுற்ற கொழுப்பு இதய நோய் அபாயத்தை ஏற்படுத்துகிறதாம். ஆனால், நிறைவுறா கொழுப்பு என்று கூறப்படும் அன்சேச்சுரேட்டட் ஃபேட்ஸ், உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறதாம்..

கொழுப்புகள்: இந்த நிறைவுறா கொழுப்புகள் மட்டனில் நிறையவே நிறைந்துள்ளது.. அதனால், மட்டனை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வு கூறுகிறது.
அந்த ஆய்வின் முடிவல் மற்றொரு காரணமும் சொல்லப்பட்டுள்ளது.. அதாவது, மட்டனில் பொட்டாசியம் அதிகமாக நிறைந்திருப்பதுடன், சோடியம் அளவு குறைவாகவே உள்தளாம். இதனால், உடலில் பொட்டாசியம் + சோடியம் அளவுகளை ஒரே சீராக நம்மால் பராமரிக்க முடியும் என்கின்றது.
ஆய்வுகள்: இந்த ஆய்வு மட்டுமல்லாமல், ஆட்டிறைச்சி குறித்த இதுவரை வெளியான ஆய்வுகளில் பொதுவாக சொல்லப்பட்டுள்ளது, மட்டனை வேகவைத்தோ அல்லது கிரில் செய்தோ சாப்பிடும்போது, உடலுக்கு போதுமான பலம் கிடைக்கிறது. உடல் சூட்டினை தணிக்கும் தன்மை ஆட்டுக்கறிக்கு உள்ளதால், சரும பிரச்சனைகள் நெருங்குவதில்லை.. சருமத்துக்கான பொலிவு அதிகரிப்பதுடன், பார்வை கோளாறுகளும் அவ்வளவாக ஏற்படுவதில்லையாம்.
ஆட்டுக்கறியில் வைட்டமின் B12, நியாசின், இரும்பு, செலினியம் போன்ற சத்துக்கள் உள்ளன. குறிப்பாக, இந்த வைட்டமின் B12 நியூரான்கள் மற்றும் ரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.. செலினியம் நோயெதிர்ப்பு அமைப்பு, வளர்சிதை மாற்றம், தைராய்டு செயல்பாட்டைத் தூண்டுகிறது, நியாசின் உணவை ஆற்றலாக மாற்ற துணைபுரிகிறது.
இரும்புச்சத்து: மற்ற இறைச்சி வகைகளோடு ஒப்பிடும்போது, ஆட்டிறைச்சியில் இரும்புச்சத்தும் அதிகமாகவே உள்ளது. 100 கிராம் சிக்கனில் வெறும் 1.7 மி.கி மட்டுமே இரும்புச்சத்து உள்ளநிலையில், 100 கிராம் இளம் ஆட்டிறைச்சியில் சுமார் 3.8 மி.கி.இரும்புச்சத்து காணப்படுகிறதாம்..
நம்முடைய உடலுக்கு தேவைப்படும் B12-ல், கிட்டத்தட்ட 32 சதவீதம் இந்த மட்டனில் இருக்கிறதாம். சிவப்பணுக்களை நம்முடைய உடலில் உற்பத்தி செய்வதற்கு இந்த ஊட்டச்சத்து மிகவும் தேவையானதாகவும் இருக்கிறது. அதனால்தான், அனீமியா பிரச்சனை உள்ளவர்கள் மட்டனை அடிக்கடி சாப்பிடும்போது, ரத்த சோகை நோய் விலகி செல்கிறது.
மட்டன்: ஆனால், சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள், மட்டனை தொட்டுக்கூட பார்க்கக்கூடாது.. அதேசமயம், உடல் ஆரோக்கியம் மிக்கவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என உடலுழைப்பில் உள்ளவர்கள் மாதம் ஓரிருமுறை, குறிப்பிட்ட அளவில் மட்டனை சாப்பிடலாம் என்கிறார்கள்...!!
பொதுவாகவே சூப் சாப்பிட்டால், நம்முடைய உடம்பில் உள்ள என்சைம்களை தூண்டுவதால், செரிமானம் சரிவர நடக்கும். அசிடிட்டியை குறைத்து, பசியை தூண்டும். மூட்டுவலி முதுகுவலி மூட்டு தேய்மானம் போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளினால் அவதிப்படுபவர்களுக்கு இந்த மட்டனின் ஆட்டுக்கால் சூப் மிகவும் நல்லது. இருதய தசைகளையும் பலப்படுத்தும் எனகிறார்கள்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications