300 நோய் தீர்க்கும் முருங்கையிலை.. குழந்தைக்கு முருங்கைக்கீரையை தரலாமா? முருங்கை எண்ணெய் ஆரோக்கியம்
சென்னை: முருங்கைக்கீரையை வளரும் பிள்ளைகளுக்கு எப்படி தருவது? குழந்தைகளுக்கு இந்த கீரையை தரலாமா? எந்த வடிவில், எந்த அளவுக்கு, எந்த முறையில் தரலாம் தெரியுமா? கர்ப்பிணி பெண்கள் முருங்கை கீரையை தவிர்க்க கூடாது என்று சொல்வதற்கு என்ன காரணம் தெரியும்? அதை சுருக்கமாக பார்ப்போம்.
முருங்கைக்கீரையில் கணக்கிட முடியாத அளவுக்கு சத்துக்கள் உள்ளன.. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மாதவிடாய் வலியை குறைக்க செய்கிறது. கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கவும் முருங்கைக்கீரை இதனால் தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.

வளரும் பிள்ளைகள்: மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப்புண், தோல் வியாதிகள் , உடல் சூடு, இதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு, ஆரோக்கியமற்ற பற்கள், தோல் சுருக்கம் என இப்படி எண்ணற்ற பாதிப்புகளை சரிசெய்யக்கூடிய சக்தி முருங்கைக்கீரைகளுக்கு உண்டு. நார்ச்சத்து, இரும்புச்சத்து நிறைந்த இந்த கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால், வளரும் பிள்ளைகளுக்கு கட்டாயம் தர வேண்டும்.
பருப்பு புரதச்சத்து நிறைந்தது என்பதால், பருப்புடன் சேர்த்து கீரையை கடைந்தோ அல்லது பொரியல் செய்தோ தரலாம். இந்த கடைசலில் சிறிது நெய் ஊற்றி பிசைந்து தரும்போது, குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடுவார்கள். அதேபோல, பச்சரிசி மாவுடன் முருங்கை கீரையையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி போட்டு அடை போல செய்து தரலாம்..
தாய்ப்பால்: 6 மாதங்கள் முடிந்த குழந்தைகளுக்கு கீரை சூப், ஒரு ஸ்பூன் மட்டுமே தரலாம். 6 மாதத்துக்கு முன்பு மற்ற உணவுகளை தரக்கூடாது.. தாய்ப்பால் குடிக்கும் நேரம், மற்றும் தடவைகள் குறைந்து சுரப்பும் குறைந்துவிடும். இதனால் ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படலாம்.. அதற்காக தாய்ப்பாலுடன் இணை உணவு தர ஆரம்பிப்பதை 6 மாதத்திற்கு பிறகு தள்ளிப்போடவும் கூடாது என்கிறார்கள். எனவே, திரவ உணவை பழகியபிறகு சூப் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
அதிக காரம், அதிக மசாலா இல்லாமல் சூப் தரலாம். முருங்கை இலையை உலர்த்தி வறுத்து, தூள் செய்து, அந்த பவுடரில் சூப் வைத்து தரலாம். இப்படி முதன்முதலில் சூப் தரும்போது, 3 நாட்களுக்கு குழந்தைக்கு வேறு எந்த உணவையும் அறிமுகப்படுத்தாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைக்கு அலர்ஜி ஏதாவது ஏற்படுகிறதா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
தேங்காய் எண்ணெய்: அதேபோல, குழந்தைகளுக்கு சளி, இருமல் அதிகமாக இருந்தால் முருங்கை இலை எண்ணெய் கைகொடுக்கும். முருங்கைக்கீரையை , தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி, மெல்லிய துணியில் வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். இதல், ஒரே ஒரு சொட்டு எடுத்து, குழந்தையின் தலைப்பகுதியிலும், நெஞ்சு பகுதியிலும், இடுப்பின் பக்கவாட்டிலும் லேசாக தேய்த்துவிடலாம். வளரும் குழந்தைகள் என்றால், காம்பை நீக்கிவிட்டு, முருங்கைக் கீரையிலிருந்து ரசம் அல்லது சூப் போல வைத்து கொடுக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications