Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மட்டன் எடுக்கறீங்களா? ஆண்மையை அதிகரிக்க உதவும் ஆட்டு மூளை.. கிட்னி கசடுகளை நீக்கும் ஆட்டுக்கறி மூளை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், அதிக உடல் எடை கொண்டவர்களை தவிர்த்து, உடலுழைப்பு நிறைந்து ஆரோக்கியமாக உள்ளவர்கள் ஆட்டு மூளையை மாதம் ஓரிரு முறை சாப்பிடலாம். ஆண்களுக்கு ஆட்டு மூளை மிகவும் நல்லது.. எப்படி தெரியுமா?

ஆட்டுமூளையில் கெட்டக் கொழுப்பு ரொம்பவே குறைவு.. சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்துள்ளதால், ஆரோக்கியமாக உள்ளவர்கள், மாதம் ஒருமுறை ஆட்டு மூளையை சாப்பிடலாம்.

Health Mutton Brain Goat Brain

இதய செயல்பாடுகள்: ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆட்டு மூளையில் நிரம்பியுள்ளன.. நம்முடைய மூளை மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான மிகவும் முக்கியமான சத்தே இந்த ஒமேகா 3 கொழுப்புதான். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை சாப்பிட்டு வரும்போது, இதயம் சம்பந்தப்பட்ட ஆபத்துகளும் நமக்கு குறைகிறது..

இந்த மூளையிலிருக்கும் பாஸ்பரஸ் சத்துக்கள், கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் செய்கிறது.. நினைவாற்றலை பெருக்குகிறது.. மனித மூளைக்கு அதிக சக்தியை தருகிறது.. கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை தருகிறது.. எனவே, கோடைக்காலங்களில் ஆட்டு மூளையை சாப்பிடலாம்.

நரம்பு செயல்பாடு: பெரும்பாலானோருக்கு ரத்தசோகை பிரச்சனை ஏற்பட காரணமே உடலில் B12 சத்துக்கள் குறைபாடுகள்தான்.. இரும்புச்சத்து குறைந்து அனீமியா பாதிப்பு ஏற்பட்டால், உடலில் சோர்வு, நரம்பியல் பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம்.. இந்த ஆட்டு மூளையில் வைட்டமின் B12 உள்ளதால், நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு பேருதவி புரிகிறது. அத்துடன், ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியையும் பெருக்க செய்து, ஹீமோகுளோபின் பிரச்சனையை சரிசெய்கிறது.

ரத்தம் உறைவதும் தடுக்கப்படும். கிட்னியில் உள்ள கழிவுகளை நீக்க உதவுகிறது.. நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.. கபத்தை நீக்கி, மார்பு பகுதியில் இருக்கும் புண்களை குணப்படுத்த உதவுகிறது. ஆட்டு மூளையில், மெலிந்த புரோட்டீன்கள் அதிகமாக உள்ளதால், தசைகளில் உள்ள காயங்களை விரைந்து குணமாக்குகிறது.. தசைகளின் வளர்ச்சியையும், வலிமையையும் இந்த புரோட்டீன்கள் மேம்படுத்த செய்கின்றன.

ஜிங்க் சத்துக்கள்: ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது ஜிங்க் சத்துக்களாகும். இந்த சத்து குறைந்தால், விந்தணுக்களின் உற்பத்தியில் குறைபாடு ஏற்படும். ஆனால் ஆட்டு மூளையில் ஜிங்க் சத்து நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி, பாலியல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

ஆட்டு மூளையை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவிட்டு, அதிலுள்ள ரத்த நரம்புகளை சுத்தம் செய்து கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.. இப்போது அந்த மூளையில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

மூளை ஃப்ரை: ஒரு வாணலில் எண்ணெய் சூடானதும், மூளையை சேர்த்து, அதில் சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.. இறுதியில் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் நெய் இறக்கினால் கமகம ஆட்டு மூளை ஃபிரை ரெடி.

ஆட்டு மூளையில் ஆம்லெட்டும் செய்யலாம்.. ஒரு பாத்திரத்தில் மூளையை சுத்தம் செய்து, அதிலேயே முட்டையையும் உடைத்து ஊற்றி, நறுக்கிய வெங்காயம், கறி மசாலா, மஞ்சள் தூள், இஞ்சிபூண்டு விழுது, உப்பு, பச்சை மிளகாய் போட்டு ஒன்றாக அனைத்தையும் கலக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கலக்கி வைத்துள்ள மசாலாவை தோசை போல ஊற்றி எடுத்தால், மூளை ஆம்லெட் தயார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+