ஊறவச்ச சோம்பு தண்ணீரில் இத்தனை பலனா? சோம்பு விதையை இப்படி ட்ரை பண்ணுங்க.. பலம் பெறும் உள்ளுறுப்புகள்
சென்னை: உடல் எடையை குறைப்பது முதல் பல்வேறு பலன்களை தரக்கூடிய சோம்புவை பற்றி தெரியுமா? எந்தவகையில் சோம்புவை பயன்படுத்தலாம்?
பெருஞ்சீரகம் என்று சொல்லப்படும் சோம்பு மிக அதிக அளவிலான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.. உடலிலுள்ள நச்சுக்கள், கழிவுகள் வெளியேற்றுவதில் முக்கிய பங்கை கொண்டிருக்கிறது.

தினமும், காலையில் அரை ஸ்பூன் சோம்பை மென்று சாப்பிட்டு வந்தாலே செரிமான சக்தி அதிகமாவதுடன், வாய் துர்நாற்றம் நீங்கும். கல்லீரல் பலம் பெறுவதுடன், கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதையும் தடுத்து விடும். சோம்பை லேசாக வறுத்து பொடி செய்து, அதனுடன் தேன் கலந்து, காலை - மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், ஈரல் நோய் குணமாகுமாம்..
கல்லீரல்: நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் உணவில் தொடர்ந்து சோம்பை சேர்த்து வந்தால், சர்க்கரை அளவு சீராகும்.. அதேபோல, மலட்டுத்தன்மை நீங்கி, குழந்தைப்பேறு கிடைக்கவும், மாதவிடாய் கோளாறுகளை நிவர்த்தி செய்யவும், சோம்புகள் பெரிதும் துணைபுரிகின்றன. கர்ப்பப்பை சார்ந்த குறைபாடுகள், வயிற்றுப்புண், இருமல், மந்தம், மூச்சிரைப்பு, மூக்கில் நீர் வடிதல் அனைத்துக்குமே சோம்பு உதவுகிறது.
அதாவது, சோம்பை லேசாக வறுத்து தூள் செய்து, தினமும் ஒருவேளை, 2 கிராம் வீதம் பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தாலே கருப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி விடும் என்கிறார்கள்..
வயிறு உப்பசம்: அதேபோல, சோம்புவை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதால், கூடுதல் உடல்ஆரோக்கியத்தை பெறலாம்.. சோம்பு நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது.. அல்லது உணவு சாப்பிட்டதும் சோம்பு தண்ணீரை குடித்தால், வாய்வுத்தொல்லை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் தீரும்..
இந்த சோம்பு தண்ணீர், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.. வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரைந்து, தொப்பை குறைந்து சரியான உடல்வாகை தருகிறது. மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் சோம்பில் நிறைய உள்ளன.
பெருஞ்சீரகம்: துத்தநாகம், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, தாதுக்கள், போன்றவை பெருஞ்சீரகத்தில் உள்ளதால்தான், உடல் பருமனை குறைக்க, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், அதிலிருந்து விடுபடவும், ஆயுர்வேத மருத்துவத்திலேயே, இந்த சோம்பு தண்ணீர்தான் பரிந்துரைக்கப்படுகிறது.
உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டதாம் இந்த சோம்பு தண்ணீர்.. வயிற்றை சுற்றியிருக்கும் தேவையற்ற சதைகளை கரைக்கவும், தொப்பையை கரைக்கவும், யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தவும், சோம்பு தண்ணீர் அவசியமாகிறது..
நீரிழிவு நோயாளிகள்: அதேபோல, இரவில் சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், தூங்கும் முன் சோம்பு தண்ணீர் அல்லது சோம்பு டீ தயாரித்து குடித்தால் பலனை காணலாம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.. மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை தரும் இந்த சோம்பு தண்ணீர்.. சர்க்கரை நோயாளிகள் சோம்பு குடிநீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், திசுக்களில் நீர் கோர்ப்பது தடுக்கப்படும்..
தண்ணீரில் சோம்பு சேர்த்து கொதிக்க வைத்து, சிறிது வெண்ணெய் கலந்து பாலூட்டும் தாய்மாருக்கு தந்தால், தாய்ப்பால் அதிகம் சுரக்கும் என்பார்கள்... அதேபோல, இரவு தூங்கும்முன்பு, ஒரு ஸ்பூன் சோம்பை, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைத்துவிட்டு, மறுநாள் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்கலாம். அல்லது இந்த தண்ணீரில் டீ போட்டு குடிக்கலாம்.
யாரெல்லாம் தவிர்க்கலாம்: சிலருக்கு இந்த சோம்பு தண்ணீர் தோல் அழற்சி மற்றும் கொப்புளங்களில், தோலில் வெடிப்பு போன்ற பிரச்சனையை தரலாம்.. எனவே, ஆஸ்துமா போன்ற அலர்ஜி இருப்பவர்கள் இந்த சோம்பு தண்ணீரை குடிக்க வேண்டாம் என்பார்கள்.
அதேபோல கர்ப்பிணி பெண்கள் சோம்பு தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம், சோம்பு கருப்பை சுருக்கத்தை உண்டாக்கிவிடுமாம். ஏதாவது ஒரு நோய்க்காக மருந்து மாத்திரைகளை சாப்பிடுபவர்களும் சோம்பு தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம்.. எனவே, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று சோம்பு தண்ணீரை குடிப்பது, சிறந்த ஆரோக்கியமாகும்.












Click it and Unblock the Notifications