அமீரக வாழ் இந்தியர்களுக்கு மெகா ஜாக்பாட்.. சத்தமின்றி நடந்த முக்கியமான மாற்றம்! இனிமேல் ஜாலி தான்
துபாய்: இந்தியர்கள் பலரும் வளைகுடா நாடுகளில் ஒன்றான அமீரகத்திற்கு அதிகம் செல்கிறார்கள். இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே போர் காரணமாக அமீரகம் இந்தியா இடையேயான விமானக் கட்டணங்கள் உயர்ந்திருந்தன. அவை இப்போது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளன. விமான நிறுவனங்கள் கூடுதல் சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கை டிக்கெட் விலை குறையத் தொடங்கியுள்ளது.
உலகின் முக்கியமான சர்வதேச விமான வழித்தடங்களில் ஒன்றாக இந்தியா அமீரகம்- வழித்தடம் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் இந்தியர்கள் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். அதுவும் குறிப்பாகத் தென்னிந்தியாவில் இருந்து அதிகப்படியானோர் வேலைக்குச் செல்கிறார்கள். வேலைவாய்ப்பு, தொழில், சுற்றுலா மற்றும் குடும்பத்தினரைச் சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் இந்த வழித்தடத்தில் பயணம் செய்கின்றனர்.

விமான கட்டணங்கள்
குறிப்பாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பள்ளி கோடை விடுமுறை மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் விடுமுறை பயணங்கள் அதிகரிப்பதால் விமானக் கட்டணங்கள் வழக்கமாகவே உயர்வது வழக்கம். இந்த ஆண்டும் அதேபோல், கடந்த சில வாரங்களுக்கு முன்பு விமானக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்தன. குறிப்பாகக் கேரளாவுக்கான விமான டிக்கெட்கள் ரொம்பவே அதிகரித்திருந்தது. சில ரூட்களில் ஒரு டிக்கெட்டின் விலை 3,500 முதல் 3,600 திர்ஹம் (₹79,450 முதல் ₹81,720) வரை சென்றது.
இதோடு போர் காரணமாகவும் வளைகுடாவில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்த சூழலில், நிலைமை மோசமாகவே இருந்தது. இந்தச் சூழலில் தான் தற்போது கூடுதல் விமானங்கள் இயக்கப்படத் தொடங்கியதன் காரணமாக விமான டிக்கெட் விலை சுமார் 2,600 திர்ஹம் வரை (₹59,020 வரை) குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குறைந்துள்ளது
Musafir.com நிறுவனத்தின் அதிகாரி ரஹீஷ் பாபு கூறுகையில், இந்தியாவுக்கான விமான சேவைகள் அதிகரித்திருப்பதாலும் இப்போது விலை சற்றே குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். அதேநேரம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது தற்போதைய கட்டணங்கள் இன்னும் அதிகமாகவே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வளைகுடா போரால் பாதிக்கப்பட்டிருந்த விமானச் சேவை பாதிப்புகள் படிப்படியாக சரியாகி வருவதும் கட்டணக் குறைவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஓமன் நாட்டின் மஸ்கட் வழியாக இயக்கப்படும் சலாம் ஏர் (SalamAir) கூடுதல் விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது போலப் பல நிறுவனங்கள் கூடுதல் விமானங்களை இந்த ரூட்டில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், டிக்கெட் விலை குறைந்துள்ளது.
அடுத்து என்ன
சில வாரங்களுக்கு முன்பு விற்பனையானதை விட விலை குறைவு என்றாலும் அவை முழுமையாக பழைய நிலைக்குத் திரும்பிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது என ஏஜெண்டுகள் எச்சரிக்கின்றனர். இது தொடர்பாக ஸ்மார்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர் சஃபீர் மஹ்மூத் கூறுகையில், "கடந்தாண்டை விட இந்தாண்டு கட்டணங்கள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகமாகவே உள்ளன. கோடை விடுமுறை காலத்தில் பயணத் தேவை தொடர்ந்து அதிகமாக இருப்பதும், விமானச் சேவைகள் இன்னும் முழுமையாகப் பழைய அளவுக்குத் திரும்பாததும் இதற்குக் காரணம்" என்று அவர் விளக்கினார்.
என்ன செய்ய வேண்டும்!
எனவே, அமீரகத்தில் இருந்து இந்தியா வருவோர் அல்லது இந்தியாவில் இருந்து அமீரகம் செல்வோர் முன்கூட்டியே பிளான் செய்து விமானக் கட்டணங்களைத் தொடர்ந்து கண்காணித்து முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். எப்போது டிக்கெட் ரேட் குறையும் என்பது யாருக்கும் தெரியாது என்பதால் சரியாகக் கண்காணித்து டிக்கெட் புக் செய்யும்படியே வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications