தஞ்சாவூர் அறநிலையத்துறை அதிகாரி ஜோதிலட்சுமி ஆபீசில் பரபரப்பு! அரசு சேரில் யார் அந்த ஆல் இன் ஆல் தோழி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறையில் நடந்துள்ள ஒரு அசிங்கமான சம்பவம், ஒட்டுமொத்த அரசு வட்டாரத்தையும் உலுக்கியெடுத்துள்ளது... இவ்வளவு பெரிய அரசு துறையில், அதுவும் முக்கியப் பொறுப்பில் இருந்து கொண்டு, ஒரு பெண் அதிகாரி இப்படி செய்வாரா? என்ற அதிர்ச்சியும் சேர்ந்தே கிளம்பி உள்ளது.. என்ன நடந்தது? யாரிந்த பெண் அதிகாரி? நிர்வாகத்தில் வரம்பு மீறி அதிகாரம் செலுத்தி வந்த அந்த "ஆல் இன் ஆல்" தோழியின் பின்னணி என்ன? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ளது தீபாம்பாள்புரம் என்ற கிராமம்.. இந்த கிராமத்தில் மிகவும் பழமையான வன்மீகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக புதுப்பிக்கும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Thanjavur HR amp amp CE Officer Jyothilakshmi Case

தஞ்சாவூர் அரசு அதிகாரி

நாகப்பட்டினத்தை சேர்ந்த கான்ட்ராக்டர் மதியழகன் என்பவர், இந்த பணிக்கான டெண்டரை எடுத்துள்ளார்.. அவர்தான் இந்த வேலைகளை கூடவே இருந்து கவனித்து வருகிறார்..

இந்நிலையில், கோயில் திருப்பணிகளுக்கான தொகையை விடுவிப்பதற்காக, தஞ்சாவூர் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக இருந்த ஜோதிலட்சுமி என்பவர், மதியழகனிடம் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டாராம்.

ஜோதிலட்சுமி கேட்ட லஞ்சம்

அதுமட்டுமல்ல, "கேட்கும் பணத்தை கொடுத்தால் தான் எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக வேலை பார்க்க முடியும்.. இல்லாவிட்டால் தேவையில்லாத சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்" என்று ஜோதிலட்சுமி தரப்பில் இருந்து மதியழகனுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், கான்டிராக்டர் மதியழகனுக்கு, லஞ்சம் கொடுக்க சுத்தமாக விருப்பம் இல்லை.. அத்துடன் இதுகுறித்து தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிலும் புகார் தந்து விட்டார்.

இந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி அன்பரசன், இன்ஸ்பெக்டர்கள் பத்மாவதி, அருண் ஆகியோர் அடங்கிய குழுவினர், மதியழகனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து ஜோதிலட்சுமிக்கு தர சொன்னார்கள்..

அறநிலையத்துறை அதிகாரி

அதன்படியே நேற்று சாயங்காலம் மாலை தஞ்சாவூர் அறநிலையத்துறை ஆபீசுக்கு சென்ற மதியழகன், கிரிஜா என்பவர் மூலம் இணை ஆணையரிடம் அந்த ரசாயனம் தடவிய 1 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.. ஏற்கனவே அங்கு மறைந்திருந்து கண்காணித்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜோதிலட்சுமி மற்றும் கிரிஜா ஆகிய 2 பேரையுமே சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கை அரசு துறையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.. அதேசமயம், கைதான ஜோதிலட்சுமி யார்? லஞ்ச பணத்தை வாங்கிய கிரிஜா யார் என்பது குறித்த தகவல்கள் இப்போது பரபரத்து வருகின்றன.

கைதான ஜோதிலட்சுமி மீது ஏற்கனவே நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளதாம்.. கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம், கோயில் புதுப்பிக்கும் பணிகள் என அனைத்துக்குமே முறைகேடாக பணம் வசூலித்து வந்துள்ளார்.. அதுமட்டுமில்லாமல் கோயில் நிர்வாக அலுவலர்களிடம் ஒவ்வொரு மாசமும், தனக்கு இவ்வளவு தொகையை தந்துவிட வேண்டும் என்று கட்டாய வசூலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

யார் அந்த நிழல் தோழி

அதுமட்டுமல்ல, இந்த மொத்த வசூல் வேட்டையையும் கவனித்துக் கொண்டது ஜோதிலட்சுமியின் நிழலாக வலம் வந்த நெருங்கிய தோழி கிரிஜா தான் என்கிறார்கள் இதுகுறித்து தெரிந்தவர்கள்... இத்தனைக்கும் எந்த அரசு அலுவலக பொறுப்பில் இல்லாதவராம் கிரிஜா..

வெறும் தோழி என்ற அடையாளத்துடன், இணை ஆணையரின் ரூமிலேயே உட்கார்ந்து கொண்டு, அரசு நிர்வாகத்தில் தலையிட்டு வரம்பு மீறி அதிகாரம் செலுத்தி வந்திருக்கிறார்.. விதிகளுக்கு புறம்பாக கிரிஜாவிற்கு ஜோதிலட்சுமிதான் அளவுக்கு அதிகமான அதிகாரத்தை தந்திருக்கிறார்.. அதனால்தான், கீழ்மட்ட அதிகாரிகளை படாதபாடு படுத்தி வந்துள்ளார் தோழி கிரிஜா..

ஆல் இன் ஆல் தோழி

நேற்றைய தினமும் லஞ்ச விவகாரத்தில் உஷாராக இருந்த ஜோதிலட்சுமி, அந்த லஞ்ச பணத்தை நேரடியாக வாங்காமல், புரோக்கரிடம் தந்து விடுமாறு சொல்லி உள்ளார்.. அந்த புரோக்கர் பெயர்தான் தோழி கிரிஜா..

இவை அத்தனையும் புகாராக ஏற்கனவே மேலிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.. அந்த குற்றச்சாட்டுகள் சம்பந்தமான விசாரணைக்கு அரசு ஏற்பாடு செய்து வந்த நிலையில்தான், நேற்று வசமாக 2 பெண்களுமே லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மாட்டிக்கொண்டுள்ளனர். கோயில் திருப்பணி தொடர்பான லஞ்ச வழக்கில் இணை கமிஷனர் கைது செய்யப்பட்ட சம்பவம், அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+