இஸ்ரேல் முதுகில் குத்திய அமெரிக்கா.. ஈரானுக்கு செய்த உதவி! கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் நிலவி வந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த மோதலின் போது ஈரானின் சில தலைவர்களை அமெரிக்காவே காப்பாற்றியதாம். அந்த தலைவர்களை இஸ்ரேல் கொல்ல திட்டமிட்டிருந்த நிலையில், சரியான நேரத்தில் எச்சரிக்கை கொடுத்து அவர்களை அமெரிக்கா காப்பாற்றியுள்ளது.

அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் கடந்த மாதம் வரை நீடித்தது. இதனால் ஹார்முஸ் பாதிப்பு தொடங்கி பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. போரை முடிவுக்குக் கொண்டு வர நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் அது முடியப் பல மாதங்கள் ஆனது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையின் போது சில ஈரான் தலைவர்களை அமெரிக்காவே காப்பாற்றியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Iran Israel Middle East

இஸ்ரேல் திட்டம்

அதாவது ஈரான் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தச் சென்றிருந்த முகமது பாகர் காலிபாப் மற்றும் அப்பாஸ் அரக்சி ஆகியோரை படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாகவும் தக்க நேரத்தில் அமெரிக்கா இது தொடர்பாக எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடைபெற்ற மிகவும் முக்கியமான தற்காலிக போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்காவுக்கு இந்த தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக வளைகுடாவில் உள்ள தனது நட்பு நாடுகள் மூலம் ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் வெளியுறவு அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகரைப் படுகொலை செய்ய இஸ்ரேல் முயன்றால்.. அது இடைக்கால அமைதி உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை முற்றிலுமாக முடக்கி, வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் கடுமையான போருக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்கா அஞ்சியது. இதனால் காரணமாகவே அமெரிக்கா அலர்ட் கொடுத்துள்ளது.

பின்னணி

கடந்த பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதில் இருந்தே, ஈரானின் மூத்த தலைவர்களை குறிவைப்பது இஸ்ரேல் வேலையாக வைத்திருந்தது. அப்படி தான் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி முதல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி வரை, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஈரான் தலைவர்களை இஸ்ரேல் படைகள் கொன்றுள்ளன. சொல்லப்போனால் போரின் தொடக்கத்தில் இருந்தே, அமெரிக்க உளவுத்துறையின் தகவல்களின் அடிப்படையில் தான் ஈரான் தலைவர்களை இஸ்ரேலைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வந்தது.

அமெரிக்கா

அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த விரும்பிய மிதவாத தலைவர்களான அலி லாரிஜானி மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கமல் கராசி போன்றோரையும் இஸ்ரேல் தனது விமானத் தாக்குதல்களில் கொன்றது. அப்போது எல்லாம் அமெரிக்கா எந்தவொரு வார்னிங்கும் தரவில்லை. ஆனால், அமைதி பேச்சுவார்த்தை நடக்கும்போது.. ஒப்பந்தம் இறுதியாகும்போது அரக்சியும் காலிபாப்பும் கொல்லப்பட்டால் அது பெரிய பிரச்சினையாகிவிடும் என்று அமெரிக்க அதிகாரிகள் கருதினர். இவர்களை இஸ்ரேல் படுகொலை செய்தால், அது ஈரானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் சீர்குலைத்துவிடும் என்று அமெரிக்கா அஞ்சியது.

காரணம்

ஹார்முஸ் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது, ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துவது என முக்கியமான விஷயங்களுக்கு ஈரான் சார்பில் அரக்சியும் காலிபாப்பும் தான் பிரதிநிதிகளாக இருந்தனர். இந்தச் சூழலில் தான் அவர்களின் பெயர் இஸ்ரேலின் ஹிட் லிஸ்ட் பட்டியலில் இருந்ததால் அமெரிக்கா உடனடியாக ஈரானுக்கு வார்னிங் கொடுத்து, அவர்களைக் காப்பாற்றி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+