திருவாரூரில் கணவரின் "கண்ணீர் அஞ்சலி" போஸ்டரை பார்த்ததுமே மனைவி செய்த காரியம்.. உடனே மாறிய காட்சி

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட சாதாரண பிரச்சனை, அந்த குடும்பத்தையே நிலைகுலைய வைத்துவிட்டது.. எதையும் சரியாக விசாரிக்காமல், ஆராயாமல் ஒரு நொடியில் ஆத்திரத்தில் எடுக்கப்பட்ட முடிவு, உலகமறியா அவர்களின் பிஞ்சு குழந்தைகளையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.. அப்படி என்ன நடந்தது திருவாரூரில்? இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது கரும்பியூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் பிரவீன். 31 வயதான இவர் நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வருகிறார்..

இவரது மனைவி பெயர் காயத்ரி.. 24 வயதாகிறது.. இவர்களுக்கு நான்கரை வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

Tiruvarur

திருவாரூர் தம்பதி

திருத்துறைப்பூண்டி பகுதியில் வசித்து வந்த இந்த தம்பதிக்கு இடையே, சமீப நாட்களாகவே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.. சாதாரணமாக ஆரம்பித்த இந்த கருத்து வேறுபாடு, 2 பேருக்குமிடையே நாளுக்கு நாள் வாக்குவாதமாகவே வெடித்து, மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் நேற்று முன்தினமும் இவர்களது வீட்டில் மறுபடியும் இதே குடும்ப பிரச்சனை வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனைவியிடம் கோபித்துக்கொண்ட பிரவீன், வீட்டில் இருக்கப் பிடிக்காமல் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கரும்பியூர் பகுதியிலிருந்து திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் மைலி அம்மன் கோவில் பகுதிக்கு பிரவீன் சென்றுள்ளார்.

எலி மருந்தை சாப்பிட்ட கணவர்

அங்கு ரொம்ப நேரமாக தனியாக உட்கார்ந்திருந்த அவர், வீட்டில் ஏற்பட்ட சண்டை காரணமாக அங்கிருந்த கடை ஒன்றில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

விஷத்தை சாப்பிட்டதுமே, தான் மயங்கி விழுவதற்கு முன்பாக, தன்னுடைய செல்போனில் ஏற்கனவே எடிட் செய்து தயாராக வைத்திருந்த தன்னுடைய "கண்ணீர் அஞ்சலி" போஸ்டரை, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.. காரணம், குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் தான் இறந்துவிட்டதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி ஸ்டேட்டஸை பதிவேற்றினார்.. அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், தன்னுடைய போட்டோவையும் வைத்து பதிவிட்டிருந்தார்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

இதனிடையே கணவர் கோபித்துக் கொண்டு வெளியில் சென்றால், வீட்டில் குழந்தைகளுடன் டென்ஷனில் இருந்தார் காயத்ரி.. பிரவீன் எங்கே போனாரோ? என்ன ஆனாரோ? என்ற பதைபதைப்பில் இருந்தார்.. பிறகு பிரவீனின் கண்ணீர் அஞ்சலி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ஸை தற்செயலாக பார்த்து பதறிப்போனார்..

பிரவீன் விஷம் குடித்து நிஜமாகவே இறந்துவிட்டார் என்று நினைத்து காயத்ரி, உச்சக்கட்ட அதிர்ச்சிக்கு ஆளானார்.. கணவர் இல்லாத வாழ்க்கையை தன்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலையில், ரூமில் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு, அங்குள்ள ஃபேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஃபேனில் தூக்கில் தொங்கிய மனைவி

ஆனால், மைலி அம்மன் கோவில் பகுதியில் எலி மருந்தை சாப்பிட்டு மயங்கிய நிலையில் உயிருக்குக் போராடிக்கொண்டிருந்த பிரவீனை, அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் எமர்ஜென்சி பிரிவில் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.. இப்போதும் பிரவீன் டாக்டர்களின் கண்காணிப்பில்தான் இருந்து வருகிறார்.

குடும்பத் தகராறு காரணமாக கணவர் விஷம் குடித்து, தான் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப்பில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பார்த்ததுமே அதை நிஜமென நம்பி மனைவி காயத்ரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவலறிந்த உள்ளூர் போலீசார், காயத்ரியின் உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+