ரஸ்தாளி சூப்பர்.. கற்பூரவள்ளி பெஸ்ட்.. தினமும் எத்தனை வாழைப்பழம் சாப்பிடணும் தெரியுமா? இதுதான் டைம்
சென்னை: வாழைப்பழங்கள் நம்முடைய உடலுக்கு நன்மை தரக்கூடியவை. அந்த பழங்களை நாம் தினமும் எத்தனை சாப்பிட வேண்டும் தெரியுமா? எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா?
வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளன. செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், பச்சைப்பழம், மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி என பலகைகள் உண்டு.

அதேபோல சத்துக்கள் என்று எடுத்துக்கொண்டால், வாழைப்பழத்தில் வைட்டமின் A, B6, C, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.. அதாவது ஒரு பழுத்த வாழைப்பழத்தில் நமக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் இருக்கிறதாம். அதனால்தான் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட சொல்கிறார்கள்.
இதய நோய்கள்: வாழைப்பழம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ரூமட்டாய்டு ஆர்த்தரைடீஸ், மன அழுத்தம், இதய நோய்கள் வரும் வாய்ப்புகளை இந்த பழங்கள் குறைக்கின்றன.
ரத்த அழுத்தம், சிறுநீரகக்கற்கள், முழங்கால் வலி போன்றவை விரட்டுகின்றன.. இதய நோய்கள் வராமல் தடுக்கின்றன.. புற்று நோய் செல்கள் உருவாவதும் தடுக்கப்படும்.. ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை மேம்படுத்த இந்த பழங்கள் உதவுகின்றன.
குடல் ஆரோக்கியம்: ஆற்றல் அதிகரிக்கக்கூடிய தன்மை இந்த பழத்துக்கு உண்டு,. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் முடியும். நமக்கு தேவையான நார்ச்சத்துக்கள் கிடைத்துவிடுவதால், மலச்சிக்கல் தீர்கிறது.. குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. மன அழுத்தத்தை விரட்டி நிம்மதியான தூக்கத்தை தரக்கூடியது இந்த வாழைப்பழம். எலும்பு ஆரோக்கியத்துக்கும், ஹார்மோன் உற்பத்தியிலும், இந்த பழங்களின் பங்கு அபாரமானவை.
அதேசமயம், அதிக வாழைப்பழங்கள் சாப்பிடுவது ஊட்டச்சத்து குறைபாடை உண்டு செய்யலாம். குறிப்பாக, புரதம், கொழுப்பு, கால்சியம், வைட்டமின் D, இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் குறையலாம்.
வாழைப்பழங்கள்: ஆரோக்கியமானவர்கள் தினமும் 1, 2, 3 வரை வாழைப்பழங்கள் சாப்பிடலாம். வெறும் காலை நேரத்தில் வாழைப்பழத்தை சாப்பிடுவதற்கு பதிலாக மதியம் அல்லது இரவு நேரத்தில் சாப்பிடலாம்.
காரணம், வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோபான், அமினோ ஆசிட்கள், மூளையின் செயல்பாடுகளை மழுங்கடிக்க செய்துவிடும்.. இதனால் தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகளும் வந்துவிடும்.. அதேபோல, வெறும் வயிற்றிலும் வாழைப்பழம் சாப்பிடும்போது, அதிலிருக்கும் அமிலத்தன்மை, குடல் இயக்கங்களை பாதிப்படைய செய்யக்கூடும்... வேண்டுமானால் மற்ற பழங்களுடன் சேர்த்து வாழைப்பழத்தை சாப்பிடலாம்.
வாயு பிரச்சனை: வாழைப்பழத்திலுள்ள நார்ச்சத்துகள், வாயு பிரச்சனை மற்றும் வயிறு வீக்கத்தை தந்துவிடும்.. இதிலுள்ள அளவுக்கதிகமான மாவுச்சத்து, செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்து கொள்ளும்.. வாழைப்பழத்தில் விட்டமின் B6 நிறைய உள்ளதால், நரம்புகளையும் பாதிக்கக்கூடும். ஏனவே தான், அதிக வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்பார்கள்.
பூவம், ரஸ்தாளி, மாலை, கற்பூரவாழை, செவ்வாழை போன்ற வாழைப்பழங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் குடலை எளிதில் சுத்தப்படுத்தும்.. பூவன் வாழை நல்ல ஜீரண சக்தியை தந்து ரத்தத்தையும் விருத்தி செய்யக்கூடியது. தசை ஆரோக்கியத்துக்கும் நல்லது.
ரஸ்தாளி: ரஸ்தாளிபழம் சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும். ஆனால் உணவு சாப்பிட்டதுமே, இதை சாப்பிட்டால் மந்தத்தன்மையை தந்துவிடும். பச்சை வாழைப்பழம் குளிர்ச்சி நிரம்பியதுஎன்பதால் குறைந்த அளவு சாப்பிட வேண்டும். உடல் சூட்டை தணிக்கக்கூடியது. காசநோய், ஆஸ்துமா, வாதநோய்காரர்கள் இந்த பழத்தை தவிர்க்கலாம்.
மலை வாழைப்பழத்தை, வாத நோய்காரர்கள் தவிர, மற்றவர்கள் தாராளமாக சாப்பிடலாம். சருமத்துக்கு மினுமினுப்பு தரக்கூடியது. பேயன் வாழைப்பழம் குழந்தைகளுக்கு ஏற்படும் கணைச்சூட்டை தணிக்கும் இயல்புடையது. கற்பூர வாழைப்பழம் மூளை வளர்ச்சிக்கு நல்லது. தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு புண்களை ஆற்ற உதவுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications