Fatty Liver Symptoms: கொழுப்பு கல்லீரல் ஏற்பட காரணம் இதுதானா? லிவரை பாதுகாக்கும் சூப்பர் உணவு லிஸ்ட்
சென்னை: புதுப்புது வைரஸ்களும், தொற்று நோய்களும் பரவி கொண்டிருக்கும் சூழலில் அவைகளை எப்படி ஒழிப்பது என்ற பதற்றம் மனிதர்களிடம் காணப்படுகிறது.. அதேசமயம், தீவிரமாகி கொண்டிருக்கும் பல்வேறு நோய்களையும் சமாளிக்க முடியாமல் தடுமாறும் நிலைமை ஏற்படுகிறது. அதில் ஒன்றுதான் கொழுப்பு கல்லீரல்.. இந்த கொழுப்பு கல்லீரல் உருவாவதற்கு காரணங்கள் என்னென்ன? கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகள் என்னென்ன? இந்த நோய் வராமல் காக்கக்கூடிய உணவுகள் என்னென்ன? வைட்டமின் B12 பங்கு என்னென்ன? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிவதால் ஏற்படக்கூடிய நோய்தான், ஃபேட்டி லிவர் திசீஸ் (fatty liver disease) அதாவது, கொழுப்பு கல்லீரல் நோய்.. இதில் 2 வகைகள் உள்ளன.. ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய் (AFLD) மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD).

அறிகுறிகள் என்னென்ன
இந்த நோய் ஆரம்பத்தில் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது. எனவே எளிதாக சரிசெய்யலாம். ஆனால், நோய் தீவிரமாகிவிட்டால், கல்லீரலில் வீக்கம் ஏற்படும், பிறகு ஆரோக்கியமான திசுக்களும் சேதமடையும், நாளடைவில் கல்லீரலின் செயல்பாடு முற்றிலும் பாதிப்படையும். இதன்விளைவு, கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்றுநோயில் போய் முடியலாம்.
கல்லீரல் பாதிப்பு இருக்கிறதென்றால், தொடர்ச்சியான சோர்வு அல்லது பலவீனமாக தோன்றுவதை வைத்து அறியலாம்.. கல்லீரல் வயிற்றின் வலதுபுறத்தில் மேல் பகுதியில் வலி, வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். திடீரென எடை குறைதல், ஆற்றல் அல்லது தசை வலிமையின்மை, தோல், கண்கள் மஞ்சள் நிறமாக மாறுவது போன்றவைகளை வைத்து அறிந்து கொள்ள முடியும்.
பாதிப்புக்கு காரணங்கள்
மதுபானங்கள், ஆரோக்கியமற்ற உணவு, வாழ்க்கை முறை, உடற்பருமன், சர்க்கரை நோய் போன்றவையே கொழுப்பு கல்லீரலுக்கு காரணங்களாக உள்ளன. நம்முடைய உடலில் கெட்ட கொலஸ்டிரால், அதிகமாகிவிடும்போது, அது நேரடியாக கல்லீரலை பாதிக்க செய்கிறது. கொழுப்பு கல்லீரல் என்ற தொந்தரவே இங்குதான் ஆரம்பமாகிறது.
கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு வைட்டமின் B12 குறைபாடும் மிக முக்கிய காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ரத்த சிவப்பணு உற்பத்தி, DNA தொகுப்பு மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு வைட்டமின் B12 கட்டாயம் தேவையாகும்.. இந்த வைட்டமின், இயற்கையாகவே இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்களில் நிரம்பி கிடக்கிறது..
அதிக கொழுப்புள்ள உணவு
வறுத்த உணவுகள், அதிக கொழுப்புள்ள இறைச்சிகள், பாஸ்தாக்கள், சர்க்கரை உணவுகள் போன்றவை கல்லீரலில் கொழுப்பு சேர மூல காரணமாகின்றன.. எனவே இவைகளை தவிர்த்துவிட்டு, சால்மன், டுனா போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை உணவில் சேர்க்கலாம்.
அக்ரூட் பருப்புகள், ஆளிவிதை, நார்ச்சத்து அதிகமுள்ள புழுங்கல் அரிசி, கோதுமை தானியங்களையும், பீன்ஸ், பாசிப்பருப்பு புரோட்டீன் உணவையும், சேர்த்து கொள்ளலாம். திராட்சைப்பழம், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகின்றன.
கல்லீரலில் கொழுப்பை கரைக்க பூண்டு, காபி போன்றவை உதவுகின்றன.. திராட்சை, எலுமிச்சை போன்றவை கல்லீரலை சுத்தப்படுத்தக்கூடியவை ப்ரோக்கோலி, காலிஃபிளவர் போன்ற காய்கறிகளை தவிர்க்கக்கூடாது.
-
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications