அடிக்கடி உடலுறவு.. ஆயுளை அதிகரிக்கும்! ஆண்களுக்கு இன்னொரு நன்மையும் இருக்கு! மருத்துவர்கள் விளக்கம்
சென்னை: பாலியல் வாழ்க்கை என்பது நீங்கள் நீண்ட காலம் வாழ உதவும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா.. இது உங்களுக்கு முழுக்க முழுக்க ஆச்சரியமாக இருக்கலாம். ஆனாலும், அடிக்கடி உடலுறவு கொள்வோருக்கு நீண்ட ஆயுளுடன் உடல்நிலை சார்ந்து நன்மைகளும் கிடைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. நோயெதிர்ப்பு செயல்பாடு, மன அழுத்தம் உள்ளிட்ட சிக்கல்களை அதிகம் உடலுறவு கொள்வது குறைப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பாலியல் உறவுகள் குறித்தும் உடலுறவு குறித்தும் நமது சமூகத்தில் பெரும்பாலும் யாரும் பேசுவதே கிடையாது. இதனால் பலரும் சமூக வலைத்தளங்களிலேயே இதுபோன்ற தகவல்களைத் தெரிந்து கொள்கிறார்கள்.

பிரச்சினையா: அவற்றில் சில தகவல்கள் உண்மையாக இருந்தாலும் பெரும்பாலான தகவல்களைத் தவறாகவே இருக்கிறது. அதுபோல தான் அடிக்கடி உடலுறவு கொள்வது குறித்தும் இணையத்தில் பல வித தகவல்கள் உலா வருகிறது. இதனால் சில உடல்நிலை பாதிப்பு வரலாம் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள்.
அப்படியா அடிக்கடி உடலுறவு கொள்வதால் பிரச்சினை வருமா என மருத்துவர்களிடம் கேட்டால்.. அப்படி எல்லாம் எதுவும் இல்லை.. சொல்லப் போனால் அடிக்கடி உடலுறவு கொள்வது நீண்ட ஆயுளை அளிப்பதுடன் பல சிக்கல்களைச் சரி செய்வதாகவே பல ஆய்வுகள் காட்டுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஹார்மோன் நன்மைகள்: உடலுறவு என்பது நன்மை அளிக்கும் பல ஹார்மோன்களை தூண்டுகிறது. காதல் ஹார்மோன் என்று அழைக்கப்படும் ஆக்ஸிடாஸின் உடலில் ஏற்படும் சிக்கலைக் குறைக்க உதவுகிறது.. இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது. இது தவிர எண்டோர்பின் ஹார்மோனும் சுரக்கிறது. அது உடலில் இயற்கையான வலி நிவாரணிகளாகச் செயல்படுகிறது. மேலும், நல்ல மனநிலையை நமக்குத் தருகிறது.
இது மட்டுமின்றி, இந்த ஹார்மோன் மன அழுத்தம், கவலை மற்றும் மனச்சோர்வைக் குறைக்க உதவுகிறது. இது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வாழ்க்கையை மேம்படுத்தும்.
உளவியல் நன்மைகள்: அதிகம் உடலுறவு கொள்வது உளவியல் ரீதியாகவும் நமக்குப் பல நன்மைகளைத் தருகிறது. இது உங்கள் பாட்னர்கள் உடன் வலுவான ஒரு பிணைப்பை ஏற்படுத்த உதவுகிறது. இதன் மூலம் அந்த உறவில் உங்களுக்குத் திருப்தி அதிகரிக்கிறது. வலுவான எமோஷ்னல் தொடர்பு என்பது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளையும் செய்ய நமக்கு ஊக்குவிப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இதன் மூலம் நமது ஆயுளும் அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
குறிப்பாக உடலுறவு கொள்வது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து.. இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறதாம். ரெகுலரான உடலுறவு என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதாகப் பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதேபோல வாரத்திற்கு இரண்டு முறையாவது உடலுறவு கொள்வோர் உடலில் நோய்களுக்கு எதிராகப் பாதுகாக்க உதவும் ஆன்டிபாடியான இம்யூனோகுளோபுலின் ஏ (IgA) அளவு அதிகமாக இருக்கும் என்பதும் தெரிய வந்து இருக்கிறது.
இதயத்திற்கு நல்லது: மேலும், உடலுறவு கொள்ளும் போது இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் ரத்த அழுத்தம் குறைகிறது. இதன் மூலம் இதய நோய் ஆபத்து குறைந்து இதயம் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும், அரிதாக உடலுறவு கொள்வோர் உடன் ஒப்பிடும்போது, அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் ஆண்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுவதும் குறைவாகவே இருப்பதாகவும் ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள்.
ஆண்களே கவனம்: அதேபோல அடிக்கடி உடலுறவு கொள்வது ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும். இதனால் தசை வலிமையாகும், எலும்பு அடர்த்தி அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். பொதுவாகவே அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவு என்பது நல்ல மனநிலை, அதிக ஆற்றலை நமக்குத் தருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications