வீட்டில் "இந்த" 3 பொருள் இருந்தால் உயிருக்கே ஆபத்து.. தூக்கி தூர போடுங்க! ஹார்வர்ட் டாக்டர் வார்னிங்
சென்னை: நமக்கே தெரியாமல் வீட்டிற்குள்ளேயே நாம் ஆபத்தான பல பொருட்களை வைத்திருக்கிறோம். இவை நம்மை அறியாமல் உயிரை மெல்லப் பறித்துவிடும். இதற்கிடையே பிரபல ஹார்வர்ட் மருத்துவர் சவுரப் சேத், வீட்டில் பரவலாக இருக்கும் மூன்று ஆபத்தான பொருட்கள் குறித்து எச்சரித்துள்ளார். இந்த பொருட்களை உடனடியாக தூக்கித் தூர வீசுமாறு டாக்டர் சவுரப் எச்சரித்துள்ளார்.
இந்த காலத்தில் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதால் இளைஞர்கள் பல விஷயத்தைப் பார்த்துப் பார்த்து செய்கிறார்கள். வெளியே ஒரு விஷயத்தைச் செய்யும் முன்பு அது உடலுக்கு கேடு விளைவிக்குமா என்பதைப் பலமுறை யோசிக்கிறார்கள்.

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்:
ஆனால், வீட்டிலேயே இருக்கும் பல பொருட்கள் நமது உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்தலாம். அப்படி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மூன்று பொருட்கள் குறித்து ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்டில் பட்டம் பெற்ற இரைப்பைக் குடலியல் நிபுணரான டாக்டர் சவுரப் சேத் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில் வீட்டில் உள்ள இந்த மூன்று பொருட்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் இவை வீட்டில் இருந்தால் அதை உடனடியாக தூக்கித் தூரப் போட வேண்டும் என்று சவுரப் சேத் எச்சரித்துள்ளார். ஆபத்தைச் சுட்டிக்காட்டியது மட்டுமின்றி, அதற்கு மாற்றாக எந்த பொருட்களைப் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் பரிந்துரைத்துள்ளார்.
வாசனை மெழுகுவர்த்திகள்:
அவரது லிஸ்டில் முதலில் இருப்பது வீடுகளுக்குள் பலரும் பயன்படுத்தும் வாசனை கொண்ட மெழுகுவர்த்திகள். இது அறைக்கு ஒரு நல்ல நறுமணத்தைக் கொடுக்கும் என்றாலும், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று அவர் எச்சரிக்கிறார். ஏனென்றால் வாசனை மெழுகுவர்த்திகளில் பித்தலேட்டுகள் உள்ளன. அவை ஹார்மோன் சமநிலையைக் கூட பாதிக்கும் என்பதால் அதைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு எச்சரிக்கிறார். இதற்கு மாற்றாக இயற்கையான சாதாரண மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தலாம் என அவர் அறிவுறுத்துகிறார்.
பிளாஸ்டிக் கட்டிங் போர்டுகள்:
இந்த பட்டியலில் அடுத்துள்ளது பிளாஸ்டிக் கட்டிங் போர்டுகள். சமீப காலங்களாகவே பலரும் கிட்சனில் பிளாஸ்டிக் கட்டிங் போர்டுகளையே பயன்படுத்துகிறார்கள். காய்கறிகளைக் கட் செய்யும் போது பலகையில் இருந்து மைக்ரோபிளாஸ்டிக்ஸ் வெளியாகும். இது உணவிலும் கலக்கும் போது மிக மோசமான உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார். இதற்கு மாற்றாக மரத்திலான கட்டிங் பிளேட் அல்லது கண்ணாடி கட்டிங் பிளேட்களை பயன்படுத்தலாம் என அவர் குறிப்பிடுகிறார்.
நான்-ஸ்டிக் பான்கள்:
மூன்றாவது நான்-ஸ்டிக் பான்கள்.. உணவு ஒட்டிக்கொள்ளாமல் இருக்க இந்த நான்-ஸ்டிக் பான்கள் பெரியளவில் உதவுகிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், சேதமடைந்த அல்லது கீறல்கள் இருக்கும் நான்-ஸ்டிக் பான்களை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் போது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அது பெர் மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் பொருட்களை (பிஎஃப்ஏக்கள்) வெளியிடலாம். இதுவும் மிக மோசமான உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, உங்கள் நான்-ஸ்டிக் பான்களில் கீறல் இருந்தால் அதை உடனே தூக்கித் தூரப் போடுங்கள். புதிய நான்- ஸ்டிக் பான்களை வாங்குகள்.. அல்லது எஃகு அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள் என்கிறார்.
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் யாரும் மருத்துவ ஆலோசனையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உடலுக்கு எதாவது பிரச்சினை வந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications