வெறும் வயிற்றில் "இது" போதும்.. கல்லீரல் கோளாறு காலியாகும்.. நீரிழிவும் நாலடி தள்ளி நிக்கும் பாருங்க
சென்னை: பாகற்காயில் அபரிமிதமான சத்துக்கள் இருந்தாலும், பாகற்காய் இலைகளிலும் அதே அளவுக்கு சத்துக்கள் உள்ளன.. எந்தெந்த வகைகளில் பாகற்காய் இலைகளை பயன்படுத்தலாம்? அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
இனிப்பு அல்லாத காய், அதாவது, பாகு+அல்+காய் என்று பெயர்.. பாகற்காயில், பசலைக்கீரையில் இருப்பதைவிட 2 மடங்கு கால்சியம் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ளதைவிட 2 மடங்கு பொட்டாசியம் உள்ளது.

பெரும்பாலும் இந்த காயின் விதைகளை தவிர்த்துவிடுவார்கள். ஆனால், இந்த விதை இதய நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. தேவையற்ற கொழுப்புகளை எரித்து, இதய தமனி அடைப்பு ஏற்படுவதில் இருந்தும் விடுபட வைக்கிறது.. புற்றுநோய், லூக்கீமியா, ரத்தசோகை போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றலும் இந்த பாகற்காய்களுக்கு உண்டு..
பாகற்காய்: பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, பி2, ஈ, கே, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பிளாவினாய்ட்ஸ், உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கின்றது. அத்துடன், பாகற்காயில் கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரிகள் போன்றவை குறைந்த அளவே உள்ளன.. புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து இன்சுலின் சுரப்பதை அதிகரிக்க செய்கிறது..
காய், விதைகளை போலவே, பாகலின் இலையும், மருத்துவ குணங்கள் கொண்டவை.. துளசி இலையுடன், இந்த பாகற்காய் இலையும் ஒன்றாக சேர்த்து அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால், நுரையீரலுக்கு மிகவும் நல்லது.. ஆஸ்துமா, சளி, இருமல் போன்றவை பறந்துபோய்விடும். இந்த இலைகளை நீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்த தண்ணீரை மட்டும் தினமும் குடித்தால் வந்தாலே போதும், எந்தவிதமான தொற்றுநோய்களும் நம்மை அண்டாது.
விஷக்கடி: சீரகத்தை வறுத்து பொடி செய்து, இந்த இலையின் சாற்றுடன் கலந்து, தினமும் 2 வேளை சாப்பிட்டால், எப்பேர்ப்பட்ட விஷ ஜுரமும் காணாமல் போய்விடும்.. பாகல் இலையுடன் 4 மிளகை சேர்த்து, அரைத்து கண்களை சுற்றி பற்று போல போட்டு வந்தால், மாலைக்கண் நோய்கள் குணமாகும். இலையை கொதிக்க வைத்து, சாறு எடுத்து குடித்தால், கல்லீரல் பிரச்சனையும் தீர்வதாக சொல்கிறார்கள்.
அதேபோல, நுரையீரலின் நண்பனாக இந்த பாகல் இலை திகழ்கிறது.. பாகல் இலையில் இருந்து சிறிது சாறு எடுத்து, அதே அளவுக்கு பசுமோரில் கலந்து 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தாலே, காசநோய்கள் குணமாக தொடங்கும். சிறுநீரக கற்களை கரைப்பதற்கும், வாயு தொல்லையை விரட்டுவதற்கும் இந்த இலைகள் உதவுகின்றன

பாகல் சாறு: பாதங்களில் வெடிப்புகள் இருந்தால், இந்த இலையின் சாறை எடுத்து பூசி வந்தாலும், வெடிப்புகள் மறையும்.. வெறும் வயிற்றில் இந்த பாகல் இலை சாற்றை குடித்து வந்தால், வயிற்றிலுள்ள கிருமிகள் அழிவதுடன், மலச்சிக்கலும் நீங்கும்.. தீப்புண்கள், கொப்புளங்கள், போன்றவை இருந்தல், பாகற்காய் இலைச்சாறுடன், சிறிது நாட்டுச்சர்க்கரையும் சேர்த்து குழைந்து புண்கள் மீது வைத்தாலே காயங்கள் மெல்ல ஆற தொடங்கும்
அல்லது, இந்த இலைகளை தண்டோடு எடுத்து உலரவைத்து, பொடியாக்கி அதனை காயங்கள், புண்கள், கொப்புளங்கள் மீதும் மருந்தாக போட்டுவந்தால் நிவாரணம் கிடைக்கும்.
சர்க்கரை நோய்: பாகற்காய் இலையில் சாறு எடுத்து, அதில், சிறிது பெருங்காய பொடியை கலந்து சாப்பிட்டுவந்தால், நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. ஆனால், மருத்துவரின் உதவியோடுதான் இந்த இலைகளை பயன்படுத்த வேண்டும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications