கொத்து கொத்தா காய்க்கும் சுண்டைக்காய்.. பச்சை சுண்டைக்காயில இவ்ளோ இருக்கா? அதென்ன மிளகு சுண்டை சூப்?
சென்னை: பார்ப்பதற்கு குட்டி சுண்டைக்காய், ஏகப்பட்ட பலன்களை தருகிறது.. வழக்கமாக சுண்டைக்காய் வற்றல், காரக்குழம்பு, வற்றல்குழம்பு என்றில்லாமல் இதில் சூப் செய்து குடிக்கலாம். இந்த சுண்டையின் பலன்கள் என்னென்ன தெரியுமா?
இந்த காய்கள் சீக்கிரத்தில் சுண்டிவிடுமாம்... அதனால்தான், இதற்கு சுண்டைக்காய் என்று பெயர் வந்ததாக சொல்வார்கள்.. சித்த மருத்துவத்தில் சுண்டைக்காய்க்கு தனி சிறப்பிடம் உண்டு.

நார்ச்சத்து: நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் இந்த சுண்டைக்காயில் உண்டு. இந்த செடியின் பூக்கள் வெள்ளை கலரில் இருக்கும்.. இலைகள் பெரிதாக இருக்கும். இந்த இலையின் சாறுகள், வயிற்றுப்புண்களை ஆற வைக்க உபயோகமாகின்றன. அதேபோல, சுண்டைக்காய் பழுத்துவிட்டால், பழமாகிவிடும்.. இந்த பழங்களை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி நீங்கும்..
வீக்கங்கள்: உடலில் வீக்கங்கள் ஏற்பட்டால், இதன் இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி, வீக்கங்கள் மீது கட்டினால் நிவாரணம் கிடைக்கும். சமையலுக்கு இளம் சுண்டையைதான் பயன்படுத்துவார்கள்.. குடல் பகுதிகளிலுள்ள நச்சுக்களை அழிக்கக்கூடியது.. ஜீரணி சக்தியை பெருக்கக்கூடியது.. அனீமியா பிரச்சனை உள்ளவர்கள், சுண்டைக்காயை அடிக்கடி உணர்வில் சேர்த்து கொள்ளலாம்..
அதேபோல பக்கவாதம் பாதிக்கப்பட்டவர்களும், சுண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.. இது துவர்ப்பு மற்றும் லேசான கசப்புத்தன்மை உடையதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.. இதை அடிக்கடி சாப்பிடும்போது, ரத்தச்சர்க்கரை கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்கிறார்கள்.
சுண்டைக்காயின் உபயோகம்: சுண்டைக்காயை தொடரந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதே இல்லை. வயிற்றில் உள்ள புழுக்களையும் வெளியேற்றும்.. வயிறு உபாதைகளுக்கு இந்த சுண்டைக்காய் மிகவும் நல்லது.. வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம், போன்ற பிரச்சனைகளை சரிசெய்யக்கூடியது.. அதனால், பச்சை சுண்டைக்காயை கூடுமானவரை பயன்படுத்தலாம்.. சுண்டைக்காய் கிடைக்காத சமயங்களில் வேண்டுமானால், சுண்டை வற்றலை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மூல நோய் உள்ளவர்கள், சிறிது சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தின் கடுப்பு, ரத்தக் கசிவும் நீங்கும்.. மூட்டு வலி இருப்பவர்களும் அடிக்கடி சுண்டையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். சுண்டைக்காயில் ரிபோஃபுளோவின் மற்றும் தயமின் நிறைந்துள்ளதால், வாய் புண்களை குணப்படுத்துகிறது.. அத்துடன் சொத்தைப் பற்கள் உருவாவதை தடுத்து, ஈறுகளுக்கு பலம் தருகிறது.
சுண்டை சூரணம்: "சுண்டை வற்றல் சூரணம்" என்றே இப்போதெல்லாம் கிடைக்கிறது.. இந்த சூரணத்தை, மோரில் கலந்து குடித்து வந்தால், குடல் வயிறு பகுதிகள் சுத்தமாகும்.. நல்ல நுண்கிருமிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.. ரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது இந்த சுண்டைகாய். பச்சை சுண்டைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், எலும்புகள் பலப்படும்.. பெண்களுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது இந்த காய்.
வற்றல் பொடி: ஆனால், இது கசப்புத்தன்மை நிறைந்தது என்பதால், உலர்ந்த சுண்டைக்காய்களைப் பிளந்து, உப்பு சேர்த்து தயிரில் கலந்து வெயிலில் காய வைத்து, நன்றாக காயவைத்து, அதற்கு பிறகு வற்றலாக பயன்படுத்துவார்கள். இந்த சுண்டை வற்றலை பொடி செய்து மோரில் கலந்தும் சாப்பிடலாம்.
இந்த சுண்டைக்காயில் துவையல் செய்து சாப்பிடலாம்.. ஒரு வாணலியை எண்ணை ஊற்றி, காய்ந்த மிளகாய், உளுந்துப்பருப்பு வெங்காயம், பூண்டு, சிறிது புளி, கல் உப்பு போட்டு வதக்கி, அதிலேயே சுண்டைக்காயையும், சிறிது தேங்காயையும் சேர்த்து வதக்கி மொத்தமாக ஆறவிட்டு, மிக்சியில் அரைத்து எடுக்கவும்.. பிறகு, அதே வாணலில், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கொட்டினால், சுண்டை துவையல் ரெடி.
சுண்டைக்காய் சூப்: அல்லது சுண்டைக்காயில் சூப் செய்யலாம். குக்கரில், 2 டீஸ்பூன் நெய் விட்டு, பிரிஞ்சி இலை, சோம்பு, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, விதை நீக்கிய சுண்டைக்காய், என ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.. பிறகு 2 கப் தண்ணீர் சேர்த்து, அதனுடன் சிறிது பாசிப்பருப்பையும், கல் உப்பையும் சேர்த்து 4 விசில் வரும்வரை வேகவைத்து எடுக்க வேண்டும். இப்போது குக்கரில் உள்ள பொருட்கள் அனைத்தையும், பருப்பு போல கடைந்து கொண்டு, கொத்தமல்லி தூவினால், சூப் ரெடி.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications