கண் அசைத்த டிரம்ப்.. ஒரே இரவில் ஈரானை சுற்றி நடந்த மாற்றம்.. 4 மாதங்களுக்கு பிறகு நிம்மதி!
தெஹ்ரான்: ஈரான் நாட்டின் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்கா விதித்திருந்த கடல்வழித் முற்றுகை தற்போது அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தம் போடப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது கடல் முற்றுகையை விலக்கிக் கொண்டுள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பல மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது அனைவருக்கும் தெரியும். நேரடி தாக்குதல்கள் இல்லாத போதிலும், அமெரிக்கா மறைமுகமாகப் பல வழிகளில் ஈரானுக்கு அழுத்தம் கொடுத்தது. அதில் ஒன்று தான் ஹார்முஸை முற்றுகையிடுவது. அமெரிக்கப் படைகள் ஹார்முஸை சுற்றி முற்றுகையிட்டு நின்றது.

சீராகும் நிலைமை
அதாவது எந்தவொரு கப்பலும் ஈரானுக்குச் செல்ல முடியாதபடி முடக்கியது. கச்சா எண்ணெய் ஏற்றுமதியையே ஈரான் நம்பி இருக்கும் சூழலில், அதை முடக்கும் வகையில் அமெரிக்கா இந்த கடல் முற்றுகையை நடத்தியது. இதனால் ஈரான் பொருளாதாரத்தை காலி செய்ய வேண்டும் என்பதே அமெரிக்காவின் இலக்காக இருந்தது. இதற்கிடையே இப்போது அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அங்கு நிலைமை சீராகி வருகிறது.
அமெரிக்க படைகள்
இந்தச் சூழலில் தான் வியாழக்கிழமை அன்று CENTCOM எனப்படும் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஈரான் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நேரடி உத்தரவின்படி, ஈரானிய கடல் பகுதிகளில் அமெரிக்கப் படைகள் மேற்கொண்டு வந்த கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களாகக் கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. இந்தப் பதற்றத்தைத் தணிக்கவும், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தவும் அதிபர் ட்ரம்ப் ஒரு இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த நாளே, அதன் முதல் கட்டமாக இந்த கடல்வழித் தடை நீக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் அமைதியைக் கொண்டு வருவதற்கான ஒரு வழியாக இந்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் பார்க்கிறது.
இனி தடுக்காது
அதன்படி இனிமேல் ஈரான் துறைமுகங்களுக்குச் செல்லும் வணிகக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் இனி மறிக்காது. சர்வதேச கடல் வழித்தடங்களில் பயணம் செய்யும் வணிக நிறுவனங்களுக்கு இது பெரிய நிம்மதியை அளித்துள்ளது. கப்பல் போக்குவரத்துத் தடங்கல்கள் நீங்குவதால் வர்த்தகம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடையை அமல்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட அமெரிக்கக் கடற்படை நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம் அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கு கடல் பிராந்தியத்தில் இருந்து முழுமையாக வெளியேறுகிறதா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. தடை நீக்கப்பட்டாலும், அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் அந்தப் பகுதியிலேயே தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுடனான புதிய ஒப்பந்தத்தின் விதிகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை இந்த அமெரிக்க படைகள் அங்கிருந்தபடி கண்காணிக்குமாம். இதையும் CENTCOM தெளிவுபடுத்தியுள்ளது.
முக்கிய திருப்பம்
இந்த முடிவு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உறவில் ஒரு முக்கியமான திருப்பமாக கருதப்படுகிறது. போர் பதற்றத்தைக் குறைத்து, பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா எடுத்துள்ள முதல் ராணுவ நடவடிக்கை இதுவாகும். அதிபர் ட்ரம்ப்பின் அமைதி முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான கடல்வழி முற்றுகையை அமெரிக்கா விலக்கிக்கொண்டுள்ளது. இது அந்தப் பகுதியில் வணிகக் கப்பல்கள் அச்சமின்றிப் பயணிக்க வழிவகை செய்யும், அதே வேளையில் அமெரிக்கா தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடும்.












Click it and Unblock the Notifications