மணமக்களுடன் முதலிரவில் தாய்! கூடாரத்தில் இளசுகள்.. உலகை அதிர வைக்கும் பழக்கம்! எங்கு தெரியுமா?
சென்னை: உலகம் முழுக்க ஏகப்பட்ட நாடுகள், ஆயிரக்கணக்கான கலாச்சாரங்கள் இருக்கின்றன. நாம் வாழும் வாழ்க்கையை தாண்டி வெளியே போய் பார்த்தால், சில ஊர்களின் பழக்கவழக்கங்கள் நம்மை அப்படியே வாயடைக்க வைத்து விடுகின்றன.. இன்னும் சில சடங்குகள் பற்றி கேள்விப்பட்டால், இப்படியும் எங்காச்சும் நடக்குமா? இப்படியொரு பழக்கமா? என்று நெளிய வைத்துவிடுகிறது.. அப்படியான செய்திதான் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.
முதலில் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு பழங்குடி கிராமத்தில் உள்ள அந்த பழக்கத்தை பற்றிப் பார்ப்போம். இங்கு திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குச் செல்லும் மணமக்களுடன், மணமகளின் தாயாரும் அதாவது மாமியாரும் படுக்கையறைக்குள் சென்று விடுவார்களாம்.

மாமியாருக்கு என்ன வேலை?
சாதாரணமாக முதலிரவு அறைக்குள் தம்பதியரை தவிர யாருக்கும் அனுமதியிருக்காது. ஆனால், இந்த மக்கள் மத்தியில் அது ஒரு முக்கிய சடங்காகவே நடக்கிறது.
புதிதாக வாழ்க்கையைத் தொடங்கும்போது சம்மதிக்காத அல்லது தயங்கும் பெண்ணை தேற்றுவதற்கும், எப்படி ஒருவரையொருவர் அன்புடனும் அரவணைப்புடனும் நடத்த வேண்டும் என்று கற்றுக்கொடுக்கவே தாய் உள்ளே செல்கிறாராம். மகளுக்கு தேவையான தாம்பத்திய பாடங்களை நேரில் சொல்லிக்கொடுத்து, அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடங்குகிறார்களா என்பதை அந்த தாய் உறுதி செய்கிறார்.
ஒருவேளை பெண்ணின் தாய் இல்லாவிட்டால், அந்த குடும்பத்தைச் சேர்ந்த வயதான மூத்த பெண்மணி இந்த பொறுப்பை ஏற்று அறைக்குள் செல்வாராம்.
பழங்குடி சமூகத்தின் விசித்திர வழக்கம்
இதேபோல் நமீபியாவில் வாழும் "ஹிம்பா" என்ற பழங்குடியின மக்களிடம் ஒரு விசித்திர பழக்கம் உள்ளது.. இதற்கு அங்குள்ள மொழியில் "ஒகுஜெபிசா ஒமுகாசெண்டு" (okujepisa omukazendu) அதாவது மனைவியை பகிர்தல் என்று சொல்கிறார்கள்.
தங்களது பகுதிக்கு வரும் விருந்தினர்கள் அல்லது சுற்றுலாப் பயணிகளுக்கு, கணவன்மார்கள் தங்களது மனைவிகளைத் தற்காலிகமாக பகிர்தல் நடைமுறை சமூக வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறதாம்.. ஆனால், எல்லா ஹிம்பா மக்களும் இதைப் பின்பற்றுகிறார்கள் என்று சொல்ல முடியாது.
பணம் கொடுத்தால் போதும்
இந்த லிஸ்ட்டில் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியில் இருக்கும் "புன்காக்" என்ற மலைப்பிரதேசத்தில் நடக்கும் விஷயம் இதற்கு மேல் விசித்திரத்தை ஏற்படுத்துகிறது.. இது பாரம்பரிய பழங்குடி திருமணச் சடங்கு என்பதை விட, சுற்றுலா தொழிலுடன் தொடர்புடைய நடைமுறையாக, அதாவது ஒரு "ஒப்பந்த திருமணம்" என்றே சொல்கிறார்கள். .
இங்கு ஏகப்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அப்படி வரும் ஆண்களை, அங்கிருக்கும் உள்ளூர் பெண்கள் தற்காலிகமாகத் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அதன் பிறகு அவர்களுடன் குடும்பம் நடத்துகிறார்கள். அந்த ஆண் அந்த இடத்தை விட்டு கிளம்பும்போது, அந்த பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பணமாக கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவாராம். அத்துடன் அந்த திருமணமும் முடிவுக்கு வந்துவிடும்.. பிறகு வேறு ஒரு நபர் வருவார், அவருக்கும் இதேபோல் ஒப்பந்த திருமணம், தாம்பத்தியம், செட்டில்மென்ட், பிரிவு என இந்த நடைமுறை அங்கு நடக்கிறது.
இந்தியாவில் இப்படியொரு கூடாரமா?
ஆப்பிரிக்காவையும் இந்தோனேசியாவையும் விட நம்முடைய இந்தியாவிலேயே இப்படி அதிர வைக்கும் சடங்கு காலம் காலமாக பேசப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதியில் வாழும் "முரியா" என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் "கோத்துல்" என்ற சமூகம் உள்ளது.
இந்த சமூகத்தில் பருவ வயதை எட்டும் சிறுவர் மற்றும் சிறுமிகள் ஒன்றாக தங்குவதற்கெனவே கிராமத்தின் நடுவே "கோத்துல்" என்ற தனி மண் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தங்கும் சிறுவர்களை "செலிக்" என்றும், சிறுமிகளை "மோடியாரி" என்றும் அழைக்கிறார்கள்.
பிடித்த துணையை தேர்ந்தெடுக்கலாம்
இந்த குடிலுக்குள் இளைஞர்கள் தங்களுக்குள் பழகவும், பாலியல் ரீதியான புரிதல்களை ஏற்படுத்திக் கொள்ளவும் முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது.
அங்கு தங்களுக்குப் பிடித்த துணையை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒருவரை பிடிக்காவிட்டால் இன்னொரு துணையை மாற்றிக் கொள்ளவும் அங்கு தடை இல்லை. சில இடங்களில் ஒரே நபருடன் தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் தங்கக் கூடாது என்ற விசித்திரமான கட்டுப்பாடும் இருக்கிறது. அவர்கள் காதலில் விழுந்து பொறாமை வந்துவிடக் கூடாது என்பதற்காக துணையை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டுமாம்
ஆனால் மேற்கண்ட இந்த சடங்குகளில் காலப்போக்கில் பல மாற்றங்கள் வந்துவிட்டன. சில குறிப்பிட்ட சமூகங்கள் மட்டுமே தங்களின் அடையாளமாக இவற்றில் சிலவற்றைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது...!!














Click it and Unblock the Notifications