அதிசயம்.. தொப்புளில் ஒரே ஒரு சொட்டு எண்ணெய்யை விட்டு படுங்களேன்.. வாரிவழங்கும் நன்மைகள்.. அடேங்கப்பா
சென்னை: இரவில் தொப்புளில் தினமும் ஒரு சொட்டு எண்ணெய் வைப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா?
அந்த காலம் முதலே தூங்குவதற்கு முன்பு, நம்முடைய வயிற்றில், தொப்புள் பகுதியில் எண்ணெயை தடவிக் கொண்டு தூங்குவது என்பது ஒரு வழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது.. இதனால், நமது உடலுக்கும் பலவித நன்மைகளும் கிடைத்திருக்கின்றன. இதை நவீன மருத்துவமும் நிரூபித்துள்ளது.
நம்முடைய உடலில் ஒட்டுமொத்த நரம்புகளின் மையப்புள்ளியே, இந்த தொப்புளில்தான் அமைந்துள்ளது.. குறைந்தபட்சம் எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்திருக்கிறது.

தொப்புள்: ஆனால், இந்த தொப்புளை, பெண்களிடம் கவர்ச்சி அம்சமாகவே காலங்காலமாக பார்க்கப்பட்டு வருவது வேதனைக்குரியது.. அதனால்தான், இத்தகைய தொப்புளின் மகிமையையும், பயன்களையும் பெரும்பாலானஆண்கள், உணராமலேயே போய்விடுறார்கள். ஒரே ஒரு துளி எண்ணெய்யை தொப்புளில் வைத்தால் போதும். ஆச்சரிய பலன்களை நீங்களே பாருங்கள்.
தொப்புளில் தினமும் எண்ணெய் விட்டுவிட்டால், கண் பார்வை தெளிவடையும்.. கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றில் வேலை பார்க்கும் பலருக்கும் கண் வறட்சி உண்டாகிறது... அவர்கள் இந்த முறையை பின்பற்றினால், கண்கள் வறட்சி, கண்பார்வை குறைப்பாடு நீங்கி குளிர்ச்சியை தரும்.
பாத வெடிப்புகள்: பாத வெடிப்புகளுக்கும், சரும பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமே உடல்சூடுதான். தொப்புளில் ஒருதுளி எண்ணையை வைத்தால், பாத வெடிப்பு குறையும்.. சருமம் பொலிவாகும்.. வறட்சி மறைகிறது.. தலைமுடி ஆரோக்கியமாக வளரும். நம் தொப்புளில் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால், நாம் விடும் எண்ணெய் தொப்புளில் உள்ள நரம்புகள் வழியாக சென்று அவற்றை வலுப்படுத்தும்... இதனால் சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
முழங்கால் மூட்டு வலிகள் இருப்போரும், தொப்புளில் எண்ணெய் விடுவதால் தீர்பு கிடைக்கும்.. அதேபோல, கால் நரம்புகளில் வலி இருந்தாலும் அவை நீங்கும்.. மூட்டு, கால் வலிகள் குணமாகும்.. உடல் நடுக்கம், சோர்வு கணைய பாதிப்புகளுக்கு அருமருந்தாகிறது.. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது.. இரவில் நல்ல தூக்கம் வரும்
தேங்காய் எண்ணெய்: தொப்புளில் எந்தெந்த எண்ணெய்யை வைக்கலாம் என்பதைகூட முன்னோர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். தூங்குவதற்கு முன் இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைக்க வேண்டும்.. பிறகு அந்த இடத்தில் லேசாக மசாஜ் செய்தால் போதும்.. இதனால், கண்வலி, சரும வறட்சி குணமாகும்.
வேப்பெண்ணெய்: தொப்புளில் வேப்பெண்ணெயை வைத்தால், சரும வியாதிகளும் நீங்கும்.. தொற்றுக்களும் அண்டாது.. நச்சுக்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியும் அதிமாகும்.. தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய்யை தடவி வந்தால், பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் வலி பறந்து விடும்.
நல்லெண்ணெய்: உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு நல்லெண்ணையை அரை ஸ்பூன் அளவு தொப்புளில் விட்டு, இடது புறமாகவும் வலது புறமாகவும் சுற்றி மசாஜ் செய்வது போல லேசாக தேய்த்தால் விரைவாக வயிற்றுவலி குறையும்.. நிவாரணம் தரும்..
கடுகு எண்ணெய்: தொப்புளில் கடுகு எண்ணையை விட்டு தேய்த்துவந்தால் நரம்பு தளர்ச்சி சரியாகும். உடல் நடுக்கம் குறையும். உடல் வறட்சியினால் ஏற்படும் உதடு வெடிப்பு சரியாகும். சருமம் வறட்சியில் இருந்து விடுபடும். முழங்கால் வலியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில்: இந்த 2 எண்ணையின் ஏதாவது ஒன்றை தொப்புளில் விட்டு தேய்த்துவர ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும் என்கிறார்கள்.. அதிலும், கருச்சிதைவு இருக்கும் பெண்கள் தினம்தோறும் ஆலிவ் எண்ணையை தொப்புளை சுற்றி தடவிக்கொண்டு படுப்பது மிகவும் நல்லது. அதேபோல, பாதாம் எண்ணெய்யை தினமும் இரவில் தொப்புளில் வைத்து மசாஜ் செய்தால், 10 நாட்களில் முகம் மற்றும் சருமம் பளபளக்கும். முகம் இளமையாக மாறும், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.












Click it and Unblock the Notifications