"மீனு முள்ளு".. உங்க தொண்டையில சிக்கிக்கிட்டா பதறாதீங்க. உடனே இதை செய்யுங்க.. கூல் ஹெல்த் டிப்ஸ்
சென்னை: மீன் முள் தொண்டையில் சிக்கிவிட்டால், அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதோ இந்த இயற்கை வழிமுறையை கையாண்டாலே போதும்.
மீன் சாப்பிடும் போது சிலருக்கு தொண்டையில் மீன் முள் சிக்கிக்கொள்ளும். பெரியவர்களும், சிறியவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
அப்படி மீன் முள் சிக்கிகொண்டால், அதை உடனடியாக அகற்ற வேண்டும்.. இல்லாவிட்டால், உணவுக் குழாயை கிழித்துவிடும் அபாயமும ஏற்படும்.

அறிகுறிகள்: மீன்முள் தொண்டையில் சிக்கிவிட்டால், கழுத்தில் சுருக்கென்று வலி ஏற்படும்.. உணவை இயல்பாக விழுங்க முடியாது.. ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டு இருக்கும். இருமல் வரும்.. இருமலில் ரத்தம் வரும்.. தொண்டையில் அரிப்பு, வலி ஏற்படும்.. தண்ணீர் குடிப்பதிலும் சிரமம் ஏற்படும்.. கழுத்தின் அடிப்பகுதியில் தடித்துவிடும்
எப்படி வெளியேற்றுவது: சிறிய அளவிலான மீன் முள் மாட்டிக்கொண்டால் ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது உப்பு போட்டு குடித்தாலே போதும்.. மீன் முள்ளை எடுக்க வாழைப்பழத்தை உபயோகிக்கலாம்.. ஒரு பெரிய துண்டு வாழைப்பழத்தை கடித்து, தொண்டையிலேயே சிறிது நேரம் வைத்திருந்தால் போதும்.. வாழைப்பழம் அப்படியே வாயில் சுரக்கும் உமிழ்நீருடன் தொண்டையில் மாட்டிக் கொண்ட மீன் முள்ளையும் சேர்த்து வயிற்றுக்கு தள்ளி விடும்...
சுடுசாதம்: சுடுசாதமும் பயன்படுத்தலாம். மீன் முள் தொண்டையில் மாட்டிக் கொண்டால் சாதத்தை உருட்டி முழுங்க வேண்டும்.. அப்போது சாதத்துடன், மீன் முள்ளும் சேர்ந்து வயிற்றுக்குள் சென்றுவிடும். அதேபோல, ஆலிவ் ஆயிலையும் உபயோகிக்கலாம். இது வழவழப்பு தன்மை கொண்டதால், முள்ளை எடுக்க உதவி செய்கிறது. 1-2 ஸ்பூன் ஆலிவ் ஆயிலை விழுங்கினால் போதும்.
அல்லது பிரட் துண்டை உபயோகிக்கலாம்.. ஒரு பெரிய பிரட் துண்டை எடுத்து, தண்ணீரில் அதை முக்கி வேகமாக முழுங்க வேண்டும்.. முள் வயிற்றுக்குள் சென்றுவிடும்.. அல்லது 2 ஸ்பூன் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து 1 ஸ்பூன் மட்டும் எடுத்து குடித்தால் போதும். சோடா குடிப்பது வயிற்றில் உள்ள மீன் முள்ளைக் கரைக்கும்.
உணவுக்குழாய்: ஆனால், மீன் முள் தொண்டையில் இருக்கும்போது, அதிகப்படியாக இருமக்கூடாது.. இது முள்ளை உணவுக்குழாய்க்குள் தள்ளி பிறகு எடுக்க முடியாமல் ஆக்கி விடும்.
அதே மாதிரி மீன் முள்ளை எடுக்க, கம்பியோ அல்லது ஸ்பூன் போன்ற பொருட்களையோ பயன்படுத்தக்கூடாது.. தொண்டையை அழுத்தி பிடிப்பது, அழுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.. இவ்வளவு செய்தும், தொண்டையில் முள் எடுக்க முடியாமல் போனால், அல்லது தொண்டைக்குள்ளேயே முள் இருப்பது தெளிவாகி விட்டால் உடனே டாக்டரை அணுக வேண்டும்.. அதிகப்படியான இரத்த போக்கு, தொண்டையில் கடுமையான வலி, அடைப்பு காயங்கள் இருந்தாலும் உடனே டாக்டரை அணுக வேண்டும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications