வல்லாரை கீரை வல்லமை.. ஞாபக சக்தி மட்டுமில்லீங்க.. "அந்த" குறையையும் தீர்க்கும் வல்லாரை இலை.. அற்புதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீரை என்றாலே ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியது.. அதிலும் இந்த வல்லாரையை சொல்லவே வேண்டாம்.. ஊட்டச்சத்துக்களை நிரம்பி வைத்திருக்கும் அற்புத கீரையாகும்.

இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்துகள், தாது உப்புக்களை கொண்டது வல்லாரை கீரை.. மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கும், ஊட்டத்துக்கும் உதவுவது இந்த கீரையாகும்..

Health benefits about Vallarai Keerai and Do you know Vallarai Leaves is the Best Medicine for Children

இதய இலைகள்: மனித மூளை நன்கு செயல்பட தேவையான அனைத்து சத்துக்களும் இந்த வல்லாரையில் உள்ளது.. நீண்ட காம்பும், வெட்டுப்பற்களும், இதய வடிவில் இலைகளும் இந்த கீரையின் தோற்றமாகும்.. ரத்தசோகை உள்ளவர்களுக்கு அருமருந்து உணவாக திகழ்கிறது. மனச்சோர்வை தீர்க்கிறது.

ரத்தத்தையும் சுத்திகரிக்கிறது.. சருமத்துக்கு ஆரோக்கியத்தையும், பொலிவையும் தரக்கூடியது.. உடலில் நமைச்சல், எரிச்சல், புண்கள் போன்றவைகளை குணப்படுத்தக்கூடியது இந்த கீரை.. பற்கள் சம்பந்தமான நோய்களை தீர்த்து, பல் ஈறுகளுக்கு வலு தரக்கூடியது.. இந்த வல்லாரை கீரை பவுடரில், பல் துலக்கினால், பற்களின் கறைகள் நீங்கும்..

பல்பொடி: இந்த பொடியை நாமும் வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம்.. இந்த கீரையை நிழலில் உலர்த்தி, அதையே பொடியாக்கி வைத்துக் கொண்டால், பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

இந்த இலையை வெறுமனே வாயில் போட்டு மென்று தின்றாலே, குடல் புண்களும், வாய்ப்புண்களும் நீங்கிவிடும்.. அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது.. அதேபோல, வயிற்றில் பூச்சிகள் இருந்தாலும், வல்லாரை பொடியை தூங்கும்முன்பு சாப்பிட்டுவிட்டு படுத்தால், நிவாரணம் கிடைக்கும். உடல் எரிச்சலையும் தணிக்கக்கூடியது இந்த கீரை..

யானைக்கால்: தொடர்ந்து வல்லாரை சாப்பிட்டு வந்தால், மாலைக்கண் நோய் பிரச்சனையே எட்டிப்பார்க்காது.. கண் பார்வை திறனும் கூர்மைப்படும்.. யானைக்கால் நோய் உள்ளவர்களுக்கும், கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினை உள்ளவர்களுக்கம் சிறந்த தேர்வு வல்லாரை கீரையேதான்.. பிரசவம் முடிந்த பெண்களுக்கு இந்த கீரையின் சாற்றை தந்தால், பலவீமான உடலும் பலம்பெற்றுவிடும்..

இந்த வல்லாரையை, பலவகைகளில் நாம் உணவாக பயன்படுத்தலாம்.. இந்த கீரையுடன் மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து, விழுதாக அரைத்து, மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி எடுத்து வைத்து கொண்டால், காய்ச்சல் சமயங்களில் சாப்பிடலாம்.. இதனால் காய்ச்சல் விரைவில் நீங்கும்... மாதவிடாய் நேரங்களில் இந்த கீரையின் சாற்றுடன் வெந்தயத்தை கலந்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்..

துவையல்: அதேபோல, வல்லாரையை துவையல் செய்யலாம்.. வல்லாரை இலைகளை அரைத்து, தோசை மாவில் கலந்து, தோசை வார்த்து வார்க்கலாம். வல்லாரையில் சட்னி செய்து சாப்பிடலாம்.. வல்லாரையில் தொக்கு செய்யலாம்.. வல்லாரை கீரையில் சப்பாத்தி செய்யலாம்.. பூரி செய்யலாம்.. இந்த கீரையில் சூப் செய்யலாம். சாலட் செய்து சாப்பிடலாம்..

சூப்பர் சாலட்: ஒரு பாத்திரத்தில், வல்லாரையை பொடியாக நறுக்கி போட்டு, அதில், பச்சை மிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். 2 மணி நேரம் கழித்து, சிறிது எலுமிச்சம் பழச்சாறு, கொத்தமல்லி தூவினால், சாலட் ரெடி.. துவையல் செய்யும்போது, தேங்காய் துண்டுகளை சேர்த்து அரைத்தால், கூடுதல் சுவையாக இருக்கும். அல்லது வேர்க்கடலையை சேர்த்து அரைத்தால் இன்னும் சத்தாக இருக்கும்.

இத்துணை வல்லமை நிறைந்ததால்தான், இதற்கு வல்லாரை என்றே பெயர் பெற்றது. அந்தவகையில், வாரம் 2 முறையாவது இந்த கீரையை சாப்பிட்டால் நிறைய ஆரோக்கியம் தழைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+