மீன் எண்ணெய் மாத்திரை.. மருத்துவ பயன் தரும் மீன் மாத்திரை.. நீரிழிவு நோயாளி, கர்ப்பிணி சாப்பிடலாமா?
சென்னை: மீன் எண்ணெய் மாத்திரையின் பயன்கள் என்னென்ன? ஆஸ்துமா நோயாளிகள், கர்ப்பிணிகள் இந்த மீன் மாத்திரையை சாப்பிடலாமா? உடல் பருமன் உள்ளவர்கள், இந்த மீன் எண்ணெய்யை சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? சுருக்கமாக பார்ப்போம்.
கடல் மீன்கள் என்றாலே உடல் ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அதிலும் மீன்கள், மனிதர்களின் ஆரோக்கியத்தை கூட்டுபவை.. குறிப்பாக இதயம் சிறப்பாக செயல்பட துணைபுரிவது கடல் மீன்கள்தான்..

திமிங்கிலம்: அந்தவகையில், மீன்களை நேரடியாக சாப்பிட முடியாதவர்கள் அல்லது மீன் சாப்பிட்டால் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள், மீன் எண்ணெய் மாத்திரைகளை சாப்பிடுவார்கள்... ஒமேகா 3 நிறைந்திருக்கும் திமிங்கிலம், சால்மன், மத்தி போன்ற மீன் வகைகளில் இருந்து இந்த மாத்திரை தயார் செய்யப்படுகின்றன.
மீன் எண்ணெய் மாத்திரைகளை சாப்பிடும்போது, நரம்பு பாதிப்புகளையும் நீக்குகிறது.. சருமத்தை பொலிவாக்குகிறது. கண்பார்வை குறைபாடுகளை போக்குகிறது. வயிற்றிலுள்ள புண்களை ஆற்றுகின்றன. மூளையின் செயல்பாட்டுத் திறன் அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்கிறது.
ஆண்மை அதிகரிப்பு: ஆண்மை அதிகரித்து குழந்தை பேறு உண்டாக செய்கிறது. மூட்டுகளில் வலி, முழங்கால் வலி, முடக்குவாதம் தொந்தரவுகளை தடுக்கிறது. குழந்தைகளுக்கு எலும்புகள் சம்பந்தமாக ஏற்படும் நோயான ரிக்கெட்ஸ் நோயை போக்குகிறது. புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது.
இத்தனை நன்மைகளை தந்தாலும், மீன் எண்ணெய்யின் பிரதான நன்மை, இதயத்தை காக்கிறது.. இதயம் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு, மீன் மாத்திரைகளை டாக்டர்களே பரிந்துரைப்பார்கள்.. இதனால் மாரடைப்பு அபாயம் குறைந்து, ரத்தத்தில் ட்ரைகிளிசரைடு அளவும் கட்டுக்குள் வருகிறது.. இதற்கு காரணம், மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது.. அதுவும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காது..
சுவாச கோளாறு: அதுமட்டுமல்ல, ரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே மீன் எண்ணெய் சாப்பிடும்போது, இதிலிருக்கும் ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும். அதேபோல, சுவாச கோளாறுகளை போக்குகிறது.. அதிலும், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெய்யை சாப்பிட்டால், விரைந்து தீர்வு கிடைக்குமாம்.
மன அழுத்தத்தை போக்கி, சுறுசுறுப்பை தருவதற்கு மீன் எண்ணெய் மாத்திரைகள் சிறந்தது. இதற்கு காரணம், EPA என்ற நோய் எதிர்ப்புப் பொருள், மனித மூளையை சுறுசுறுப்பாக இருக்க செய்வதுடன், மன அழுத்தம் நெருங்காமலும் பார்த்து கொள்கிறது.. கர்ப்பிணி பெண்கள் இந்த மீன் மாத்திரையை சாப்பிட்டால், வயிற்றிலுள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் கூர்மையாக இருக்குமாம்.
அளவுகோல்: எனினும், அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருபவர்கள் மீன் எண்ணெய் மாத்திரை எடுத்து கொள்ளக்கூடாது.. குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களும், நீரிழிவு நோயாளிகளும் தவிர்க்கலாம்.. எனவே, உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள், ஒருநாளில் ஒன்றரை டீஸ்பூன் மட்டுமே இந்த எண்ணெய்யை சாப்பிடலாம்.. அதுவும் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
மீன் எண்ணெய் என்பது மீன் திசுக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கொழுப்பு அல்லது எண்ணெய் ஆகும். உலக சுகாதார அமைப்பு (WHO) வாரத்திற்கு 1-2 முறை மீன் சாப்பிட பரிந்துரைத்துள்ளது.. காரணம், மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பல நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன... டுனா, டிரவுட், சால்மன், காட் போன்ற மீன்களிலிருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெயில் இவை குறைவாகவே உள்ளன.. ஆனால், எந்தவகை மீனிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறதோ அதைப் பொறுத்தே அதில் உள்ள சத்துகளின் அளவு அமையும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications