ஆட்டுக்கறி செய்றீங்களா? மட்டன் வாங்கினால் இதை கேட்டு வாங்குங்க.. ஆட்டு சுத்து கொழுப்பு நல்லதா? அடடா
சென்னை: கொலஸ்ட்ரால் என்பது என்ன? மட்டன் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கூடுமா? யாரெல்லாம் மட்டன் சாப்பிடலாம்? ஆட்டின் கொழுப்பு அனைவருக்கும் நல்லதா? அதிலுள்ள சத்துக்கள் என்னென்ன? இவைகளை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
கொலஸ்ட்ரால் என்பது கல்லீரல் உற்பத்தியாகக்கூடிய ரசாயனமாகும்.. இது நம்முடைய உடலுக்கு தினமும் சுமார் 2000 மில்லி கிராம் தேவைப்படுகிறது... அதேபோல, வயிறு, தொடை, பின்பகுதிகளில் கிலோ கணக்கில் இந்த கொழுப்புகள் தேங்கி கிடக்கும். பெரும்பாலானோருக்கு உடல் எடை அதிகரிக்க காரணமே இந்த கொழுப்புகள்தான்.

கொழுப்புகள்: அந்தவகையில், இறைச்சிகளிலும் கொழுப்புகள் உள்ளன.. அதிலும், ஆட்டுக்கறியை பொறுத்தவரை, 100 கிராம் செம்மறி ஆட்டு கறியில் 136 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. அதேபோல, வெள்ளாட்டு கறியில் வெறும் 80 கிராம் அளவிற்கு மட்டுமே கொலஸ்ட்ரால் உள்ளது. எனவே, மனிதனுக்கு தினமும் சராசரியாக 2000 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் தேவை என்பதால், தினமும் கால் கிலோ அளவிற்கு செம்மறி ஆட்டுக்கறி சாப்பிட்டாலும், அதிகபட்சம் 300 கிராம் கொலஸ்ட்ரால் மட்டுமே உடலுக்கு கிடைக்குமாம்.
அதேசமயம், எல்டிஎல் (கெட்ட கொழுப்பு) ஜீரணிக்க முடியாத அளவிற்கு என்சைம் குறைப்பாடு உள்ளவர்கள், ஆட்டிறைச்சி போன்ற நிறை கொழுப்புகள் அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் டாக்டர்கள்.
அதற்காக ஆட்டுக்கறியை முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை.. ஆட்டுக்கறியை குறிப்பிட்ட அளவில் சாப்பிடுவது, ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது... மூளை செல்கள் வளர்ச்சியை கூட்டுகிறது.. ஆட்டு எலும்புகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால், எலும்பு அடர்த்தி மற்றும் மூட்டுகள் தொடர்பான சிக்கல்களை தடுக்கலாம்...
கூந்தல், சருமம்: ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், வைட்டமின் B அதிகமுள்ளதால், உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதிலும் ஆட்டுக்கறி உதவுகிறது. மட்டனிலுள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின் B12 போன்றவை சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஆட்டுக்கறி நன்மை தரக்கூடியது..
ஆட்டின் கொழுப்புகளை பொறுத்தவரை, இடுப்புப் பாகத்திற்கு நல்ல வலுவை தரக்கூடியது.. உடலுக்கு வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை தருகிறது.. நம்முடைய நுரையீரல் மற்றும் இடுப்பு பகுதிக்கு நல்ல வலிமையை கூட்டுகிறது. மட்டன் வாங்கும்போது, இனி கொழுப்புகளையும் கூடுதலாக கேட்டு வாங்கலாம். ஆனால், குறைந்த அளவில் சாப்பிட வேண்டும்.
ஆட்டு குடல்: அதேபோல, ஆட்டு குடலில், அதிக அளவு கொழுப்பு உள்ளjh;y. LDL (கெட்ட) கொழுப்பின் அளவை அதிகரிக்கக்கூடும்.. இது ரத்த அழுத்தம் மற்றும் ரத்த உறைதலின் அபாயத்தை அதிகரிக்க செய்துவிடும்.
ஆட்டின் தலை, இதயம் சார்ந்த வலிகளையும், கோளாறுகளையும் நீக்குவதுடன், குடலை வலிமையாக்க உதவும்... தலை பகுதி எலும்பினை வலுப்படுத்தும்.. ஆட்டுக்கால்கள், உடலிலுள்ள எலும்புக்களுக்கு பலத்தையும், ஆற்றலையும் தரக்கூடியது.. ஆட்டின் கண்களை சமைத்து சாப்பிடும்போது, கண்களுக்கு மிகுந்த வலிமையையும், தெளிவான பார்வையையும் கொடுக்கும்.
நுரையீரல்: ஆட்டின் நுரையீரல் உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை உண்டாக்கும். ஆட்டின் நாக்கு பகுதி, உடல் உஷ்ணத்தை தணித்து, சருமத்துக்கு வலிமையை தரக்கூடியது. ஆட்டின் மூளை. தாது விருத்தியை உண்டாக்குகிறது.. குளிர்ச்சியை தந்து, நினைவாற்றல் அதிகரிக்க செய்கிறது.. ஆட்டின் நெஞ்சு பகுதி, கபத்தை நீக்கி, மார்புக்கு வலிமையை தருகிறது.. மார்பு பாகத்தில் புண் இருந்தாலும் குணப்படுத்திவிடும்.
இதய நோயாளிகள், அதிக உடல் பருமன் உள்ளவர்கள், ஆட்டுக்கறியை தவிர்க்கலாம். மற்றபடி உடலுழைப்பு மிக்கவர்கள் வாரம் ஒருமுறையாவது ஆட்டுக்கறியை "குறைந்த " அளவு சாப்பிடலாம்..!!
ஆட்டிறைச்சியை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நம்முடைய உடல் உறுப்புகள் பலம் பெறும்.. ஆட்டுக்குடலை பொறுத்தவரை, செரிமானம் சார்ந்த எந்தவொரு பிரச்சினை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. முக்கியமாக அல்சர் என்று சொல்லக்கூடிய வயிற்று புண்களை குணமாக்கும் மற்றும் செரிமான உறுப்புகளை வந்து வலுவாக்கி சீராக இயங்குவதற்கும் உதவிசெய்யக்கூடியது ஆட்டு குடல்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications